தேதி: June 5, 2013
பெரிய டிஷ்யூ ட்யூப் - ஒன்று
சிறிய டிஷ்யூ ட்யூப் - மூன்று
கத்தரிக்கோல்
கார்ட் ஸ்டாக் பேப்பர் - மஞ்சள் நிறம்
டிசைனர் பேப்பர்
க்ளூ
சிறிய அட்டை
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.

ட்யூபின் உள்பக்கம் மஞ்சள் பேப்பரையும், வெளிப்பக்கம் டிசைனர் பேப்பரையும் ஒட்டவும். (பேப்பர் ஒட்டும் போது ட்யூபின் ஒரு பக்கத்தை வெட்டிவிட்டு ஒட்டலாம்).

பெரிய அளவு ட்யூபை நடுவில் வைத்து அதைச் சுற்றிலும் சிறிய ட்யூப்களை வைத்து ஒட்டிக் கொள்ளவும்.

அதன் அடிபாகத்தின் அளவைவிட ஒரு அங்குலம் அதிகமாக அட்டையில் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டிய அட்டையில் மஞ்சள் நிற பேப்பரை ஒட்டி, ஓரங்களில் டிசைனர் பேப்பரை ஒட்டிவிடவும்.

அடிபாகத்திற்கு தயார் செய்துள்ள அட்டையின் மேல் ட்யூப்களை வைத்து ஒட்டவும்.

எளிமையாக செய்யக்கூடிய பென், பென்சில் ஹோல்டர் தயார். நடுவில் பூங்கொத்து வைத்துக் கொள்ளலாம்.

இதேபோல் கார்டூன் கேரக்டர்ஸ் ஒட்டி குழந்தைகளுக்கான க்ரயான்ஸ் ஹோல்டராகவும் பயன்படுத்தலாம்.

Comments
டிஷ்யூ ட்யூப் ஹோல்டர்
ரொம்ப அழகா இருக்கு. தூக்கிப் போடற பொருட்களில் இருந்து உபயோகமான பொருள். விரைவில் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கலா!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கலா
சூப்பர்,நல்ல ஐடியா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கலா மேடம்,
டிஷ்யூ ட்யூப் ஹோல்டர் ரொம்ப அருமையா இருக்குங்க, வாழ்த்துக்கள்ங் :-)
நட்புடன்
குணா
கலா அக்கா
ரொம்ப அருமையா இருக்கு... வாழ்த்துக்கள்....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
கலை
ரொம்ப ரொம்ப அழகு. கடைசி படத்தில் உள்ல ரோஜாவும் அந்த ஹோல்டரும் சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
டிஷ்யூ ட்யூப் ஹோல்டர்
மாட்சிங்கா பூக்கள் எல்லாம் வைச்சு அழகா இருக்கு கலா.
- இமா க்றிஸ்
டிஸ்யூ ரோல்
குறிப்பை வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் :)
Kalai
நன்றி
கவி,முசி,குணா,ஃபரிதா,இமா ஆன்ட்டி,வனிக்காஎல்லாருக்கும் நன்றி :)
Kalai