தோழியின் கதை - தாமரைச்செல்வி

அறுபடை வீடுகளில் தனித்துவமாய் விளங்கும் கடற்கரையின் மீது அமையப் பெற்ற, சூரபத்மனை வதம் செய்த தலம் என் தோழியின் பிறந்த ஊர். ஏழு பிள்ளைகள் பெற்று நீண்ட ஆண்டுகள் கழித்து அந்த பாசத்தின் விளை நிலத்தில் பிறந்த எட்டாவது வித்து என் தோழி. கடைக்குட்டி என்பதால் எல்லோருக்கும் செல்லம் அவள். வறுமை அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் பாசத்தை வாரி வழங்குவதில் குறை வைக்காத வள்ளல் குடும்பம் அது.

என் தோழியின் உடன் பிறந்தவர்கள் அவளுக்கு அண்ணன், அக்கா மட்டுமல்ல. தாயும், தந்தையுமாகவே இருந்து பாராட்டி சீராட்டி வளர்த்தனர். அந்த மங்கைக்கு திருமணம் செய்து கொடுக்கும் போது தங்களின் விலை மதிக்க முடியாத சொத்து தங்களை விட்டு பிரிந்ததாக மனவருத்தமடைந்தனர். எங்கிருந்தாலும் வாழ்கவென வாழ்த்தினர்.

அவளின் கணவரோ அமைதியின் உருவம். நேர்மையின் சிகரம். அவளை கையில் வைத்து தாங்கினார். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்தது.

என்னங்க...... ஏய் குட்டிமா... எழுந்திரிங்க... வெட்கம் முகத்தில் மின்ன தன் கணவனை எழுப்பினாள்

நான் ஒன்று சொல்லட்டுமா .....

என்ன? என்ற கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தார்.

எனக்கு... எனக்கு...

என்ன? எதாவது வேணுமா?

இல்ல இல்ல ... நான் சொல்ல வந்ததே வேற..

ம்... ம்....... என்னனு சொல்லு..

வந்து... வந்து.... எனக்கு நாள் தள்ளி போயிருக்கு..

அவருக்கு மனது நிறைய சந்தோஷம். சாயந்திரம் டாக்டர் கிட்டே போகலாம் சரியா!!!

கூம்... எதாவது ரியாக்சன் காட்டுறாரா பாரு. சரியான இடிச்ச புளி. மனதிற்குள் சொல்லிக்கொண்டே அக்காவிற்கு போன் செய்தாள். அவரின் மன சந்தோசத்தை யார் அறிவார். சோகமானாலும், சந்தோஷமானாலும் மனதிற்குள்ளேயே வைப்பது ஆணின் வழக்கமாயிற்றே.

அக்கா எனக்கு நாள் தள்ளி போயிருக்கு

ஏய்.. கண்ணு டாக்டர் கிட்ட போனியா? அக்காவின் வார்த்தைகளில் அவ்வளவு சந்தோஷம்.

சாயந்திரம் கூட்டிட்டு போறேன்னு சொன்னாருக்கா...

போயிட்டு வந்து சொல்லுமா.. நல்ல சேதிய எதிர்பார்த்துட்டு இருக்கேன்.

சாய்ந்திரம் ஹாஸ்பிட்டலில் டாக்டரும் கன்பார்ம் பண்ண ஒரே சந்தோஷம். அவளுக்கு குழந்தை பற்றிய கனவுகள் விரிந்தது.

தன் குழந்தை எப்படி இருக்கும்? எப்படி படிக்கும்? என்ன வேலை செய்யும்? கனவுகளுக்கு எல்லையே இல்லை.

ஒரு மாதம் கழித்து ஒருநாள் இரவு குட்டிமா... குட்டிமா... குட்டிமா... எழுந்திரும்மா. லைட்டா வயிற்றை வலிக்கிற மாதிரி இருக்கு.

ராத்திரி தானே கொஞ்சம் வெந்தயத்தை வாயில போட்டுட்டு தூங்கு. காலையில எல்லாம் சரியாகி விடும். அப்படி சரியாகலைன்னா டாக்டர்கிட்ட போகலாம் ....

ம்... சரிப்பா...

அடுத்த நாள் அவர்களுடன் விதி விளையாடும் நாளாகவே துவங்கியது. ஆம் கரு கலைந்துவிட்டது.

ஏம்பா? எனக்கு என்னப்பா ஆச்சி? என்னப்பா செய்யிறது? எனக்கு ஒன்னும் புரியல!!!! கேள்விகளை மட்டுமே சுமந்து சென்றவர்களுக்கு பதில் டாக்டரிடம் கிடைத்தது.

கரு கலைஞ்சி போச்சிம்மா. கவலைப்படாதே... அடுத்தவாட்டி உண்டாகும் போது இங்க வா. அப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கலாம். ஒண்ணும் ஆகாது. கவலைப்படாதே சரியா.

சரி டாக்டர்....

ஏன் டாக்டர் இவளுக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?

ஒண்ணும் இல்லப்பா. ஆனா ரொம்ப வீக்கா இருக்கா.

ஏம்மா சரியா சாப்பிடுறியா ? இல்லையா?

இல்ல டாக்டர்.. வீட்ட பிரிஞ்ச வருத்தத்திலேயே சாப்பாடு உள்ளே இறங்கமாட்டேங்கிது.

நல்ல பொண்ணும்மா நீ. நான் சொல்லுறத நல்லா கேளு. கல்யாணத்துக்கு முன்பு வரைக்கும் நாம அழகுக்கு குடுக்குற முக்கியத்துவத்தை உடம்புக்கு கொடுக்கிறதில்ல. இள வயசுங்கிறதாலே சத்து குறைபாடு ரொம்ப பெரிசா தெரியாது. அதுல அக்கறையும் எடுத்துக்கிறது இல்ல. ஆனா பெண்கள் சரியாய் சாப்பிடாம சத்தில்லாம இருந்தா, குழந்தை உண்டாவதிலும், கர்ப்பகாலத்திலும், பிரசவத்தின் போதும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

பிறக்கும் குழந்தை நோஞ்சானா பிறக்கவும், குறைபாட்டுடன் பிறக்கவும் வாய்ப்பிருக்கு. குழந்தை பெற்றால் மட்டும் போதாது, பிறக்கும் போதே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், திடகாத்திரமாகவும் இருக்கணும். இல்லன்னா குழந்தை பிறந்த பிறகு ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் தான் அலையணும். பெண்களோட அஜாக்கிரதையினால பின்னாடி குழந்தைகளும் கஷ்டப்படவேண்டியிருக்கு. திருமணத்துக்கு முன்னாடியே நம்ம உடலையும், மனசையும் குழந்தைப் பேறுக்காக தயார் பண்ணி வைக்கிறது உன்னோடது மட்டுமில்ல ஒரு தாயோட கடமையும் கூட என்ன புரிஞ்சுதா?

ம்....என்று தலையாட்டிவிட்டு வெளியே வந்த அவளுக்கு டாக்டர் சொன்னதை நினைத்து உடம்பே விதிர்த்து விட்டது.

நான் எவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கிறேன். அம்மா எவ்வளவோ சொன்னாங்க. நான் தான் கேட்கவில்லை. சரியாக சாப்பிடுவதில்லை. சாப்பிட்டாலும் காய்கறியெல்லாம் ஒதுக்கி வைப்பது. கோபப்பட்டு பட்டினியாய் கிடப்பது. அடடா!!! இதனால் யாருக்கு என்ன கிடைத்தது? எனக்கு தான் நஷ்டம். இனிமேலாவது ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

சில மாதத்திற்கு பிறகு அம்மா ஊரில் பங்குனித் திருவிழா தொடங்கியது. சந்தோசமாய் ஊருக்கு சென்றாள்.

ஏ......பொண்ணு எப்படி இருக்க? ஆளு முன்ன இருந்ததுக்கு இளைச்சிட்டியே. என்ன எதாச்சும் விசேசமா?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லம்மா

என்னம்மா இப்பதான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா? என்ன ....விசேசமா? வயிறு கொஞ்சம் பெரிசா தெரியர மாதிரி இருக்கு?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லக்கா. இது ஒம் பிள்ளையாக்கா? குடுக்காபார்த்திட்டு தாரேன். வாடா செல்லம்.... என்று கையை நீட்டினாள்.

இல்லம்மா கொஞ்சம் அவசரமா போறேன். அப்புறமா வீட்டுக்கு வாரேன் என்ன....

சரிக்கா அப்படியே உங்கம்மாவை விசாரிச்சேன்னு சொல்லுக்கா... சரிடியம்மா....

சிரித்துவிட்டு விரைவாக வீடு நோக்கி நடந்தவள் மனதில் எதோ நெருட திரும்பிப் பார்த்து மனம் குறுகிப் போனாள்.

ஆம் அவளின் காலடி மண்ணை எடுத்து தன் பிள்ளைக்கு சுற்றிப் போட்டுக் கொண்டிருந்தாள். மனம் கன்றிப் போனவளாய் குனிந்து கொண்டே வீட்டிற்குச் சென்றாள்.

நான் என்ன அவள் பிள்ளையைப் பார்த்து பொறாமைப்படவா போறேன். ச்ச ....என்ன மனிதர்களோ.. மனதிற்குள்ளேயே பேசிக் கொண்டு வந்தவளின் சிந்தனைகளை அக்காவின் குரல் கலைத்தது.

வந்துட்டியாம்மா... பிள்ளைகளை பாத்துக்கம்மா. கொஞ்சம் பக்கத்திலே போய்ட்டு வந்திடுறோம்.

சரிக்கா....

அம்மாவிடம் திரும்பி அம்மா எல்லோரும் எங்க போறாங்க?என்ன விசேஷம்?

பொண்ணுகளா நீங்கெல்லாம் போங்க. என்று பிள்ளைகளை அனுப்பிவிட்டு, நம்ம செல்லம்மா பொண்ணுக்கு வளைகாப்பு. அதான் எல்லோரும் போறாங்க. நீயும் போனின்னா எல்லோரும் விசாரிக்கிற சாக்குல உன்ன நோகடிச்சிடுவங்க தாயி. சொல்லும் போதே தாயின் கண்களும் ஆற்றாமையினால் கலங்கியது. அதை மறைத்துக்கொண்டு தாயி நான் துணிய காயப்போட்டுட்டு வந்திடுறேன்.

வீடே நிசப்தமாயிருந்தது. மனதைத் தவிர. இன்னும் யார் யாரிடமெல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டுமோ!!! பிள்ளை இல்லன்னா என்ன? நானும் மனுசி தானே. கல்யாணத்துக்கு முன்பு வரை என்னை இப்படி ஒதுக்கி வைக்கவில்லையே? இப்போ நான் என்ன செஞ்சேன்னு என்னை ஒதுக்கி வைக்கிறார்கள்? இந்த ஊர்ல இருக்கிற பொறாமை பிடிச்சவங்க, கோள் மூட்டுரவங்க, அடுத்தவங்க நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க எல்லோருமே வளைகாப்புக்கு போறாங்க. என்ன அவங்களை விட மோசமானவளா நான்? யோசிக்க யோசிக்க மனசே பைத்தியமாகிவிடும் போல இருந்தது.

அதுவரை கலகலப்பாய் பேசுவதில் தேர்ந்தவள் என்று பெயர் வாங்கியவள். அன்றிலிருந்து மௌனமாகிப் போனாள். திருவிழா முடிந்து வீடு திரும்பியவளுக்கு வீடே சிறையாகத் தெரிந்தது. எல்லாம் சூன்யமாகிவிட்டது. ஏன் எனக்கு மட்டும் சாவே வரமாட்டேங்குது? ஏ கடவுளே ஒண்ணு பிள்ளையைக் கொடு. இல்ல என்ன எடுத்திட்டு போயிடு என்று வேண்ட ஆரம்பித்தாள்.

வரும் வருமானத்தில் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தும் அவள் குழந்தைக்காக ஹாஸ்பிட்டல், கோயில் என அலைந்து சலித்து விட்டாள். எட்டு வருடங்கள் ஓடி விட்டது.

பக்கத்து வீட்டிற்கு ஒரு குடும்பம் புதிதாக குடி வந்தது. கணவன், மனைவி, ஒரு 3 வயது குழந்தை. துறு துறுவென்று இருக்கும். அந்த குழந்தையை பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. தூக்க தயக்கமாயிருக்கும். அந்த பெண்ணிடம் சில மாதங்களிலேயே நன்றாக பழக ஆரம்பித்து விட்டாள்.

மனதிற்குள் ஏக்கம் வர ஆரம்பித்தது. இந்த பெண்ணிற்கு குழந்தை இருப்பதால் தான் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற எண்ணமும் தோன்றியது.

ஒரு நாள் அந்தப் பெண்ணிடம் தன் சோகக் கதையை சொன்னாள். அந்த பெண்ணிற்கு கவலையாக இருந்தாலும் என்னக்கா இதுக்காகவா இப்படி கவலையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா. கவலையா, மனசில பதட்டம், ஏக்கமின்னு, இருக்கிறது குழந்தையின்மையை அதிகப்படுத்தும். உங்களுக்கு எப்ப குடுக்கனுமின்னு கடவுளுக்குத் தெரியும்.

எங்களுக்கு எத்தனையோ இடர்கள் வந்திருக்கு. என் பையனை வளர்க்க முடியுமா என்கிற அளவுக்கு எங்களுக்கு பிரச்சனைகள் இருந்திச்சு. அதையெல்லாம் சொன்னா நீங்க அழுதிடுவிங்க. ஆனா நாங்க எந்த பிரச்சனையையும் பக்கத்தில் வைத்து பார்க்கிறதில்லை.தூரத்துல வச்சிடுவோம். கஷ்டமும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான்கா ஒரு கூனன் எப்படி காலம் முழுவதும் கூனைத் தன் முதுகில் தூக்கிக் கொண்டு அலைகிறாரோ. அதைப் போலத்தான் வாழ்க்கையில் கஷ்டத்தையும் தூக்கிக்கிட்டு அலஞ்சுதான் ஆகனும். வேதனையும் வலியும் எந்த ரூபத்திலாவது எல்லாருக்கும் இருக்கும். அது குழந்தை இல்லாமலோ, குழந்தையை இழந்தோ, பணம் இல்லாமலோ, வறுமையாகவோ, நோயாகவோ, ஊனமாகவோ இருக்கலாம். உங்களை குறை சொல்கிற, குத்திப் பேசுற நாலு பேர் மட்டும் உலகம் இல்ல அக்கா சந்தோஷம் உங்க பக்கத்திலேயே இருக்கு. உங்க வீட்டுக்காரரைத்தான் சொல்றேன். அதை நினைச்சி சந்தோசப்படுங்க. இல்லாததுக்கு ஏங்காதிங்க. கடவுளுக்கு தினமும் எதாவது ஒரு நன்றி சொல்லுங்க.உங்கள சுத்தி நல்ல மனுசங்களா உருவாக்குங்க. கண்டிப்பா உங்களுக்கு கடவுள் நல்லதையே செய்வார். ஆனா உங்க மனசில குப்பையை சேர விடாம இருக்கிறது உங்க கையில்தான் இருக்கு.

சரிக்கா நான் வரேன். சமைக்கணும்.

அவள் போன பிறகு சிந்திக்க ஆரம்பித்தாள். ச்ச .......நான் நேர்மறையான எண்ணங்களை மனசில விதைக்கிரத விட்டிட்டு எதிர்மறையா எல்லார் சொல்ற குப்பைகளையும் மனசுல அள்ளிப் போட்டுட்டு இப்படி குப்பைத் தொட்டியா வச்சுட்டனே!!! என்ன மட்டுமில்லாமல் என் வீட்டுக்காரரையும் அப்படி இருக்க வச்சுட்டேன். இனிமே எதுக்காகவும் கவலைப்பட போறதில்லை.என்ற முடிவோடு எழுந்திரித்தாள், பால் பாயசம் செய்ய.

நாட்கள் ஓடின. ஒருநாள் திடீரென மயக்கம் போட்டு விழுந்தாள். ஹாஸ்பிட்டலில் டாக்டர் பரிசோதித்து விட்டு வெளியே வந்தார்.

தோழிகளே வேண்டிக் கொள்ளுங்கள். இப்பவாவது டாக்டர் நல்ல செய்தி சொல்லவேண்டுமென்று.

Comments

ரொம்ப ரொம்ப அருமைங்க, முதல் கதையா? முடிவும் மிக அருமைங்க, வாழ்த்துக்கள்'ங்க :-)

நட்புடன்
குணா

good

கதை எழுதியிருக்கிறேன். அது கதை மாதிரி இருக்கான்னு தெரியல.
கதை மாதிரி இருப்பதை கதை என்று நினைத்து வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி குணா

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

முதல்கதை மிகவும் நன்றாக எழுதியிருக்கீங்க. தாய்மைக்காக ஏங்குறதோழிகள் இங்கே நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் அழகா எல்லாவற்றையும் உங்க கதை மூலமா எடுத்து சொல்லிட்டீங்க. தொடர்ந்து உங்கள் கதைகளை எழுதிட வாழ்த்துக்கள்.

பல முறை இந்த கதையை படிக்க உட்கார்ந்து நேரம் இல்லாமல் பாதியில் விட்டு போயிருவேன். இன்னைக்கு முழு மூச்சா உட்கார்ந்து படிச்சுட்டேன். :) ரொம்ப அருமை. முதல் கதை முத்தான கதை. ஒவ்வொரு அட்வைஸும் உண்மை. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Naanum padikka varumpothellam ninaipan..thavariney iruthathu innaiku muzusa padichutaen.super...mudivum arumai...thodarthu ezuthuga thamarai.
.

Be simple be sample

தாமரை
முதல் கதையா இது.ரொம்ப அருமை.
சொன்ன விதம்,துவக்கம்,முடிவு எல்லாமே அருமையா வந்திருக்கு வாழ்த்துக்கள்

ராஜஸ்ரீ ரொம்ப நன்றி.
\\தாய்மைக்காக ஏங்குறதோழிகள் இங்கே நிறைய பேர் இருக்காங்க\\
ஆமா அவர்களுக்காகத்தான் எழுதினேன்
கல்யாணத்துக்கு பிறகு சத்தான உணவுக்கு அக்கறை கட்டுபவர்கள், கல்யாணத்துக்கு முன் இப்படி செய்வதில்லை. அந்த ஆற்றாமையினாலும், அக்கறையினாலும் தான் இந்த கதையை எழுதினேன்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வனி ரொம்ப நன்றி
எனக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைச்ச மாதிரி இருக்குது.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரேவதி ரொம்ப நன்றி
நிஜமாவே வேண்டிக்கோங்க நல்லது நடக்கனுமின்னு

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நிகிலா ரொம்ப நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

தாமரை நல்ல கதை... அருமையான கருத்துகளை சொல்லியிருகீங்க. மனம்தான் நம்ம முதல் எதிரி அதை சரியா வச்சிகிட்டா எல்லா பிரச்சினையும் தூசுதாங்கிறதை அருமையா சொல்லியிருகீங்க. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்க.... அடுத்த கதை எப்போ???????

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி உமா.
எனக்கு கதையெல்லாம் எழுத வராது. இங்கே தாய்மைக்காக ஏங்கும் தோழிகளை பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் தான் எழுதினேன்.
இதை கதையாக ஏற்றுக் கொண்டதற்கு ரொம்ப நன்றி

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

குட்டி அடவைஸோட, நல்லா இருக்கு கதை.

‍- இமா க்றிஸ்

enakkum 4 years aaguthu. child illa. inemae naan kavalaipadamattaen.

இமா இன்னைக்கு தான் பதிவைப் பார்த்தேன். நன்றி இமா

சாந்தி கடவுளுக்குத் தெரியும். எப்போ கொடுக்கனுமின்னு. கவலைப்படாதிங்க. உடம்பை ஆரோக்கியமா வச்சிருங்க. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ஹாய் தாமரை.....அருமையான‌ கதை........எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.......

Anbudan,
Viji

நன்றி விஜயா.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை