தேதி: June 27, 2013
விரும்பிய நிறங்களில் A4 காகிதங்கள்
க்ளூ
கத்தரிக்கோல்
ஒரு பேப்பரை 32 அல்லது 64 துண்டுகளாக்கி http://www.arusuvai.com/tamil/node/15022 இந்த லிங்கில் உள்ளது போல முக்கோணங்களாக மடித்து கொள்ளவும். (16 துண்டுகளாக்கி செய்தால் பூ மிகப்பெரியதாக இருக்கும். 32 அல்லது 64 துண்டுகளாக்கி செய்தால் அழகாக இருக்கும். ஒரு பூ செய்வதற்கு 186 முக்கோணங்கள் தேவைப்படும்).

படத்தில் உள்ளது போல 6 முக்கோணங்களை இணைத்து அடிபாகம் தயார் செய்யவும்.

பிறகு இரண்டு முக்கோணங்களுக்கு இடையே இன்னொரு முக்கோணத்தை வைக்கவும். (பார்த்ததும் புரிந்து கொள்வதற்காக நீல நிற முக்கோணத்தை வைத்துள்ளேன். ஒரே நிற முக்கோணங்களையே இணைக்கவும்).

நடுவில் வைத்த முக்கோணத்தை இரண்டு முக்கோணங்களால் இணைக்கவும்.

இதேபோல் சுற்றிலும் எல்லா இடைவெளிகளிலும் முக்கோணங்களை இணைக்கவும். இவ்வாறு இணைத்தால் முக்கோணங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி, வெளிப்பக்கம் மொத்தம் 12 முக்கோணங்கள் இருக்கும். அடுத்த வரிசையிலும் 12 முக்கோணங்கள் இணைக்கவும்.

முந்தைய ஸ்டெப்பில் செய்தது போலவே இப்போது 12 முக்கோணங்களை இரட்டிப்பாக்கி 24 முக்கோணங்களை இணைக்கவும். மீண்டும் 24 முக்கோணங்கள் கொண்ட ஒரு வரிசை இணைக்கவும்.

இணைத்த பிறகு உட்பாகம் இப்படி இருக்கும்.

படத்தில் உள்ளது போல் 7 முக்கோணங்கள் இணைத்து ஒன்று விட்டு மீண்டும் 7 முக்கோணங்கள் இணைக்கவும். மீண்டும் ஒன்று விட்டு 7 முக்கோணங்கள் என இணைக்கவும். (பார்த்ததும் புரிவதற்காக வேறு நிறத்தில் இணைத்து காட்டியுள்ளேன்).

இனி 7 முக்கோணங்களின் மீது 6, 5, 4, 3, 2, 1 என இணைத்து முடிக்கவும்.

மீதி உள்ள 7 முக்கோணங்கள் இணைத்த இரண்டு பாகங்களையும் இதே போல் 6, 5, 4, 3, 2, 1 என இணைத்து முடிக்கவும். கைகளால் மூன்று இதழ்களையும் உட்புறமாக குவித்துவிட்டு மலரை தயார் செய்து கொள்ளவும்.

A4 அளவு பச்சை நிற காகிதத்தை நான்காக வெட்டி, ஒரு பகுதியில் காகிதத்தை மூலை விட்ட வாக்கில் வைத்து இறுக்கமாக சுருட்டி முடியும் இடத்தில் க்ளூ தடவி ஒட்டி பூவின் தண்டுப் பகுதியை தயார் செய்யவும்.

மலரின் அடிப்பகுதியில் உள்ள சிறிய ஓட்டையினுள் தண்டினை நுழைத்து க்ளூ தடவி ஒட்டிவிடவும்.

இலைப்பகுதிக்கு பச்சை நிற காகிதத்தில் படத்தில் உள்ளது போல் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

வெட்டி எடுத்த இலையை தண்டுப் பகுதியில் க்ளூ தடவி ஒட்டவும்.

அழகான காகித டூலிப் மலர்கள் தயார்.

Comments
காகித டூலிப்
கவீஸ்.... அழகு, அழகு, டூலிப் அனைத்தும் அழகு.
- இமா க்றிஸ்
கவி அக்கா
கவி அக்கா டூலிப் கொள்ளை அழகு கொண்டாங்க அந்த டூலிப் செய்த கைக்கு வனி அக்கா வோட மெஹந்தி போட்டு விடுரேன்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கவி.
ஹப்பா எவ்ளோவ் அழகு.அட்டகாசமா இருக்கு கவி.
ப்ளீஸ் எனக்கு கொடுங்களேன்.
kavisiva
சொல்ல முடியாத அளவு அழகு. உங்க ஆரிகமி வேலையில் எனக்கு பிடிச்சது பெர்ஃபக்ஷன் மற்றும் கலர் காம்பினேஷன். எப்பவுமே சூப்பர். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவிசிவா அக்காங்,
காகித டூலிப் மலர்கள் ரொம்ப அருமையாகவும் அழகாகவும் இருக்குங்க, வாழ்த்துக்கள்ங்க :-)
நட்புடன்
குணா
நன்றி டீம்!
டூலிப் மலர் குறிப்பை வெளியிட்டமைக்கு நன்றி டீம் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
இமாம்மா
நன்றி இமாம்மா :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கனி
நன்றி கனி! கையை நீட்டிகிட்டே இருக்கேனே சீக்கிரமா மெஹந்தி போட்டு விடுங்க :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நிகிலா
நன்றி நிகிலா! அப்படியே எடுத்துக்கோங்க :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
வனி
நன்றி வனி! உங்களுக்கு மாலேயில் கிடைச்ச அளவு அழகான கலர்ஸ் இங்கே கிடைக்கலை வனி. உங்க மயில் இன்னமும் என் கண்ணுலயே நிக்குது. அந்த கலர் இங்கே எங்கே தேடியும் எனக்கு கிடைக்கலை.
இந்த ஆரிகாமி செய்ய ஆரம்பிச்சதே உங்க குறிப்புகளை பார்த்த பின்னாடிதானே :).
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
குணா
நன்றி குணா தம்பிங் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி அக்கா
அக் காஉங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஏன் நா நான் இப்போ தான் முதல் முறையா மெஹந்தி போட கத்துக்கவே போறென் அதுக்கு உங்க கைய குடுத்ததுக்கு ....
கொஞ்சம் உங்க கைய பாருங்க அக்கா கை ஃபுல்லா செவந்து இருக்கு ஆனா டிசைன் ஏ காணோமே :-)
முதல் ல வனி அக்கா கை ல தான் ட்ரை பண்ணி இருக்கனுமோ சாரி அக்கா அய்யுயோ கம்ப கை ல எடுத்தாச்சா எஸ்கேப் :-)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கவி,
வெரி பியூட்டிஃபுல்பா, சாதாரண 4 ஷீட்லயே செய்யலாமா?தெளிவான விளக்கமா இருக்கு பட் பக்கத்துல இருந்து சொல்லிகொடுத்தா இன்னும் சீக்கிரம் புரிஞ்சுப்பேன்...எப்போ வரீங்க கவி? கண்டிப்பா ட்ரைப்பண்னுறேன்.....திரும்பவும் சொல்றேன்.மிக அழகா இருக்கு,கலரும் சூப்பர்,...
கவி
மிகவும் அழகா இருக்கு, வாழ்த்துக்கள்
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
ரேணுகா
நன்றி ரேணுகா! சாதாரண A4 பேப்பர்தான். பிடித்தமான நிறங்களில் வாங்கிக்கோங்க. நேரில் வாங்க பொறுமையா சொல்லித் தரேன் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
தாமரை
நன்றி தாமரை :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
tulip in paper
super madam intha papaer enga kidaikum sonninga nalla irukkum
கிராஃப்ட் பேப்பர்
நன்றி கார்த்திகா! ஸ்டேஷனரி மற்றும் கிராஃப்ட் கடைகளில் கேட்டுப் பாருங்கள். சாதாரண கலர் பேப்பர்கள்தான் பயன் படுத்தியிருக்கிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
tolip flower
Dear Sir,
Tolip flower very beautiful. I will try this flower. But small dout. Please tell me paper folding diagrams. I waiting for your Reply Massage.
Tulip
Try the first link which has given
God bless us.
டூலிப் பூக்கள்
http://www.arusuvai.com/tamil/node/15022 இந்த லின்கில் பாருங்க. முக்கோணங்கள் மடிக்கும் முறை விவரிக்கப்பட்டிருக்கும்.
பதிலளித்ததற்கு நன்றி ரூபிதினேஷ்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
nice
nice
Give respect and take respect
kulandai wellayaga
pirakkumpodu wellayaga irundan ippo oru madam agudu karuththuttan wellayagawe irukka enna seiyalam
பிரபா
நிறம் மாற நீங்கள் எதுவும் செய்ய முடியாது.
வளரும் போது இன்னும் மாறலாம். வெள்ளையாகவும் வரலாம், சற்றுக் கறுத்தும் போகலாம். குழந்தை வெயிலில் இருப்பது குறைவாக இருந்தால் தோல் கறுப்பது குறைவாக இருக்கும்.
இதைப் பற்றிப் பெரிதாக யோசிக்க வேண்டாம். குழந்தையின் சிரிப்பழகுக்கும் மழலைப் பேச்சழகுக்கும் முன்னால் நிறம் பெரிதா?
கேள்வியைக் கைவினைக் குறிப்பு ஒன்றின் கீழ் வைத்திருக்கிறீர்கள். :)
- இமா க்றிஸ்