இன்னும் ஒரு செஞ்சுரியன். டோனி ரேஞ்சுக்கு அடிச்சு நொறுக்கி தள்ளிவிட்டார். இப்பதான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தார். அதற்குள் நூறை தொட்டாயிற்று. இதுல சிறப்பு என்னன்னா.. நூறும் அசைவ குறிப்புகள். சாதனைதான். Great Mrs. Manohari Madam!! Congrats..
இன்னும் ஒரு செஞ்சுரியன். டோனி ரேஞ்சுக்கு அடிச்சு நொறுக்கி தள்ளிவிட்டார். இப்பதான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தார். அதற்குள் நூறை தொட்டாயிற்று. இதுல சிறப்பு என்னன்னா.. நூறும் அசைவ குறிப்புகள். சாதனைதான். Great Mrs. Manohari Madam!! Congrats..
நன்றி
மிகவும் நன்றி Mr.பிரவீன், நிஜமாகவே கிரிகெட் விளையாடி நூறு ரன் எடுத்ததைப் போல் இருந்தது தங்கள் பாராட்டு.ரொம்ப தாங்ஸ்.
Congrats..
Dear Manogari
Ungalukku Enathu Anbaana Vaazhthukkal....
Ungal samaiyal anubavam pattri solla mudiumaa??.
sajuna
நன்றி
மிக்க நன்றி சாஜுனா.
என் சமையல் அனுபவத்தை பற்றி கேட்டிருந்தீர்கள்,மிகவும் மகிழ்ச்சி.கட்டாயம் சொல்கின்றேன்.பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்று தான் தன் சமையல் அனுபவத்தைக் கூற கேட்டிருக்கின்றேன்,ஆனால் என் அனுபவத்தில் வெளிநாடு வருவதற்கு முன், வந்த பின்.என்ற நிலை.பள்ளிக்குச் செல்லும் வயதிலேயே திருமணம் ஆகிவிட்டபடியால் என்னை எந்த அளவிற்றிகு சோம்பேறி ஆக்க முடியுமோ அந்த அளவிற்க்கு இரண்டு வீட்டாரும் சேர்ந்து சோம்பேறியாக்கி விட்டார்கள்.என் குழந்தைகளை பராமரிக்கும் வேலை மட்டும் தான் என் முழு நேர வேலையாக இருந்தது.வெளி நாடு வந்த பின்பு தான்,பொருப்புக்கள் ஒரு பெரிய இடியாக இறங்கியது.ஒன்றுமே புரிய வில்லை.தனிமையில் மிகவும் திண்டாடி விட்டேன்.வேறு வழியில்லாமல் நானாகவே எனக்கிருந்த சமையல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். ஒரு சோறு ஒரு குழம்பு செய்யவே ஒரு நாள் எடுத்த நான்,இப்பொழுது ஒரு மணி நேரத்தில் பத்து உணவு வகைகளை தயார் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு காலத்தில் என் சமையலை எனக்கே பிடிக்காது.என் கணவரிடம் பரிசோதித்து விட்டு தான், அதுவும் அவர் ஒகே சொன்ன பிறகு தான் நான் சாப்பிடும் நிலை இருந்தது, இப்பொழுது என் சமையலுக்கு நானே விசிறியாகி விட்டேன்.சமையலில் எனக்கு பிடித்தது எதையுமே ருசியாக சமைப்பது.பிடிக்காதது ஒரே மாதிரியாக சமைப்பது. விட்டால் இன்னும் எழுதிக்கொண்டே இருப்பேன் ஆகவே இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.என் சமையல் அனுபவத்தைக் கேட்டு என்னை அசைப்போட வைத்த உங்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி.
வாழ்த்துக்கள் மனோஹரி
வாழ்த்துக்கள்
உங்கள் சமையல் குறிப்புகளைவிட நீங்கள் சமையல் கற்றுக்கொண்ட அனுபவக்கதை நன்றாக இருந்தது. வெளிப்படையாக எழுதியிருந்தது மிகவும் பிடித்தது. ஆனால் உங்கள் குறிப்புகள் ஒன்றுகூட எனக்கு பிடிக்கவில்லை. கோபம் வேண்டாம். நான் சுத்த சைவமாக்கும். :) அடுத்த நூறை சைவமாக கொடுத்துவிடுங்கள்.
நன்றி
அன்பு சன்கராவிற்கு நன்றிகள் பல.
தங்கள் கருத்தினைக் கண்டு கோபப்படவில்லை, அதைவிட அதிர்ச்சியாகிவிட்டேன். ரசித்து ரசித்து செய்து உண்ட குறிப்புகளாயிற்றே, ஒன்று கூட பிடிக்காமல் போனதன் காரணம் என்ன என்று. பின்பு தொடர்ந்து வந்த வார்த்தையைக் (சைவமாக்கும்) கண்ட பிறகு தான் சம நிலைக்கு வந்தேன்.மன்னிக்கவும் அசைவ குறிப்புகள் மட்டுமே எழுதுவேன் என்று நான் நினைக்கவில்லை.ஆனால் எழுத தொடங்கினதும் அனுமார் வால் போல் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. கட்டாயம் அடுத்து சைவ குறிப்புகளையும் எழுதுவேன். நன்றி.
வாழ்த்துக்கள்
உங்கள் சமையல் அனுபவம் படித்து ஆச்சிரியமாக இருந்தது.வெளி நாடு
வந்த பின்பு ஏற்பட்ட அனுபவமா...!!!!!!!!!!!!
உண்மையில் பாராட்டபட வேன்டியது.(ஒரு சோறு ஒரு குழம்பு செய்யவே ஒரு நாள் எடுத்ததாக சொன்னிர்கள்.இப்பொழுது ஒரு மணி நேரத்தில் பத்து உணவு வகைகளை தயார் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன் )இதை படித்து வியப்பாக இருந்தது..
உங்கள் விடாமுயற்சி ,ஆர்வம் இந்த வெற்றியை கொடுத்திருக்கிரது.உங்கள் அனுபவத்தை எங்களிடம் சொன்னதற்க்கு மிகவும் மகிழ்ச்சி
என்னுடைய வாழ்த்துகள்
sajuna
dear manohari
Dear Manohari
Engalai pondra samaiyal intrest ulla penkalukku
Ethum advice solla mudiumaa
Ungkalai pola intrest erukirathu.
Athai eppadi valarthukkolvathu.
Entha kelvi kekkalaamaa! kudaathaa !endru
theriyavillai ?
Aanaalum kekka ninaikiren.
ketkiren.
sajuna
சமையலில் ஆர்வம்
அன்பு சாஜுனாவிற்கு அறிவுரை சொல்லும் அளவிற்க்கு நான் ஒன்றுமேயில்லை, ஆனால் அனுபவங்கள் நிறைய்ய உள்ளன.அதை, நீங்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க சமையலில் ஆர்வத்தைப் பற்றி பகிர்ந்துக் கொள்கின்றேன்.
1.சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் அதைக் கற்றுக்கொள்வதற்கு முன் எந்த உணவினையும் ரசித்து சுவைக்க பழகிக் கொள்ள வேண்டும்.
2.சமையலை நாம் கஷ்டபட்டு வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. அக்கறை, பொறுமை, அன்பு ஆகிய உணர்வுகளோடு சமையல் அறைக்குள் சென்று சமைப்பவர்களுக்கு அது தானாகவே வளரும், சந்தேகமேயில்லை.
3.இந்த அவசர உலகத்தில் சமையலுக்கு மிகவும் முக்கியம் முன் தயாரிப்பு முறை.அதாவது நறுக்குதல், அரைத்தல், பொடித்தல், இவைகள் இல்லாமல் நம்மூர் சமையல் கிடையாது.ஆகவே அதன் முக்கியத்தை அறிந்து தேவயான அடிப்படைத் தேவைகளை முன்பே தயாரித்து குளிர் சாதன பொட்டியில் வைத்து விட வேண்டும்.(மீந்த பொருட்களை வைக்க தான் குளிர் சாதன பெட்டி என்று எண்ணியிருந்தது ஒரு காலம்).
4.சமையலை செய்து செய்து டப்பாவில் அடைத்து வைப்பதை தவிர்த்து விட்டு, அதற்கு தேவையான பொருட்களை, பதார்தங்களை வெங்காயம் உட்பட அனைத்தையும் முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது எடுத்து ஐந்து நிமிடத்தில் ஒரு உணவை புதிதாக செய்து சாப்பிடலாம்.
5.குறைந்தது ஒரு வாரத்திற்கு வேண்டிய உணவிற்காவது அதன் பாதி சமையலை முன்பே செய்து வைத்து விடவேண்டும்.சாம்பாருக்கு வேண்டிய பருப்பை கூட சிறிது எண்ணெய் சேர்த்து வேகவைத்து வைத்து விடுவேன்.பத்து நாட்கள் ஆனாலும் கெடாது.
6.நேரமின்மை தான் சமையலை கஷ்டபடுத்துகின்றதே தவிர சமையல் நம்மை கஷ்டபடுத்துவதில்லை.பெரிய உணவகங்களுக்கு சென்று சாப்பிடும் பொழுது கூர்ந்து பார்தோமானால் தெரியும் அதில் சேர்க்கபட்டுள்ள பொருட்களும், அதன் செய்முறைக்கூட நம் வீட்டில் செய்வது போல் தான் பெறும்பாளும் இருக்கும். ஆனால் அவைகள் பரிமாறும் விதம், அலங்கரித்த விதத்தில் தான் வேற்றுமை இருக்கும்.ஆகவே சமையலறையில் நிற்க்கும் நேரத்தை மிச்சப் படுத்தி மற்றதிலும் கவனம் செலுத்தி நட்சத்திர ஹோட்டலின் அட்மாஸ்பியரை வீட்டிலேயே செய்து எல்லோரையும் அசத்தலாம்.அசத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
பின் குறிப்பு : எதற்காக இதைக் கேட்க தயங்குநீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மனோஹரி.........
நன்றி...