பேக்டு சிக்கன் டாக்கோ

தேதி: June 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ரெடிமேட் க்ரசண்ட் ரோல் - ஒன்று
மின்ஸ்டு சிக்கன் - ஒரு பவுண்ட்(Pound)/16 oz
டாக்கோ சீஸனிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
திக் சால்சா - முக்கால் கப்
துருவிய சீஸ் (செடார்) - முக்கால் கப்
ஹலப்பீனோ மிளகாய்/மிளகுத் தூள் -‍ காரத்திற்கேற்ப
‌அல‌ங்க‌ரிக்க‌:
தக்காளி - ஒன்று
லெட்டூஸ் - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். அவனை 375 டிகிரியில் முற்சூடு செய்யவும்.
க்ரசண்ட் ரோலைப் பிரித்து 8X8 பேக்கிங் ட்ரேயில் வைத்து ஒன்றுடன் ஒன்றாக ஒட்டி ட்ரே முழுவதுமாக பரவலாக வைக்கவும். (க்ரசண்ட் ரோலில் மாவு முக்கோண வடிவத்தில் 8 துண்டுகளாக இருக்கும்). ஒரு முட்கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும். இதனால் பேக்கிங்கின் போது க்ரஸ்ட் உப்பி மேலெழாமல் இருக்கும்.
பிறகு ட்ரேயை அவனில் வைத்து, 7 (அ) 8 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
ஒரு பாத்திர‌த்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடான‌தும், மின்ஸ்டு சிக்க‌னை உதிர்த்து போட்டு தேவையான‌ அளவு உப்பு சேர்‌த்து 10 நிமிடங்கள் வேக‌விட‌வும். சிக்கன் வெந்து நிற‌ம் மாறி வ‌ரும்போது, பொடியாக‌ ந‌றுக்கிய‌ ஹ‌ல‌ப்பீனோ மிள‌காய்/மிளகுத் தூள் சேர்க்கவும். அதனுடன் சால்சாவையும் ஊற்றி க‌லந்துவிட‌வும். அனைத்தும் ஒன்று சேர்ந்து க‌ல‌வை மிகவும் நீர்த்து போகாமல் சிறிது கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட‌வும்.
பிறகு ப்ரீ பேக் செய்து வைத்திருக்கும் ட்ரேயில், தயார் செய்த ஃபில்லிங்கை கொட்டி பரப்பிவிட‌வும்.
அதன்மேல் துருவிய‌ சீஸை தூவி, மீண்டும் அவ‌னில் வைக்கவும்.
15 நிமிட‌ங்க‌ள் கழித்து, மேலே உள்ள‌ சீஸ் உருகும் த‌றுவாயிலிருக்கும்போது வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆற‌விட‌வும்.
பிற‌கு அதன்மேல் பொடியாக‌ ந‌றுக்கிய‌ லெட்டூஸ் மற்றும் த‌க்காளியை தூவவும்.
விருப்பத்திற்கேற்ப துண்டுக‌ள் போட்டு ப‌ரிமாற‌வும். வெகு சுல‌ப‌மாக‌ செய்ய‌க்கூடிய இந்த பேக்டு சிக்க‌ன் டாக்கோ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு மிகவும் சுவையாக இருக்கும்.

குழந்தைகளின் கார‌த்திற்கேற்ப‌ ஹ‌ல‌ப்பீனோ மிள‌காய்/மிளகுத் தூளின் அள‌வை கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Krasant roll enral enna nan Japan la irukiren Ingu kidaikkuma plz rply parkum pothe sapudanum pol iruku

சுஸ்ரீ,
டேஸ்டி,ஹெல்தி காம்போ
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அடடா... அசத்துறீங்களே... :) எனக்கு பார்சல் அனுப்பி வெச்சுடுங்க ஃப்ரெஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா செய்து இருக்கிங்க,வித்தியாசமான குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி!

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நன்றி Siyamfazliya!

உங்களோட பதிவிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
க்ரசண்ட் ரோல் (Crescent roll) என்பது ஒருவகையான‌ ரெடிமேட் மாவுதான். அதாவது, மைதா, பால், உப்பு, முட்டை, வெண்ணெய், ஈஸ்ட் எல்லாம் சேர்த்து பிசைந்து பதப்படுத்திய மாவை டின்னில் போட்டு விற்பனைக்கு கொண்டு வருவார்கள். க‌‌டைக‌ளில் பொதுவாக ஃப்ரோசன் பொருட்கள் மற்றும் சீஸ் இருக்கும் இட‌ங்க‌ளில் வைத்திருப்பார்க‌ள். நீங்க‌ இருக்கும் இட‌த்தில் கிடைக்குமா என்று தெரிய‌லையே, கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன்!. எத‌ற்கும் முய‌ற்சித்து பாருங்க‌ள். வாழ்த்துக்க‌ள் & ந‌ன்றி!

---
கவிதா,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

---
வனி,
வாங்க‌ வ‌னி! மிக்க‌ ந‌ன்றி!! :‍) உங்க‌ளுக்கு இல்லாத‌தா?!! (அது காலியாகிடிச்சி!! :D) உங்க‌ளுக்காக‌வே இன்னொருமுறை செய்து ஃப்ரெஷா பார்ச‌ல் அனுப்பிட‌றேன். ;-‍‍)

---
முசி,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ