"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனா?மகளா?"

பட்டிமன்றம் - 92க்கு நடுவராக இருந்து பணியாற்றப்போகிறேன்.அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்...
தலைப்பு நம் தோழி "இந்திரா கணேஷன்"அவர்களுடையது.தலைப்பிற்கு நன்றி இந்திரா..

தலைப்பு இதோ,

"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனா?மகளா?"

பட்டி விதிமுறைகளை கடைபிடிக்கவும்.மன்ற விதிமுறைகளும் பட்டிக்கு பொருந்தும்.
பெயர்சொல்லி அழைக்ககூடாது.
சாதிமத தளுவல் பேச்சுகள் இருக்க கூடாது.
மற்றவரை குறிப்பிட்டு தாக்கி பேசுதல் கூடாது.
நாகரிகமான பேச்சுகள் அவசியம்....
ஓக்கே பட்டி துவங்கியாச்சு...வாங்க உங்களின் வாதங்களுடன்...

ஸ்டார்ட் மியூஸிக்.......
பட்டி ஆரம்பிச்சாசுங்கோ....வந்து அழகா அணி தேர்வு செய்து பதிவுபோடுங்கோ....அட வாங்கோ வாங்கோ.....காங்கோ ஜூஸ் ரெடியா இருக்குது.....

வணக்கம் நடுவரே... காலங்காத்தால பார்த்தேன் எங்கடா நேரமே வரேன்னு சொன்ன நடுவரை இம்புட்டு நேரமா காணோம்னு ;) வந்துடீங்க... ஆனா தப்பான கேள்வியோட. பின்ன... என்னா சந்தேகம் நடுவரே இதெல்லாம்... எப்பவும் மகளால் தான் மகிழ்ச்சியே.

எப்பவும் அப்பா, அம்மான்னு அன்பு மழை பொழிந்து, தனக்கு அடுத்து பிறக்கும் பிள்ளைக்கு ஒரு தாயாக இருந்து, வீட்டுக்கு நேரமே வந்து வீட்டு வேலைகளை தாய்க்கு உதவி செய்து, கல்யாணம் பண்ணி பார்க்கும் மகிழ்ச்சியையும் தந்து, பின்னாளில் முடியாம போனா தன் தாய் தந்தைன்னு ஓடி வருபவள் அவளே. இதுல உங்களுக்கென்ன டவுட்டு???!!!

அதெல்லாம் விட நடுவரே... சின்ன சின்ன விஷயம் கூட பெண் பிள்ளைகள் விஷயத்தில் அழகு தான்.. அழகழகாய் ஆடை போட்டு பார்ப்பது, நகை போட்டு பார்ப்பது, சீவி சிங்காரித்து பூ வைத்து பார்ப்பது, மருதாணி வைத்து அழகு பார்ப்பது என பெண் பிள்ளை விஷயத்தில் எல்லாமே மகிழ்ச்சி தானே?

எப்படியோ... ஜெயிக்க போறது நாங்கதேன்... எதிர் அணி வருமோ? டவுட்டு தான் ;) ம்ம்... வாழ்த்துக்கள் நடுவரே.

ஆங்... அப்படியே அந்த காங்கோ ஜூஸை நீங்களே குடிச்சுட்டு தெம்பா இருங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூவொன்று புயலானதுபோல மகள்களுக்காக வாதாட வந்துட்டாங்க வனி.....
அசத்தல் ஆரம்பம்..வாழ்த்துக்கள் வனி நீங்க சந்தேகத்திற்கு இடமில்லாமல் மகளே அணியா?சந்தோஷம்....
//எப்பவும் அப்பா, அம்மான்னு அன்பு மழை பொழிந்து, தனக்கு அடுத்து பிறக்கும் பிள்ளைக்கு ஒரு தாயாக இருந்து, வீட்டுக்கு நேரமே வந்து வீட்டு வேலைகளை தாய்க்கு உதவி செய்து, கல்யாணம் பண்ணி பார்க்கும் மகிழ்ச்சியையும் தந்து, பின்னாளில் முடியாம போனா தன் தாய் தந்தைன்னு ஓடி வருபவள் அவளே. இதுல உங்களுக்கென்ன டவுட்டு???!!!//
அப்போ குடும்ப மகிழ்ச்சியில் மகன்களின் பங்கு அம்போவா?!

//சின்ன சின்ன விஷயம் கூட பெண் பிள்ளைகள் விஷயத்தில் அழகு தான்.. அழகழகாய் ஆடை போட்டு பார்ப்பது, நகை போட்டு பார்ப்பது, சீவி சிங்காரித்து பூ வைத்து பார்ப்பது, மருதாணி வைத்து அழகு பார்ப்பது என பெண் பிள்ளை விஷயத்தில் எல்லாமே மகிழ்ச்சி தானே?//

ஆமாமாம்.....டிரஸுக்கு மேட்சா வளையல்,கம்மல்,கழுத்தணி கொலுசு,பொட்டுகூட மேட்ச்.... ஜொலிப்பாங்க பெண்பிள்ளைங்க...அதுக்குமேல இந்த மருதாணி இருக்கே.......அவங்களுக்கே அவங்களுக்குன்னு.....அடாடா.....சரியாச் சொன்னீங்க போங்க.....

ஆரம்ப்பம் அசத்தலோட இல்லாம, எதிர் அணி வருமான்னு வேற கேட்டிருக்காங்க....என்ன வருவீகள்ள?பின்ன யாரு நடுவர குழப்புறதுன்னு ஒரு மயிண்டு வாயிஸ் கேக்குது.அதை சீக்கிரமா பதிவிடுங்க......
(நேற்று இரவே தலைப்பு கொடுத்திடலாம்னு இருந்தேன்,கரண்ட் சதி பண்ணிடுச்சு....:-(0)

வணக்கம் நடுவர் அவர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகளே அதில் சந்தேகமே இல்ல.மகள் என்றால் டென்ஷன் நமக்கு வேண்டாம்.மகன் வெளியில் போனால் என்ன ப்ரச்சனை இழுத்துவிட்டு வருவானோ என வயிற்றில் புளி கரைத்துவிட்டு இருக்க வேண்டும்.பெற்றோருக்கு உடம்பு முடியவில்ல என்றாலும் நல்ல கவனிப்பது மகள் தான்.நம்மிடம் தோழியாகவும்,அம்மாவாகவும் இருப்பது மகளே.எனவே என் ஓட்டு மகளுக்கே.
அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

நீங்களும் மகளே அணிக்கு ஓட்டு போடரீங்களா?மகிழ்ச்சி மேலும் உங்களின் வாதங்களை எடுத்துவையுங்கள்.......
என்னப்பா மகனே அணிக்கு இன்னும் யாரையுமே காணோம்....:-(

முதல் நாளே உள்ள அனுப்பிட்டீங்களே இது நியாயமா?நடுவர குழப்ப ஆளில்லையா? வாங்க இரு அணிகளும்......

இதையே தான் நானும் கேட்க நினைச்சேன் :( ஏன் ஏன் ஏன் இப்பலாம் இப்படி பட்டிமன்றம் தூங்குது? முன்ன வெகேஷன்.. இப்ப என்னாச்சு? அக்கா, சீதா, லாவி, ரம்யா, சுகி, இளவரசி, சுமி, கவிசிவா, சுவா, தாமரை, கல்பனா, உஷா, ஷேக், குணா, ரேவ்ஸ் எல்லாரும் எங்க போயிட்டீங்க... வாங்க இந்த பக்கம். இப்படியே தொடர்ந்து பட்டி டல்லடிச்சா நல்லா இல்ல மக்களே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழீஸ் அண்டு தோழர்ஸ் வாங்க வனி பெயர் சொல்லி அழைத்திருக்காங்க.....பெயர் விடுபட்டவங்களும்,புது நபர்களும்கூட பட்டியில் தாராளமா கலந்துக்கலாம். இருவாரம் கழித்து துவங்கிய பட்டி இப்படி தூங்கினால் நல்லா இருக்குமா? எங்கே புலவர் ஷேக்,மண்ணின் தோழர் தவம்ஸ் மேலும் அனைவரும் வந்து கலந்துகொள்ளுங்கள்.

நடுவருக்கு வணக்கமும்,வாழ்த்தும் சொல்லிட்டு உள்ளுக்கு வரேனுகோ

.
வெளிய நின்னு வேடிக்கை பாருத்துட்டு போகலாம்னு நினைச்ச இப்படி குபிட்டு போட்டிங்களே...

எனக்கு எந்த அணி எடுக்கர்து ஒரே கொயப்பமா கீது..ஆனா ஒரு சீட்டு போடலாம்னு வந்தேன்....
அணி முடிவி பண்ணிட்டு அப்பாலிக்கா வாரனுங்கோ...

Be simple be sample

அது அணி (வேறு வழி இல்லாமல்) மகனே...மகனே.... மகனே...

பாருங்க சொல்லும் போதே எப்படி மகிழிச்சி பொங்குது..மகன் பிறந்துட்டாலே குடுப்பத்துல இருக்குற எல்லாருக்கும் இந்த உலகத்தையே ஜெயிச்சா மாதிரி கொண்டடாடறாங்க (எங்க வீட்டுல சத்தியமா இல்லைங்க)

குழந்தைக்கு நகை ,நட்டு,பொட்டு வச்சாதான் அழகுங்களா..நாங்கலாம் வைக்காமயே அழகுதானுங்கோ..

மகன்கள்தான் எப்பவும் அம்மா செல்லமா இருப்பாங்க.இவ்ளோ ஏங்க நம்ம கடவுள் வினாயகரே அம்மா மாதிரி பொன்னு வேனும்னு அம்மா விட்டு எங்கேயும் போகம அம்மா குடயே இருப்பாரே..மகன்கள் தான் எப்பவும் நம்மல விட்டு போகாம நம்ம கூடயே இருந்து நமக்கு சந்தோஷத்தை தராங்க..

Be simple be sample

மேலும் சில பதிவுகள்