பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

அன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்?

வாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன? மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம்? இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி? அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனைத்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
சமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.

3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)

உடல் நலமில்லாவிட்டாலும் பட்டிக்கு வந்த அருளுக்கு மிக்க நன்றி. சீதாம்மா நீங்களெல்லாம் வந்து வாதிட்டுA என்னை ஊக்கப்படுத்துறீங்க. இத்தனைக்கும் உறுதுணையா இருந்த வனிக்கு மிகவும் நன்றி.இப்போ மணி 11.50 இரவு. நாளை முதல் பதில்களை பதிவிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

உங்களின் உடல் நலமின்மை இப்போதுதான் தெரிந்தது.இப்போ ஓரளவாவது சரியாகியிருக்கும்னு நினைக்கிறேன்.சீக்கிரம் முழுமையாக சீரடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்....

இதுவரை என்னால் பட்டியில் கலந்துக்க முடியலை.ஆனால் இப்போ பதிவிடுறேன் மாணவர்களின் இந்த மனப்போக்கிற்கு காரம் சமூகச் சூழலே........
காரணம் என்னன்னு யோசிச்சா நிறைய இருக்கு நடுவரே,
* முதலில் நம் வீட்டு சூழல் அவர்களுகு முக்கியத்துவம் இருப்பதாகத்தான் நாம் காட்டுவோம்,ஒவ்வொரு விஷயத்திலுமே இப்படிதான்.
அவர்கள் சோர்வானாலும்கூட தேற்றி சுயம் இதுதான்னு சீக்கிரம் விளங்கவைப்போம்.
* கொஞ்சம் பெரியவர்களாகி தனியே தங்கி படிக்கும் வயதில்,வீட்டு சூழல் விடுத்து சமூக சூழலுக்குள் அவர்கள் விருப்பம் இருந்தாலும் இல்லைனாலும் தள்ளப்படுகிறார்கள்.
அதில் மாணவர்களின் சேர்க்கையில் பல தடம்புரளும் நிகழ்வுகள் வருகின்றன.
மேலும் ஒருத்தனுக்கு ஒரு விஷயம் வரலைன்னாலோ,தெரியலைன்னாலோ,அதை கற்றுக்கொடுக்கவோ,தெளிவுபடுத்தவோ,நண்பர்களும், பேராசிரியர்களும் குறைவே.
மாறாக அவனை மட்டம் தட்டவும்,கேலி கிண்டல் பண்ணவும் மனதளவில் அவனை உற்சாகம் இழக்க செய்யவுமே பெரும் கூட்டம் இருக்கிறது.பாதிப்பேர் இதன் பலன் தெரியாமல் நடந்துகொள்ளலாம்.ஆனால் மீதிப்பேர் தெரிந்தும்கூட வஞ்சிக்கின்றனர்.
இவற்றால்தான் மனமுடையும் மானவன் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றார்.
ஆக மாணவர்களின் தற்கொலை முடிவுகளுக்கு காரணம் சமூக சூழல்தான் நடுவரே.
எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒரே பெண் மருத்துவத்தில் சேர்த்தனர். நல்ல அறிவும் நல் குணங்களுடன் அழகும் பெற்றவள்.
சேர்ந்த 3 மாதத்தில் அவள் தற்கொலை செய்து இறந்துவிட்டால். முந்தினம் வீடுவந்து சந்தோஷமாக சென்றவள். என்ன காரணம் நடுவரே?இதை வைத்து படம்கூட எடுத்தார்கள்,உள்ளே எவ்வளவு பிரஷர் கொடுக்கிறது இந்த சமூகம்? பெற்றோரின் தவறு என்ன தெரியுமா நடுவரே? நல்ல படிப்புக்காக வேற்றிடம் சென்று (விட்டை விட்டு) தன் பிள்ளைகளை படிக்கவைப்பது மட்டுமே.ஆனால் சூழ்ச்சிகளிலும்,ஆசைகளிலும்,கேலி,கிண்டல்,இமேஜ்,இப்படி பலவிதமான சமூகம் பின்னும் வலைகளில் மாட்டி மனாழுத்தம் அதிகமாகி இறக்கும் மாணாக்கர்களே அதிகம். ஆக மாணவர்களின் இந்த மனப்போக்கிற்கு காரணம் சமூகமே.....

* மேலும் நடுவரே, பள்ளிகளில் 5மார்க் குறைந்ததற்கும்,பின்னலிடாமல் வருவதற்கும் பிரம்படி கொடுத்தால் அந்த பிஞ்சுகள் தாங்குமா?
* ஒருசில விடுதிகள் போன்ற பள்ளிடளில் சிறார்கள் ஓனின சேர்க்கைக்கும்,பாலுறவுக்கும் வற்புறுத்தி வேண்டாத வார்த்தைகளும் அடிகளும் விழும்போது அவர்களின் முடிவு என்னவாகும்?
*லகானிட்ட குதிரைகளாக மாணவர்களை படிபடிபடி வேறு நினைவே கூடாது,ரிலேக்ஸ்ஹேசன் கூடாது,படிப்பே அனைத்தும்னு நடத்துவது சரியா?
இதுபோன்ற பலவித காரணங்களால் அழுந்தப்பட்டு தவறான முடிவுகளுக்கு தள்ளுவது சமூகமே நடுவரே.....,
முன்னய பதிவுகளை படிக்க இயலவில்லை நடுவரே,ரிப்பீட்டாகி இருந்தால் இம்பஸ்வே.....பிளீஸ் இம்பஸ்வே.....
உடல் சீக்கிரம் சரியாக வாழ்த்துக்கள்:-)

இது அருசுவையின் திருஷ்டி காலம்போல. எல்லோரும் உடல் நலக்குறைவால் வாடுகிறார்கள். ஆனாலும் வந்து வாதத்தைவைத்துள்ளீர்களே. பாராட்டுக்கள் வனிதா !

//என் மகன் இப்படி வருவான், என் மகள் இப்படி வருவாள்னு அவங்களை கருவில் சுமக்கும் போதே ஆசையை நெஞ்சில் சுமக்கிறார்கள் பெற்றோர்கள். அவங்களை பொறுத்தவரை அவங்களுக்கு எதுல ஈடுபாடு அதிகமோ அந்த துறை... அல்லது எதுல ஃபுசர் நல்லா அமோகமா இருக்கும்னு அவங்களுக்கு தோன்றுதோ அந்த துறை தான் தன் பிள்ளைக்கு சரின்னு முடிவு பண்ணிடுவாங்க//ஆஹா ஆக மொத்தம் குழந்தைகளை தம் ஆசைகளுக்கான பந்தயக்குதிரைகளாகத்தான் பெற்றோர்கள் கருதுகிறார்கள் என்று நெற்றிப்பொட்டில் அடித்துவிட்டார் வனிதா. இது எதிரணியை கலங்கவைக்கும் தாக்கு.

//இது போல் பள்ளிகளில் அட்மிஷன் கிடைப்பதே குதிரை கொம்பாம்!!! அதில் பிள்ளை படிக்கிறது என்று சொல்வதில் பெற்றோருக்கு ஒரு பெருமை.//தாம் டம்பம் அடிக்கவே அப்பள்ளியில் பிள்ளைகளை பெற்ரோர்கள் சேர்க்கின்றனர். உண்மை என்னன்னா தணியாத தீர்க்கமான குறிக்கோளோடு போராடுபவர்களுக்கே வெற்றி என்று பிள்ளைகளுக்கு புரியவைக்க மறந்து விடுகின்றனர்.

//பாரதியார் தப்பா பாடிட்டு போயிட்டார்//ஹா..ஹா அருமை. குழந்தைகளே வாழ்க்கைக்கான பந்தயத்தில் மட்டும் ஓடுங்கள். மைதானம் ஓட்டம் சூதாட்டத்திற்கானது.இப்படி பொருள் பட பாடியிருக்கணும்போல?

//சமூகம் என்ற அமைப்பில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு... நமக்கு வேண்டியதும் இருக்கு, வேண்டாததும் இருக்கு... எதை நாம் தேர்வு செய்கிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது.//அதானே நல்லபடி சாய்ஸை எடுக்காமல் சமூகத்தின் மீது குறை சொல்பவர்கள் பொறுப்பில்லாத குழப்பவாதி பெற்றோர்களே.

//அந்த பிள்ளையால் வாங்க முடியுது உன்னால் எப்படி வாங்க முடியாமல் போச்சு?? உன் கூட தானே அவனும் படிக்கிறான்?? அவனுக்கு கிடைச்ச எது உனக்கு கிடக்காம போச்சு? உனக்கு என்ன குறை வெச்சேன்? கேட்டதெல்லாம் வாங்கி தந்தேன்... நல்லா படிச்சா என்ன குறைஞ்சு போச்சு?? இப்படி பிள்ளைக்கு செய்ததை கூட சொல்லி காட்டும் பெற்றோர் உலகில் அதிகம். இது சம்பாதிக்க துப்பில்ல, தண்டச்சோருன்னு வளர்ந்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளையை திட்டுற மாதிரி. மனசை ரொம்ப பாதிக்கும்//ஓடி ஓடி உழைத்து வாங்கி வந்து கொட்டுறேன்,நல்லா சாப்பிட்டு ஒழுங்கா மார்க்குகூட எடுக்க முடியாதான்னு கேட்டு மாணவர்கள் மனதில் குற்றவுணர்வை வரவைத்து விடுராங்க. பின்னே அவன் சாப்பிடிவதையே தண்டனையா நினைக்க ஆரம்பிக்கிறான்.

//சமூகத்தை விட வீட்டில் எப்படி அசிங்கப்பட நேரிடுமோ, திட்டு விழுமோ, அடி விழுமோ என்று அஞ்சி உயிரை விடும் பிள்ளைகள் அதிகமாக தான் செய்யும்.//இந்த வாத்திற்க்கு யார் பதில் சொல்றீங்க?

//தன் பிள்லையிடம் உள்ள திறமையை கண்டரிந்து வழி நடத்தினலே பிள்ளைகள் வருங்காலம் ஜொலிக்கும்... பெற்றோர் இதை உணர்ந்து கொண்டால் தற்கொலை எண்னிக்கை குறையும், ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்//ஆரோக்யமான சமுதாயத்திற்கு வழிகாண்பித்து உங்களுக்கு வழி விட்டுருக்காங்க இவ்வணியினர். இதற்கான எதிர்வாதங்களைக்கேட்போம் இனி.

கோபமெல்லாம் இல்லை. நானும் உங்கள் நிலையில் இருந்தேன். எனக்கு வலி புரியும். நலம் பெற்றதும் மீண்டும் வாருங்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பட்டி இப்படி நொண்டி அடித்து யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். என் போறாத காலம். கொட்டாவி விட்டுக்கொண்டு கணினியில் கொசு அடித்துக்கொண்டிருந்தேன். இப்போ நகரத்தில் வெள்ளம் காரணமாக பள்ளி அலுவலகம் அனைத்த்ம் விடுமுறையில் இருக்கு. என்னை கண்காணிக்க வீட்டில் மூன்று பேர்.கணினி இரவு 10.30 மணிக்கு மேல் திறக்க முடியாதவாறு பூட்டப்பட்டும் விட்டது. நான் 2 நாள் முன்பு இரவு 12 மணி வரை கணினியில் இருந்ததை கண்காணித்துவிட்டு இந்த முடிவு.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

//இந்த காலத்தில்இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம் //உலகம் மட்டுமா? என் வீட்டில் ரொம்பவே!!

//எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. //இது காலத்தின் கோலம். மக்கள் தொகை பெருக்கம் அதனால் வரும் போட்டி. இதை எப்படி மனவழுத்தம் இன்றி எதிர் கொள்வது என்பதே வாழ்க்கையின் சவால்.

//எங்க கோயம்பத்தூருக்கு பக்கத்துல இருக்கிற வெள்ளியிங்கிரிமலையை கூட தொட முடியாது.//ஹா ஹா அருமையான அவதானிப்பு

//பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கறை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)(தேர்ந்தெடுக்கிற கடமை பெற்றோருக்கு தாங்க)//எல்லாவற்றையும் பெற்றோர் தேர்ந்தெடுத்து இந்த வழியில் ஓடு என்று சொல்லவேண்டும் என்கிறீர்களா?

//இந்த உலகத்தில் மிகவும் பொறுப்புமிக்க ஒரு பணி என்பது ஒரு நாட்டிற்கு பிரதமராகவோ அல்லது முதல்வராகவோ , ஜனாதிபதியாகவோ இருப்பதில்லை நடுவரே.//மிகவும் உண்மைதான் . எப்போதும் சிரித்தமுகத்துடன் அவர்கள் தரும் நேர்முக உரையாடலும் புகைப்பட நிலையுமே சாட்சி.நாட்டு தலைமகன் வழிதன் வழியென்று பெற்றோர்கள் கவலையற்று பொறுப்பின்றி இருக்கமுடியுமான்னு கேட்கறீங்கதானே? (சரி சரி இந்தாங்க சுட சுட தண்ணி குடிங்க)

//ஒரு குழந்தை பள்ளியில் கற்றுக் கொள்ளும் ஒழுக்கம் அவன் வாழ்நாள் முழுவதும் கூட வருவதில்லை.பெற்றோரிடம் கற்றுக் கொள்ளுவது தான் அவன் வாழ்வின் இறுதிவரை வரும்,//இது சரியான பாயிண்ட். அது மட்டுமா பள்ளியில் கற்றுக்கொண்ட (சக மாணவர்களிடமிருந்து) தீய பழக்கத்தையும் பெற்றோர்கண்காணிப்பால், அரவணைப்பால் மாற்றலாமெ ?

//பிள்ளை பெறுவதும் , அவர்களை ஒரு நலல் குடும்பச் சூழலில் வளர்ப்பதும் சிறு பிள்ளை விளையாட்டு இல்லை நடுவரே அது ஒரு தவம்//இதை எத்தனை பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?

அர்த்தமுள்ள வாதத்தால் அணியை அழகாக நடத்தி செல்லுகிறீர்கள். மீண்டும் வாருங்கள் அணிக்கு பலம் சேர்க்க.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

'சமூகமே' அணிக்கு பலம் சேர்க்க வந்து சாடு சாடு என்று சாடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

//எல்லா பெற்றோரும் நினைக்கறது என்னங்க நாம கஷ்ட பட்ட மாதிரி நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கனும்னு எண்ணத்தை முன்னிருத்திதாங்க...//ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு தடுமாறிட்டீங்கன்னு நினைக்கிறேன். சமூகத்தின் மீது அத்தனை கோபமா?

//அவங்களுக்கு எல்லா விஷயமும் பிரச்சனைதான்..நாம அழகா இல்ல ...நாம வளரல ..அழகுன்றது என்ன .சிகப்புத்தோல் பொட்டுக்குனு இருக்கறது..அப்பத்தான் தன்னம்பிக்கை வளரும் ,எல்லாரும் மதிப்பாங்க இப்படியான எண்ணங்களை அவங்களுக்கு உருவாக்கறது யாரு..தொலைக்காட்சில வர விளப்பரம்ங்கள் தான்.சமுக பிரச்சனைல தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்குது..//வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் கண்ணோட்டத்தை விட்டுவிட்டு எல்லா விசயங்களையும் போலித்தனமான பெருமையாகவே பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கு சமூகம் என் சாடவரீங்க. சீக்கிரம் நல்ல நல்ல சாடல்களோடு உங்களை எதிர்பார்ர்க்கிறேன் .

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மீண்டும் வாதங்களுடன் வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.

//சமூகம்னா நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும் கெட்டதை அகற்றி நல்லதை தேர்ந்தெடுக்கும் கலையை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டியது பெற்றோர்//அதானே. பெற்றோருக்கு இதை கற்றுக்கொடுப்பதை தவிர வேற என்ன பெரிய பொறுப்பிருக்க முருயும்?

//எத்தனையோ நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன, அதை எல்லாம் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தாமல் அழுதுவடியும் சீரியல்களையும் வன்முறை கார்ட்டூன்களையும் காண்பிப்பது யார் தவறு? தொலைக்காட்சியில் வன்முறை தூண்டும் விதமாக கார்ட்டூன்கள் வருகிறது என்றால் அதை வேண்டாம் என்று பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் கடமை பெற்றோருக்கு இருக்க வேண்டாமா? //அதை எங்கே செய்யராங்க. நீங்களெல்லாம் பார்க்கக்கூடாது. உள்ளே போங்க என்று சொல்லி தாங்கள் மட்டும் உரிமையோடு பார்ப்பதினால் பிள்ளைகள் மனதில் மறைமுகமாக இல்லை நேரடியாகவே ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்

//அன்றைக்கு நடந்த விஷயங்கள் சந்தித்த நபர்கள் பற்றி கலந்துரையாடினால் அங்கே ஒரு நட்பு பிணைப்பு உருவாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த சூழல் இல்லாத வீடுகளில்தான் பிள்ளைகள் முடிவெடுக்கத் தடுமாறி தற்கொலை முடிவை நாடுகிறார்கள்//இந்த ஆரோகயமான பழக்கம் பெற்றொரிடம் இல்லையே என்று நீங்கள் கோபிப்பது எதிரணி காதில் விழுதான்னு பார்ப்போம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஒரு வழியா மீண்டும் வந்திட்டோம்ல.

சமூகமேன்னு பேசின ரேவதி உங்க வாதங்களைப்பார்ப்போம்.

//நல்லா மதிப்பெண்வாங்காத பசங்க கிட்ட கம்பர் பண்ணி பார்க்கிறாங்க.வெற்றி அடைந்தவன கொண்டாடுற சமுகம் தோல்வி அடைந்தவனை கேலி ,கிண்டல் ,ஏன் இப்படினு பல கேள்வி கனைகளை தொடுத்து மன உளைச்சல்ல தள்ளி விட்டு தவறான முடிவுக்கு தள்ளுது..//அதானே அடுத்தவனின் வெற்றியினால் மற்றவருக்கு ஊக்கத்தை தருவதைவிட்டு தாழ்வுமனப்பான்மையையும் பொறாமையையும் கொடுத்து கீழே தள்ளுது சமுதாயம். என்ன சொல்ல?

.//.எதிர்பாலினர்க்கு எதிர்க்கவோ அல்லது அனைவரின் எதிர்க்கவும் வைத்து திட்டும் போது அவமானமா நினைச்சு இப்படிலாம் செய்றாங்க//

//அவனவ்ன் முகபுத்தகத்துல ரிக்வெஸ்ட் கொடுத்துட்டு,ஏத்துக்கல ,இல்ல நாம அனுப்புன குறுஞ்செய்திக்கு திரும்ப பதில் வரலனாலே மனம் உடஞ்சு போறாங்கனு சமிபத்திய ஆராய்ச்சி முடிவு சொல்லுதுனு சொல்லறாங்க//

ஆமா ஆமா ஒரு சிறுஅவமானத்தைத்தாங்ககூடிய அளவுகூட இல்லாம ரொம்ப எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய மாணாக்கர்களை உருவாக்கியிருக்கு சமூகம்.அவமானத்தை எங்கெங்கெல்லாம் தேடுவது என்று போய் இப்போ முகபுத்தகத்திலும் தேடுறாங்க மாணவர்கள். சரிதான்

உங்க பார்வையில் சமுதாயக்குறை நல்லாவே தெரியுது.இனி மேற்க்கொண்டு பார்ப்போம்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சீதாலட்சுமி உங்க வாதங்களை பரிசீலிக்கும் நாளும் வந்து விட்டது. பொறுமைக்கு நன்றி. இந்த பொறுமை கூட சமுதாயம் கற்றுத்தந்ததா?

//எத்தனையோ விஷயங்கள் முற்றிலுமாக ஒழிந்து போயிருக்கு. அது போல, இந்த மாதிரி நடப்புகளும் வெறும் கடந்த காலமாக ஆகிடணும்.//உங்களைப்போல் என் ஆசையும் .

//இந்தத் தலைப்பை இப்படிக் கேட்டுக்கோங்க - மாணவர்கள் தற்கொலை நடக்காமல் இருக்க - மாற வேண்டியது வீட்டு சூழலா, சமூகச் சூழலா? இப்படிக் கேட்டுகிட்டாலே உடனே பதில் கிடைச்சுடும் - நிச்சயமாக சமூகச் சூழல்தான்.//
அதானே . யார் என்று வாக்குவாதத்தைவிட என்ன செய்யலாம்னு யோசனை சொல்ல வரீங்களே . பலே பலே

//உங்கள் குழந்தை தீர்க்காயுளுடன் இருந்து, நல்லதொரு பண்பு மிக்க சிட்டிசனாக இருக்கணுமா, இல்லை அதிகம் படித்து, அக்கம்பக்கத்தினர் வியக்கணுமா என்று? முதலில் சொன்னதைத்தான் சொல்வாங்க.//
இப்போதைய நடைமுறையே பணமும் புகழும் தானே . இப்படிச்சொல்வாரும் இருக்காங்கன்னு சொல்றீங்களா?

//வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் ஒரு சொற்றொடரை சொல்றாங்க - PEER PRESSURE! அதாவது குழந்தை ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுமே பெற்றவர்களிடம் சொல்ல ஆரம்பிச்சுடுமாம் - ‘ என்னோட ரூமில் பின்க்/ப்ளூ கலரில் பெயிண்ட் பண்ணுங்க, பெரிய காரில் கொண்டு வந்து ட்ராப் பண்ணுங்க, ஏன்னா, என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் எல்லாம் இப்படித்தான் இருக்கு’ என்று.//

அத்த ஏன் கேட்கறீங்க. தோழியின் அம்மா ஒல்லியா ஸ்மார்ட்டா இருக்காங்க நீ ஏன் வயிறு வளர்த்திட்டே போறம்மான்னு கேட்குது என் வாரிசு. சமுதாயத்தோட தாக்கம் எப்படி வீட்டுக்குள்ளே வருது பாருங்க.

//கொஞ்சம் குறைச்சலாக மார்க் வாங்கினால் - அச்சச்சோ, இந்த மார்க்குக்கு எங்கே இடம் கிடைக்கும், வேலை கிடைக்கும் என்று பயமுறுத்தல்//.

ஆமா கொஞ்சமா மனதைரியம் எல்லாம் போறாது இந்த உலகத்தில் வாழ. வசதி வாய்ப்புகள் போல் மன உறுதியும் மேம்பட்டு இருக்க வேண்டிய கால கட்டமிது.

//என் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்த ஒரு ஆசிரியத் தம்பதி - மிக அருமையான கவுன்சிலிங் கொடுப்பாங்க. அவங்களே அவங்க பையன் +2 வந்த போது, மிகவும் மனம் தளர்ந்து போனாங்க. அந்த ஆசிரியை சொன்னது இன்னும் காதில் ஒலிக்குது. ‘பையன் என்ன மார்க் வாங்குவான் என்பதைப் பற்றி எங்களுக்கு ரொம்பவும் கவலை எதுவும் இல்லை, ஆனால் வீட்டுக்கு வர்ற சொந்தக்காரங்க/தெரிஞ்சவங்க பேசறதுதான் பையனை ரொம்பவும் புல் டவுன் செய்கிறது’ என்று சொன்னாங்க.//
பார்த்தீர்களா ? படிப்பறிவு எல்லாம் இந்த உலகத்தை சமாளிக்கபோறாது . மிகுந்த மன உறுதி இல்லேன்னா கொண்டுசேர்த்திடும் சமூகம்.

நல்ல கதை சொல்லி சமுதாயத்தின் போக்கை விவரிச்சிருக்கீங்க. இதைவிட படிப்பினை யார் சொல்வாங்க.

//இனிமேலாவது மாணவர்களை சந்திக்கிற போது, அது உறவினர்களாக இருக்கட்டும், அல்லது அறிந்தவர்/தெரிந்தவர் வீட்டுக் குழந்தைகளாக இருக்கட்டும் - என்னது இவ்வளவு மார்க்தானா, இந்தக் காலேஜிலேயா படிக்கிறே, என்றோ - அல்லது இலவச புத்திமதிகளை வழங்கியோ அந்த பிஞ்சு மனங்களில் வெம்பிப் போக வைக்காமல் இருப்போம்//

சமுதாயத்தை குட்டு குட்டுன்னு குட்டிவிட்டு கடைசியில் சமுதாயம் என்பது வேறு யாருமில்லை நாம் தானேன்னு சொல்லி அருமையான வழிகாட்டுதலையும் காண்பிச்சிட்டு போயிருக்கீங்க சீதா.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

//இந்த குளிர் ஜூரத்திலும் சேம்பின்ச் சொல்லாம போனா காய்ச்சல் இன்னும் அதிகமா போய்டுமோனு சொல்லிட்டு என்னொட வாதததையும் முன்னால எறக்கி வெச்சிட்டு போய்டுறேன்
நோய்க்கெல்லாம் சேம் பின்ச் சொல்லும் அளவு உங்களில் சமுதாயத்தின் தாக்கம் தெரியுது. ஊருக்குப்போய் என்னை சமுதாயம் படுத்திய பாடு திரும்பி ஓடுனாப்போதும்னு ஆயிடுச்சு.

//நமக்கே இப்படினா குழந்தைகளை நினைச்சு பாருங்க.. அடுத்தவங்க சொல்லை தாங்கமுடியுமா அந்த பிஞ்சு நெஞ்சங்களினால//அதானே நாம எப்ப மீள? நம்ம குழந்தைகளைக்காப்பாற்ற?

//ஆனா ஊர் வாயை எதைக்கொண்டு அடைக்க நடுவரே!! தெரிஞ்சுக்கிட்டே கேட்டுக்கேட்டு துன்புறுத்துவாங்களே!! நல்லாத்தானே படிச்ச எப்படி கம்ம்மியாச்சு, கடைசிநேரத்தில கோட்டைஉட்டுட்டியா? கவனிக்கிலியா? ஃபிரண்ட்ஸோட ஊர்சுத்த போனியானு?அவங்களாவே ஒரு கற்பனை பண்ணிக்கொண்டு போட்டு துருவி எடுப்பாங்களே.. அப்ப அந்த குழந்தையின் மன நிலையை வார்த்தைகளிதான் வடிக்க முடியுமா?//

சமுதாயத்தினால் என்னன்ன குத்தல்கள் வரும்னு அழகா அடுக்கி கோபப்பட்டிருக்கீங்க நியாயம் தான். சமுதாயத்திற்கு பயந்து வந்து வாத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்