தேதி: July 6, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முட்டை - 3
தேங்காய் - கால் கப்
ஊறவைத்த முந்திரி - 5
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி (கலவை தூள்) - 3 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைந்து வந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.

ஊற வைத்த முந்திரியுடன் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

முந்திரி விழுதை கொதிக்கும் கலவையில் ஊற்றவும். ஒரு கொதி வரத் துவங்கும் போது முட்டையை ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் உடைத்து ஊற்றி மூடி வேகவிடவும். முட்டை கலந்து வர விரும்பினால் 2-3 நிமிட இடைவெளியில் திறந்து கலந்துவிட்டு மீண்டும் மூடி வேகவிடலாம். இல்லையெனில் முழுவதும் வேகும் வரை கலக்காமல் வேகவிடவும்.

முட்டை வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டைக்கறி தயார்.

Comments
முட்டைகறி
ஹாய் வனி அக்கா நல்லா இருக்கீங்களா இந்த முட்டைகறி செய்தாச்சு ரொம்ப நல்லா இருந்தது படத்தோட இந்த குறிப்பு சூப்பரா இருக்கு நன்றி
வனி அக்கா சூப்பர்.....
வனி அக்கா சூப்பர்..... நாளைக்கு முட்டைக் கறிதான்.... செஞ்சிட்டு எப்டி இருந்ததுன்னு சொல்றேன்...... மணிப்புட்டு பத்தி கேட்டிங்களா?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வணி அக்கா
முட்டை கறி எப்பயோ செய்தாச்சு பதில் போட முடியவில்லை மிக அருமையாக இருந்தது....
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
வனி அக்கா
அக்கா முட்டை கறி செஞ்சேன் சூப்பரோ....சூப்பர். நான் எப்பவும் முட்டையை அப்டியே வேகவிட்டுதான் எடுப்பேன். இப்ப நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் நல்லா இருந்தது....
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
முட்டைக்கறி..
வனிதா,
இன்றைக்கு செய்தாச்சு..அருமை...என் கெஸ்ட் விரும்பி சாப்பிட்டாங்க...குறிப்புக்கு நன்றி...
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
நன்றி அன்பு டீம்
குறிப்பு பொசுக்கு பொசுக்குன்னு போட்டு என்னை திக்குமுக்காட வைக்கும் அன்பு டீம்... :) நன்றி நன்றி நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
வனி அக்கா யம்மி ரெசிபி ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு .....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
நஸ்ரீன்
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா
மிக்க நன்றி :) மணிப்புட்டு கவிசிவாக்கு தெரியுமாம். ஆனா அவங்க ஊரில் இல்லை. வந்ததும் சொல்லி தருவாங்க உமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஃபரிதா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
உமா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ராஜி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி அக்கா
நன்றி அக்கா...
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வனி
வனி முகப்புல பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சி இது உங்க குறிப்புதான்னு :) முட்டைக்கறி ரொம்ப ஈசியாவும் அருமையாவும் இருக்கு வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி,
உங்க முட்டைக்கறி சூப்பர்ர்ர்!! எக் க்ரேவில வழக்கமா தேங்காய் அரைச்சி விட்டு செய்தது கிடையாது. இந்தமுறை உங்க மெத்தட்ல செய்தேன். வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது, எனக்கும்தான்! :-) வீக்கென்டே செய்திட்டேன், வந்து சொல்லதான் லேட் ஆகிடிச்சு. நன்றி!
அன்புடன்
சுஸ்ரீ
thanks unga kurippa senju parthen super ah irunthuchu
thank you
சுஸ்ரீ
ஆகா.... ரொம்ப நாளைக்கு பின் வந்ததுக்கு உங்க பதிவின் தரிசனம் கிடைச்சிருக்கு ;) நன்றி சுஸ்ரீ.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அமுதா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
முட்டை கறி
இன்று உங்கள் முட்டை கறி செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. என் கணவரும் நல்லா இருக்குன்னு சொன்னாரு. ரொம்ப நன்றி.
ரஞ்சினி
செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா