தேதி: July 11, 2013
ஒற்றை நிற ஸ்டாக்கிங் துணி (Single Colour Stocking Cloth) - ஒன்று
இரட்டை நிற ஸ்டாக்கிங் துணி (Double Colour Stocking Cloth) - ஒன்று
பச்சை நிற ஸ்டாக்கிங் துணி (Green Colour Stocking Cloth) - ஒன்று
ஸ்டாக்கிங் கம்பி - தேவைக்கு
சற்று தடிமனான கம்பி - தேவைக்கு
நூல்
கொரடு
கத்தரிக்கோல்
பச்சை டேப்
ஸ்டாமின்ஸ் (பெரியவை) - தேவைக்கு
தொட்டி - ஒன்று
கல் மற்றும் மணல்
வட்ட மூடிகள்
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். 1, 2, 3, 5 மற்றும் 6 சென்டிமீட்டர் அளவில் மூடிகளை எடுத்து கொள்ளவும்.

ஒரு பூ செய்வதற்கு ஒரு சென்டிமீட்டர் அளவு வளையம் ஒன்றும், இரண்டு சென்டிமீட்டரில் மூன்று வளையங்களும், மூன்று சென்டிமீட்டரில் மூன்று வளையங்களும் தேவைப்படும். ஸ்டாக்கிங் கம்பியை மூடியில் சுற்றி முறுக்கி தேவையான எண்ணிக்கையில் வளையங்களை தயார் செய்து வைக்கவும்.

மூன்று சென்டிமீட்டர் அளவில் உள்ள வளையத்திற்கு இரட்டை நிற துணியையும், மற்றவைக்கு ஒற்றை நிற துணியையும் சுற்றி நூலால் நன்றாக கட்டிவிடவும். அதன் கீழே மீதமுள்ள துணி மற்றும் நூலை வெட்டிவிடவும். பூவின் இதழ்கள் தயார்.

தண்டு பகுதிக்கு சற்று திக்கான கம்பி ஒன்றை எடுத்து, அதில் ஒரு சென்டிமீட்டர் அளவில் தயார் செய்த இதழை வைத்து கட்டிக்கொள்ளவும். படத்தில் உள்ளதுபோல் அதன் அடிப்பகுதியில் பச்சை டேப் ஒட்டிவிடவும்.

பிறகு படத்திலிருப்பது போல் மூன்று சென்டிமீட்டர் அளவிலுள்ள இதழை அதனுடன் வைத்து கட்டவும்.

அதனை ஒட்டிவரும்படி மூன்று சென்டிமீட்டர் அளவிலுள்ள மற்ற இரண்டு இதழ்களையும் வைத்து கட்டவும்.

இந்த மூன்று இதழ்களின் இடையிடையே வருவது போல் இரண்டு சென்டிமீட்டர் அளவிலுள்ள இதழ்களை ஒவ்வொன்றாக வைத்து கட்டவும்.

இப்போது படத்தில் உள்ளது போல் பெரிய இதழ்களை வளைத்துவிடவும். சிறிய இதழ்களை இழுத்துவிட்டு பூவுக்கு வடிவம் கொடுக்கவும்.

கீழே நூல் கட்டிய பகுதி தெரியாதபடி பச்சை டேப்பை நன்றாக சுற்றி ஒட்டவும். இப்போது பூ தயார்.

இலைகள் தயார் செய்வதற்கு 5 மற்றும் 6 சென்டிமீட்டர் அளவிலுள்ள மூடிகளில் சற்று தடிமனான கம்பிகளை சுற்றி முறுக்கி வெட்டிவிடவும். அந்த வளையத்தை இழுத்து இதேபோல் தயார் செய்யவும்.

அதன் நடுவில் ஒரு மெல்லிய கம்பியை இணைக்கவும்.

இதேபோல் தேவையான எண்ணிக்கையில் கம்பிகளை வளைத்து, அதன்மீது பச்சை நிற துணியை சுற்றி கட்டிவிடவும். கீழே மீதமுள்ள துணியை வெட்டிவிடவும். இலைகள் தயார்.

பெரிய அளவு மகரந்தங்களாக எடுத்து அதன் மேல் படத்தில் உள்ளது போல் ஸ்டாக்கிங் துணியை சுற்றி கட்டிவிட்டு மொட்டுகள் தயார் செய்யவும். அதன் கீழும் பச்சை டேப் சுற்றி தயாராக வைக்கவும்.

இப்போது பூக்கள், இலைகள், மொட்டுகள் அனைத்தும் தயார்.

இப்போது தடிமனான கம்பியின் முனையில் ஒரு மொட்டினை வைத்து டேப் சுற்றவும். அதை தொடர்ந்து ஆல்டர்னேட்டிவாக வருவது போல் அடுத்தடுத்த மொட்டுக்களை வைத்து டேப் சுற்றவும்.

சீரான இடைவெளி விட்டு சுற்றுவது அவசியம். மொட்டுகளை சுற்றிய பின் பூக்களை சுற்ற துவங்கவும். மொட்டினை ஒட்டி வரும் பூக்கள் அதிகம் விரியாதவையாகவும், அடுத்தடுத்து வருபவை நன்றாக விரிந்தவைகளாகவும் வைத்து டேப் சுற்றவும்.

கீழே சிறிது இடைவெளி விட்டு சிறிய இலைகளை வைத்து நூலால் கட்டவும். பின் நூல் தெரியாமலிருக்க அதன்மீது டேப் சுற்றவும். அதன் கீழே பெரிய அளவிலுள்ள இலைகளை வைத்து கட்டி டேப் சுற்றவும்.

கீழே மீதமுள்ள கம்பியை சுற்றி வைக்கவும். தொட்டியின் உள்ளே சிறிது மணல் பரப்பி அதன்மேலே கற்கள் நிரப்பி அழகுபடுத்தவும். கம்பியை மணலில் சொருகி வைத்தால் சாயாமல் இருக்கும். இப்போது அழகான ஆர்க்கிட் மலர்கள் தயார்.

Comments
வனிதாவா?வசுமதியா?
ஏன் திடீர் பேர் மாற்றம்?பூக்கள் கொள்ளை அழகு.கலர் ரொம்ப க்யூட்
Eat healthy
நன்றி
வசுமதியின் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு அவ சார்பா நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரசியா
ஹிஹிஹீ. வசுமதி என் தங்கை... அவ இப்ப தான் கத்துக்குறா. ;) பேரெல்லாம் இனி மாற்ற இயலாது. ஹிஹிஹீ. நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வசுமதி,
அட்டகாசமா இருக்கு...வாழ்த்துக்கள்..
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
வனி அக்கா
வசுமதி அவங்களுக்கு என்னோட சார்பா வாழ்த்துக்கள சொல்லிடுங்க
எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு கலர் காம்பினேஷன்
ரொம்ப அட்ராக்டிவா இருக்கு கடைசி படம் அவ்ளவு அழகு....
சூப்பர் ....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
வனி
வனி வசுமதியும் உங்களை போல அழகா செய்யுறாங்க.இந்த துணி வகைகள் பேன்சி கடையில் கிடைக்குமா? அல்லது துணிக்கடைகளிலா?
வசுவை வாழ்த்தியதாக சொல்லவும்....அழகா இருக்கு கலர்ஸும் பூக்களும்.....
ஹாய் வசு
ஹாய் வசு
லாவண்டரும் ஒயிட்டுமா பூங்கொத்து ரொம்ப அழகாயிருக்கு.
வாழ்த்துக்கள் வனி
ஆர்கிட்
ரொம்ப ரொம்ப ரொம்..ப அழகா இருக்கு வனி. வசுவுக்கு என் பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
ஓ அப்படியா!
ஓ அப்படியா!
வாழ்த்துக்கள் வசுமதி,ஆனால் அவங்க அருசுவையில் உறுப்பினரா இல்லையா?அவங்களையும் சேர்த்துடுங்க,இருவரும் சேர்ந்து கலக்குங்க.ஹிஹி
Eat healthy
லவ்லி வொர்க்!!
ஆர்க்கிட் பூக்கள் கொள்ளை அழகு வனி! வசுவுக்கு மறக்காம பாராட்டுக்களை சொல்லிடுங்க. அதுசரி, புலிக்கு பின் பிறந்தது பூனையாகுமா?!! ;-) (கொஞ்சமா பழமொழியை மாத்திக்கிட்டேன்! :))
அன்புடன்
சுஸ்ரீ
ராஜி
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனி
மிக்க நன்றி :) அவசியம் சொல்லிடுறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேணு
மிக்க நன்றி :) அவ இம்முறை துணி எல்லாம் ஸ்டேஷனரி ஷாப்பில் வாங்கினா. எதுக்கும் பக்கம் உள்ள ஃபேன்ஸி & ஸ்டேஷனரி ஷாப்பில் விசாரிச்சு பாருங்க. நான் எப்பவும் க்ராஃப்ட்டுக்குன்னு உள்ள ஷாப்பில் தான் வாங்கி இருக்கேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகிலா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
மிக்க நன்றி :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரசியா
மிக்க நன்றி :) நான் இருந்தா என்ன அவ இருந்தா என்ன... எல்லாம் ஒன்னு தானே :P அதான் ஒரே ஐடியில் இருக்கோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
சுஸ்ரீ
மிக்க நன்றி :) மறக்கவே மாட்டேன்... இன்னைக்கு உட்கார்ந்து முழுசையும் படிக்க வெச்சுடுறேன். :) பாட்டு இப்ப பழமொழி ஆயிடுச்சா?? பாட்டை ரொம்ப மிஸ் பண்றேன் சுஸ்ரீ... எப்ப பேக் டூ ஃபார்ம்னு வருவீங்க?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஆர்க்கிட்
ஆர்க்கிட் மலர்கள் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள் வசுமதி! இதைப்பார்த்ததுமே செய்ய ஆசை வந்திடுச்சு. பிஸ்தா ஷெல் பூவும் செய்யணும். விரைவில் செய்யறேன் :). எப்போன்னு மட்டும் கேட்கப்படாது. பொருட்கள் எல்லாம் கிடைச்சதும் செய்துடுவேன் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவிசிவா
மிக்க நன்றி :) அவகிட்ட சொல்லிடுறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா