தேதி: July 4, 2013
விருப்பமான நிற பீட்ஸ்
நூல்
மெல்லிய ஊசி
ஜர்தோசி
எம்ப்ராய்டரி ஃப்ரேம்
விருப்பமான துணி
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ப்ரேமில் துணியை பொருத்திவிட்டு, டைட் செய்யவும். பின் அதில் படத்தில் உள்ளவாறு டிசைனை வரைந்து கொள்ளவும்.

ஜர்தோசியை மாங்காயின் அவுட் லைனில் வைத்து தைத்துக்கொள்ளவும். (அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது முழு நீளமாகவோ வைத்துத் தைக்கலாம்).

அதன் உட்புறம் பீட்ஸை வைத்துத் தைக்கவும்.

சுற்றிலும் மீதிமுள்ள டிசைன்களின் அவுட் லைனிலும் ஜர்தோசியை வைத்துத் தைக்கவும்.

படத்தில் உள்ளது போல் மாங்காயின் நடுவிலுள்ள ஒரு இதழில் பீட்ஸை வைத்துத் தைக்கவும்.

அதனைத் தொடர்ந்து மற்ற இதழ்களிலும் நடுவில் ஒரு கோடு போட்டது போல் பீட்ஸை வைத்து தைக்கவும்.

மாங்காயின் தலைப்பகுதியில் உள்ள டிசைனில் சிறு புள்ளிகள் போல பீட்ஸை தனித்தனியாக வைத்து தைக்கவும்.

மாங்காயின் நடுவில் உள்ள இடத்தில் படத்தில் உள்ளவாறு ஜர்தோசியை மூன்று லைனும், அதன் மேலும், கீழும் இரண்டு வரிகளுக்கு பீட்ஸை வைத்து தைக்கவும்.

இனி இந்த டிசைனை உங்கள் விருப்பம் போல் புடவை அல்லது சுடிதாரில் வைத்து தைத்தால் க்ராண்ட் லுக் கொடுக்கும்.

Comments
Supper. suditharril etha
Supper. suditharril etha mathiri podalama illa thaniya seithu than athil thaikanuma
Sahana elimaiya azaga potu
Sahana elimaiya azaga potu kamichurukiga .desighnum azagu superpa
Be simple be sample
sorry
எனக்கு புதுசா கேள்வி எப்புடி கேகுரதுன்னு தெரியலை அதாலை தான் இங்க கேகுரன் தவறுக்கு மன்னித்துவிடுங்கள் தோழிகளே.. எனக்கு பேபி கிடைக்க என்னும் 2 மாதம் இருக்கு எனக்கு ஆண் குழந்தை பெயர் வேணும் யாரவது உதவி செய்வீர்களா?? அ வில் தொடங்கும் சின்ன நேம் எதிர்பார்கின்றேன் யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவி செய்யவும் அத்துடன் புதிதாக கேள்வி கேட்பதாக இருந்தால் எப்படி முயற்சி செய்யணும் என்பதை பத்தியும் சொன்னால் அடுத்த தடவை தவறை திருத்தி கொள்வேன் தவறுக்கு மன்னிக்கவும் நன்றி
சஹானா
வேலைப்பாடு அழகாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
பீட்ஸ் வொர்க்
பீட்ஸ் வொர்க் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். ஜர்தோசி வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய டிசைன்ஸ் செய்து காட்டுங்க. நாங்க உங்ககிட்டேயிருந்துதான் கத்துக்கணும்.
அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை
dharshini perkalam pahutgila
dharshini perkalam pahutgila poi kaelunga
God's gift everyone
Photo album
Anybody can help me for making Photo album.