பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

அன்பு அறுசுவை மக்களே வணக்கம். இன்றைய வாரம் பட்டிதலைப்பு :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?

தேர்வு முடிவுகள் வெளியாகி பல மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட ஆரம்பிக்கும் நேரம் சிலமாணவர்களின் கனவுகள் சிதறியிருக்கும்.கனவுகள் சிதறிய கவலையில் வாழ்வை முடிக்க போகும் சூழ்நிலைக்கு போவதன் காரணம்?

வாதங்கள் தேர்வு முடிவை ஒட்டித்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. பொதுவாகவே இக்காலத்தில் சிறு தோல்வியையும் தாங்கும் மனநிலை இளம்வயதினரிடையே இல்லை.இதன் பின்னணி என்ன? மனவுறுதியும் தெளிவும் இல்லாமல் சிறுதோல்விக்கும் கோரமுடிவை எடுக்கும் கொடுமைக்கு காரணம்? இதிலிருந்து மாணவர்களைக் காக்கும் வழி? அப்படிப்பட்ட சூழலில் இவ்வாதம் பலருக்கும் ஒரு ஆரோக்யமான சிந்தனைத்தெளிவைத் தரும் என்னும் நம்பிக்கையில் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
சமூக மாற்றங்களை தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் நம் கவிசிவாவின் தலைப்பு இது. அவர்களுக்கு முதல் நன்றி. முதன் முறையாக பட்டித் தலைவர் பொறுப்பேற்றிருக்கும் என்னை மனமுவந்து ஏற்று சிந்தனையை செதுக்கி உங்கள் வாதங்களை வைப்பீர்.

பட்டிமன்ற விதிமுறைகள்:
1.பட்டியில் யாரும் யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.

2.எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.

3. பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.

4. நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். மற்ற பதிவுகளுக்கு நடுவரின் பதிலோ, வாதிடுபவர் பதிலோ இனி இருக்காது.

5. அரட்டை... நிச்சயம் கூடாது.
இறுதியாக... அறுசுவையின் பொதுவான விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாருங்கள் மக்களே வந்து வாதங்களை பொழியுங்கள் :-)

இனி நாளை என் தீர்ப்பை வைக்க உள்ளேன் . பொறுங்கள் மக்களே. வாதிட்ட அனைவருக்கும் என்னை தூக்கி சாடாமல் பொறுத்தருளிய அறுசுவை சமூகத்திற்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

சும்மா தீர்ப்பையும் அதற்கான காரணத்தையும் மட்டும் கூறிவிட்டால் போறாது. அதைக்களைய என்ன என்ன முயற்சியில் இறங்கலாம் எனவும் அலசப்போகிறேன்.

தீர்ப்பு : வீட்டுச்சூழலே !!!

ஏனென்றால் வீட்டு உறுப்பினர்களும் சமுதாயத்தின் மிகமுக்கிய உறுப்பினர்களே!

சமுதாயம் சமுதாயம் என சொல்வதைவிடுங்கள். சமுதாயத்திற்கு ஒரு நாக்கு கிடையாது. பல நாக்கு. ஒரு கொள்கை கிடையாது. பல கொள்கை. ஒரே சனாதான தர்மம் கிடையாது. சாதகமானவர்களுக்கு சாதகமான தர்மம்.

இக்காலத்தில் மாணவர்கள் கலாச்சாரம் , மொழி , இனம், இடம் (கிராமம், நகரம்) என வேறுபட்ட மாணர்களுடன் கலந்து பலகும் போது எது நல்லொழுக்கம் எது தர்மம் என குழம்புவது இயல்பே. இப்போ யார் அவர்களை வழிகாட்டுவது ?
வீட்டுப்பெரியவர்கள் தானே ?

இப்பொழுது பெரும்பாலும் வீட்டுப்பெரியவர்கள் என்றால் பெற்றோர்கள்தான். முதலில் அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்கிறார்களா பொறுப்பென்றால் பொருளாதார ஆதரவு மட்டுமில்லை. மாரல் சப்போர்ட். . அதுதான் இன்றைய தேவை.

இனி சீதாலட்சுமி அவர்கள் கூறியதுபோல் , மாணர்வர்களின் சோகநிலைக்கு காரணமான வீட்டுச்சூழலை எப்படி சீராக்குவது என்ற நமக்கு தெரிந்த வழிகளை அலசுவோம்.

முதலில் பெறோர்கள் காலம் வேகமாக மாறுகிறது என்பதை உணர்ந்து அதற்குத்தகுந்தாற்பொல் தன்னையும் மாற்றிக்கொள்ள முயற்சிக்கலாம்.

என் காலத்திலே என எதற்கெடுத்தாலும் புராணம் பாடாமல் நம் காலகட்ட நிகழ்வுகளை அவ்வப்போது ஒரு ஜாலிக்காக உதாரணம் காட்டிப்பேசலாம். பிரட்சினை வரும் போது பழைய புராணம் பாடாமல் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக பேசிக்களிக்கும் நேரத்தில் அளவோடு நம் கால நிகழ்வுகளை பேசினால் அது பிள்ளைகளின் மனதில் நிற்கும்.

சில நேரங்களில் நமக்கு தெரிந்தும் பிள்ளைகள் குழியில் விழ யத்தனிக்கும். அது எப்படிப்பட்ட ஆபத்தான குழி என்பதைப்பொறுத்து அனுபவப்பாடம் கற்றுக்கொள்ள அனுமதியுங்கள். சொல்லும் பாடத்தைவிட அனுபவப்பாடம் ஸ்ட்ராங்கானது. விழும் முன்பே இலேசாக அதன் விளைவுகளைச் சொல்லிவிட்டு விளகிவிடலாம். இதனால் நம் எச்சரிக்கை பிள்ளைகளின் மனதில் படும் . எக்காரணம் கொண்டும் `நான் சொன்னேனில்ல' என்று சொல்லிக்காட்டக்கூடாது.

காலத்திற்கு தகுந்தாற்ப்போல் பெற்றோரும் தங்களை அப்டேட் செய்யலாம்.'U R DUMB' என பிள்ளைகள் அடிக்கடி சொல்லிக்கேட்பதை தவிர்க்கலாம்.

பிள்ளைகளின் சிறு சிறு சாதனைகளையும் ஊக்குவித்து பரிசலிக்கலாம். நம் பிள்ளைகளின் சிறு சாதனைகளை பாராட்ட உலகத்திற்கேது நேரம். தவறுகளை உணர்ச்சிவயப்பட்டு உடனே திட்டிக்கழிக்காமல் எங்கே தவறு என பிள்ளைகளையே அலசவிடலாம்.

முக்கியமாக சமுதாயத்தின் விமர்சனத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கற்றுக்கொடுப்பது மிகமுக்கியம். எல்லா விமர்சனங்களையும் அலட்சியப்படுத்தும் குழந்தை தாந்தோன்றித்தனமாகி கொண்டதே கோலம் கண்டதே காட்சி என மாறிவிடும் அபாயம் உள்ளது.

எந்த வித மாற்றங்களையும் ஐயோ அது கூடாது என்றோ நல்லா எஞ்ஜாய் செய் என்றோ இருவிளிம்புகளுக்கும் போகவிட்டுகெடுக்கவேண்டாமே. மாறாக அளவோடு பயன்படுத்த கற்றுக்கொடுக்கலாம்.

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். அதை தினம் தினம் சொல்லிக்காட்டி எரிச்சல்ப்படுத்தவேண்டாமே.

இப்போ இளம்மாணாக்கரைத்தாக்கும் கொடிய நோய் எது தெரியுமா ? 'PEER PRESSURE' மாணவர்களின் முதல்நிலை சமுதாயம் என்பது PEER GROUP தான். இதன் தாக்கத்தில் தன் பிள்ளையின் நிலை என்ன என உணரவேண்டும்.PEER PRESSURE லிருந்து தன்னைக்காத்துக்கொள்வது எப்படி என பிள்ளைக்ளோடே கூட பேசி கலந்தாலோசிக்கலாம்.

குழந்தைகளின் தோழமை கூட்டம் யார் என அறிய முயலலாம் . அவர்களோடு நாமும் நட்போடு இருக்க முயலலாம். பிடித்த சுவையான பண்டங்களை தோழர்களுக்கும் சொய்து கொடுத்து நட்புரவை மேம்படுத்தலாம்.

கற்றலின் பாடங்கள் தவறுகளிடமிருந்தும் கிடைக்கும் என்பதை பெற்றோர் உணரவேண்டும்.

பிள்ளைகள் பொற்றோர்களுக்கு என்றுமே குழந்தைகள்தான். பதின்ம வயதென்பது கத்தி போன்றது. பெற்றொருக்கு மட்டுமில்லை பிள்ளைகளுக்கும் அதைக்கையாள்வதென்பது கவனமான தருணம்தான்.

ஹார்மோன் தரும் குழப்பங்களைக்கடந்து நல்ல மாணவராய் வாழ்க்கையை தோல்விகளுக்கிடையே வெற்றி அடையசச்செய்வது ஒரு வேள்வி. அதில நம் பங்கென்ன என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்போம். நல்ல சமுதாயம் பெறுவோம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ஐய்ய்ய்ய்ய்ய்ய்...... தீர்ப்பு வந்தாச்சூ....நாந்தான் பஸ்ட்டு... ஜெயந்தி அருமையான தீர்ப்பு .அதற்கான விளக்கமும்,நமக்குள்ளே ஏற்படத்திக்க வேண்டிய தெளிவையும் அழகா புட்டு வச்சிட்டீங்க. அருமை
தாமதமா வந்தாலும் தரமான பதிவு.. வாழ்த்துக்கள்.. :)

Be simple be sample

இத்தனை காலம் காத்திருந்ததுக்கு தீனி போட்டது உங்க தீர்ப்பு... அருமை ஜெயந்தி. எப்படி மாற்றுவதுன்னும் சொன்னது பிடித்தது. அதாவது தவறு எதுன்னு மட்டும் சொல்லாம அதை திருத்தவும் வழி சொல்லி பலரையும் யோசிக்க வெச்சிருக்கீங்க. கலக்கல்.

இப்போது உடல் நலம் எப்படி இருக்கு? நான் இன்று தான் திரும்ப பெங்களூர் வந்தேன் ஜெயந்தி. தீர்ப்பை ஒரு நாள் மொபைலில் இருந்து படித்தேன், ஆனால் பதிவிட தமிழ் இல்லை. பட்டியில் அப்படி பதிவிட மனமும் இல்லை. அதனால் இந்த தாமதம். மன்னிக்கனும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜெயந்தி நறுக்குதெரித்தாப்பில நச்சுனு தீர்ப்பை சொல்லி அசத்திட்டீங்க :)

//ஹார்மோன் தரும் குழப்பங்களைக்கடந்து நல்ல மாணவராய் வாழ்க்கையை தோல்விகளுக்கிடையே வெற்றி அடையசச்செய்வது ஒரு வேள்வி. அதில நம் பங்கென்ன என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்போம். நல்ல சமுதாயம் பெறுவோம்.//
அருமையான வரிகள் :)
நிச்சயம் பெற்றோர்கள் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. ஊக்குவித்தலும், அரவணைப்புமே குழந்தைகளை நல்லவர்களாக வாழ வழிசெய்யும் என்பதிலும் ஐயமில்லை. நல்ல தீர்ப்பு வாழ்த்துக்கள் தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

91 su

மேலும் சில பதிவுகள்