"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

தீபிகா,
வாழ்த்துக்கள் முதலில், நீங்கள் ஜூன் மாதம் முடியும் வரை காத்திருங்கள்.பின் ஜூலை ஒன்றாம் தேதி திரும்ப யூரின் டெஸ்ட் சரியான முறையில்(முதல் யூரின்) செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் வர வாழ்த்துக்கள்...:-)
அப்பொழுது ரிசல்ட் வருவதைப் பொருத்து டாக்டரை பாருங்கள்....இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் விலகி இருங்கள்.

hello sisters
i m new to this site
எனக்கு திருமனமாகி 1 வருடம் 3 மாதம் ஆகிரது இன்னும் குழந்தை இல்லை doctorஇடம் சென்றோம், period ஆன 2nd day வர சொன்னாங்க, thyriod,prolaction hormone tests எல்லாம் normalஆக உல்லது எனக்கு regular periods தான் இன்னும் என்ன tests பன்ன வேண்டும்,pls help me

ஷெரின்,
அனைத்து டெஸ்ட்டும் நார்மல்ன்னா கவலை வேண்டாம்.மனதில் எப்பவும் பாசிட்டிவ் நினைவுகளோட இருங்க. உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்த்து தினமும் தயிர்,மோர் சேர்த்துக்கங்க.
ரெகுலர் பீரியடுன்கறதால ஓவுலேசன் டே கண்டுபிடிப்பது சுலபம்.அதாவது பீரியடின் முதல்நாளில் இருந்து 14-ஆம் நாள் ஓவுலேஷன் ஆகும். சோ பீரியடின் முதல் நாளில் துவங்கி 10-ஆம் நாள் முதல் ஒருவாரம் இன்டர்கோர்ஸ் இருக்கனும்.பின் வரும் நாட்கள் வேணாம். அடுத்த பீரியடு டேட் வரை பொருத்திருந்து பீரியடு வரலைன்னா நீங்க யூரின் டெஸ்ட் பண்ணுங்க.

உங்களுக்கு மலைவேம்பு கிடைத்தால் பீரியடின் முதல் 3 நாட்கள் அதை சாறாக்கி குடியுங்கள் பலன் கிடைக்கும்......வாழ்த்துக்கள்பா விரைவில் தாய்மையடைய....:-))

எனக்கு அபார்சன் ஆகி 40 நாட்கள் ஆகிறது... ஹார்ட்பீட் இல்லாமல் அபார்சன் ஆனது... டி என் சி பண்ணல... அதனால டாக்டர் அடுத்த பீரியட் ஆனதும் பேபி க்கு ட்ரை பண்ண சொன்னங்க... எனக்கு டிப்ஸ் இருந்தா சொல்லுங்க.. எனக்கு எல்லா டெஸ்டும் நார்மல்...

assalam alaikum ashika ungaluku na kudukura tips allah is most benficient and merciful allahthan namaku ellam ningalum unga kanavarum thagajjathu sernthu tholunga iravan mihaperiyavan kandipa ungaluku tharuvan daily magrip timela al mariam oothi thannikudinga baby conform ana apuram baby piravaraikum oothitae irukanum ka allah namma pakkathulae irupan namloda seyalhala kavanipan nama unmayla thooya ennathoda irunthomna kandipa namaku kidaikum insha allah na ungaluku na allavidam dua seihiraen ninga jakkath niraya kudunga ungaluku baby conform achuna kastapatvangaluku ethavathu oru thohaiya fix panni help pannunga namma oorla kalyanam panna kastapatta pen kumar irukum avangaluku unga family moolama help pannunga ithu ennoda virupam ethavathu thappa iruntha mannikavim i am really sorrypa

God's gift everyone

va alaikum vasalam...in sha allah

sorry ashika ithu ennoda anupavam athan sonnaen ini unga ilaiku na reply pannamataen sorry

God's gift everyone

sorry ashika ithu ennoda anupavam athan sonnaen ini unga ilaiku na reply pannamataen sorry yaena na ungalukandi reply pannaen ninga en namekoda mention pannala its k bye

God's gift everyone

அஸ்ஸலாமு அலைக்கும்... இப்போதான் உங்களோட பதிவைப் படிச்சேன்.. சாரி மா.. இது எப்படி ஆச்சி... சூடான பொருட்கள் எதுவும் சாப்பிட்டீங்களா?? இப்போ எங்கே இருக்கிங்க?? எந்த டாக்டர் கிட்ட காமிக்கிறீங்க?? இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க மா.. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது.தோழிகளே, தயவு செய்து முதல் இருமாத கரு நலமாய் வளர என்ன சாப்பிட வேண்டும்? என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா? குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா? சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா? மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி.? இரவில் கை,கால் வலி , முதுகு வலி நார்மலா. தயவு செய்து உங்கள் தங்கைக்கு உதவுங்கள். நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்