பாகற்காய் வறுவல்

தேதி: July 3, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

 

பாகற்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். புளியை திக்காக கரைத்து 2 மேசைக்கரண்டி அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாகற்காயுடன் மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு, 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெந்ததும் நீரை வடிக்கட்டிவிட்டு பாகற்காயை ஒரு தட்டில் எடுத்து வைத்து, மிளகாய் தூள், கடலை மாவு போட்டு புளிக்கரைச்சல் ஊற்றி பிரட்டிவிடவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பிரட்டி வைத்த பாகற்காயை போட்டு நன்கு வதக்கிவிடவும்.
ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி மொறு மொறுவென்று ஆகும் வரை வறுத்து இறக்கிவிடவும். (வறுப்பதற்கு முன் 5 நிமிடங்கள் வெயிலில் உலர்த்தி விட்டு வறுத்தால் மொறு மொறுவென்று இருக்கும்).
சுவையான, மொறு மொறுப்பான பாகற்காய் வறுவல் தயார். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. உமாதேவி குணசேகரன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I was surfing for Bitter Gourd dishes. Felt your dish is interesting. Will be trying it out for sure tomo :)

உளுந்து போட்டு தாளித்து இது வரை செய்தது இல்லை, உளுந்தோட‌ கிறிஸ்பினசோட‌ நல்ல‌ டேஸ்ட். நன்றி.