சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ்

தேதி: June 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

ப்ரெட் - 12 முத‌ல் 14
க்ரீம் சீஸ் - ஒரு பாக்ஸ் (8 oz)
மயோனைஸ் - கால் கப்
க்ரஷ்டு பைனாப்பிள் டின் - ஒன்று
புதினா இலை - ‍ சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். க்ரீம் சீஸை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் அறை வெப்பநிலையில் வைக்கவும்.
பைனாப்பிள் டின்னை திறந்து, தேவையான அளவு பழத்துண்டுகளை எடுத்து, ஒரு வடிக்கட்டியில் போட்டு, அதில் இருக்கும் நீரை/பழச்சாறை நன்கு வடியவிடவும். (தேவையெனில் லேசாக அழுத்தம் கொடுத்து வடித்து எடுத்தால், பிறகு சீஸ் கலவை நீர்த்து போகாமல் இருக்க உதவும்). புதினா இலைகளை கழுவி நன்றாக துடைத்து, மெல்லியதாக வெட்டி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் க்ரீம் சீஸுடன் மயோனைஸ் போட்டு, நன்றாக குழைத்து, அதை இரண்டு கிண்ணங்களுக்கு மாற்றவும். அதில் ஒரு கிண்ணத்தில், பைனாப்பிள் துண்டுகளையும், மற்றொரு கிண்ணத்தில், புதினா இலைகளையும் சேர்க்கவும்.
பின்னர் அவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு ப்ரெட் துண்டுகளின் ஓரத்தை நறுக்கிவிட்டு, இந்த ஃபில்லிங்கை வைத்து நிரப்பி, மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும். விருப்பமான வடிவங்களில் நறுக்கி பரிமாறவும்.
சுவையான, மிக சுலபமான, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈசி க்ரீம் சீஸ் ஃபிங்கர் சான்ட்விச்சஸ் ரெடி. இதை மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். சிறு துண்டுகளாக நறுக்கி, பார்ட்டிகளுக்கு நல்ல ஸ்டார்டராக கொடுக்கலாம்.

க்ரீம் சீஸ் ஃபில்லிங்கில், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், அல்லது பொடித்த நட்ஸ் சேர்த்தும் செய்யலாம். அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதே போல ப்ரெட்டிலும், வீட் ப்ரெட் அல்லது வொயிட் ப்ரெட் என்று எது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சீஸ் ப்ரெட் அருமையா ப்ரசன்ட் பன்னியிருக்கீங்க,பாக்கவே குட்டிகுட்டியா அழகா இருக்கு,சீஸ் மென்ட் காம்பினேஷன் நல்ல ஐடியா

Eat healthy

செமய இருக்கெ பார்க்கும் போதே சோ டெம்ப்டிங் கண்டிப்பாசெய்துட்டு சொல்லுரேன் நல்ல குறிப்பு :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நன்றி!

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

முதல் பதிவிற்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ரசியா!
இது ஒரு பாட் லாக் டின்னருக்கு செய்து எடுத்து சென்றது. ஒரு பாதி பைனாப்பிள், மீதி மின்ட் ஃபில்லிங்!!

மிக்க நன்றி கனி! :‍) ரொம்ப ஈசிதான், கண்டிப்பா செய்துப் பாருங்க. எப்படி இருந்ததுன்னும் வந்து சொல்லுங்க.

அன்புடன்
சுஸ்ரீ