ப்ளாஸ்டிக் பாட்டில் க்ராஃப்ட்ஸ்

தேதி: June 13, 2013

5
Average: 4.1 (14 votes)

 

ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள்
கத்தரிக்கோல்
சாட்டின் ரிப்பன்
விரும்பிய நிற லேஸ்
சிறிய கம்பி - 2
சாக்லேட் நிரப்பிய கவர்கள் - சிறியது
பட்டன்ஸ்
அட்டை
மெழுகுவர்த்தி
க்ளூ

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். படத்தில் உள்ளது போல் இரண்டு பாட்டில்களின் மேல் பகுதியை ஒன்றை விட மற்றொன்று சிறியதாக இருக்குமாறு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி வைத்துள்ள சிறிய பாட்டிலை கீழே வைத்து, அதன்மேல் பெரிய பாட்டிலை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி ஒட்டவும். ஒட்டிய இடத்தில் இரண்டு சுற்றுகள் சாட்டின் ரிப்பனை சுற்றி ஒட்டவும். பிறகு பாட்டிலின் மேல் மற்றும் கீழ் ஓரங்களிலும், சாட்டின் ரிப்பனின் ஓரங்களிலும் லேஸ் ஒட்டவும். இதன் நடுவில் மெழுகுவர்த்தி வைத்து மெழுகுவர்த்தி ஹோல்டராக உபயோகப்படுத்தலாம். (இதை ஷோ பீஸாக மட்டும் பயன்படுத்தவும். மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க விரும்பினால் உயரமான மெழுகுவர்த்திதான் இதற்கு சரியாக இருக்கும். ப்ளாஸ்டிக் பாட்டில் என்பதால் கவனமாக பார்த்து அணைத்துவிடவும்).
மெழுகுவர்த்தி ஹோல்டருக்கு வெட்டியது போல, இரண்டு பாட்டில்களை வெட்டி சாட்டின் ரிப்பன் மற்றும் லேஸ் ஒட்டி பட்டன்கள் வைத்து அலங்கரிக்கவும். கீழே உள்ள பாட்டிலின் உள்பகுதியில் சாக்லேட் கவர்களை வைத்து, அடிப்பகுதியில் அதன் அளவிற்கேற்ப அட்டையை வட்டமாக வெட்டி ஒட்டவும்.
பாட்டிலின் மேல் பகுதியில் க்ரயான்ஸ் வைத்து பிறந்தநாள் விழாக்களில் குழந்தைகளுக்கு பார்ட்டி ஃபேவர்ஸாக கொடுக்கலாம்.
ஒரு பாட்டிலின் மேல் பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல 2 சிறிய கம்பிகளை வளைத்து அதன்மீது லேஸ் ஒட்டிவைக்கவும்.
பாட்டிலின் மூடி மற்றும் பாட்டிலை சுற்றிலும் விரும்பிய வடிவ லேஸ்கள் ஒட்டிவிடவும். பாட்டிலின் உள்பகுதியில் சாக்லேட் கவர்களை வைத்து, அடிப்பகுதியின் அளவில் அட்டையை வட்டமாக வெட்டி ஒட்டவும்.
வளைத்து வைத்துள்ள கம்பிகளை மூடியின் இரு பக்கங்களிலும் ஒட்டிவிட்டு, மூடியின் நடுவில் இரண்டு பட்டன்களை ஒட்டி அலங்கரிக்கவும். இதுவும் பார்ட்டி ஃபேவர்ஸாக கொடுப்பதற்கு ஏற்றது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலா அக்கா உங்க ப்ளாஸ்டிக் பாட்டில் க்ராஃப்ட்ஸ் ஈசியா இருக்கு ரொம்ப அழகா இருக்கு

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ப்ளாஷ்டிக் பாட்டில் க்ராஃப்ட்ஸ் ரொம்ப அழகா அருமையா இருக்குங்க :-) வாழ்த்துக்கள்

நட்புடன்
குணா

romba azhaga irukku akka..especially the last one....congrats.......

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! வாழ்த்துக்கள் கலா.

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப கியுட் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூ..ப்பர். கூடை க்யூட்டா இருக்கு கலா.

‍- இமா க்றிஸ்

Bottle crafts ellame azhaku pa.So cute kala

குறிப்பை வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் :)

Kalai

சுபி,வனிக்கா,இமா ஆன்டி,நிகி,லக்ஷ்மி,குணா,ரபியத் அனைவருக்கும் என் நன்றிகள் :)

Kalai

Kala Madam, How did you stitch the dress for the bottle? what materials have you used?