தேதி: October 26, 2006
பரிமாறும் அளவு: 2 - 3 நபர்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காய்கறிகள் - காரட்,பீன்ஸ்,பட்டாணி,உருளைகிழங்கு இந்த காய்கறிகள் ஒரு கப் தேவை.
பாஸ்மதி ரைஸ் - ஒரு கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4, (நீளவாக்கில் நறுக்கியது).
உப்பு - தேவையானவை
அரைப்பதற்கு:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
முந்திரி - 8
பூண்டு - 2 பல்
தாளிப்பதற்கு:
நெய் - 2 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - 2
கறிவேப்பிலை - 4
காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நெய்யை சுட வைத்து, காய்கறிகளை வதக்கவும்.
அரிசியை கழுவி, 15 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயில் பால் எடுக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி, மேலே கூறியது போல் தாளிக்கவும்.
பிறகு அரைத்த விழுதை போட்டு, கலக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அரிசியை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
இதில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, காய்கறிகள், தேங்காய் பால் ஊற்றி நன்கு கிளறவும்.
இந்த கலவையை ரைஸ் குக்கரில் மாற்றி, சிறிது நெய் ஊற்றி மூடி வைக்கவும்.
வெங்காய ரைத்தவுடன் பரிமாறவும்.
Comments
hi very nice recipe. Have
hi
very nice recipe. Have tried it a few times and like it very much.
ரொம்ப அழகா
ரொம்ப அழகா easy-a செய்முறை கொடுதிருக்கிறீர்கள்.
நன்றி...
சந்தியாவின் ப்ரிஞ்ஜி ரைஸ்!
சந்தியா,
வீக்கென்ட் உங்க ப்ரிஞ்ஜி ரைஸ் செய்தேன். செய்முறை கிட்டத்தட்ட நான் செய்யும் தேங்காய்பால் சாதம் போல் இருந்தது. சுவையும் அருமையாக இருந்தது. நன்றி!
அன்புடன்
ஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ