அறுசுவையை வாழ்த்த வாங்க

ஹப்பா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு நினைக்கும் போதே ...

அறுசுவை 50,000 உறுப்பினர்களை தாண்டி வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு...

இதுக்கு பின்னாடி எத்தனை பேரோட கடின உழைப்பு ...

இன்னும் பல ஆயிரம், பல லட்சங்கள் கடந்து மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

கனி... எப்படி இப்படிலாம்??? சீதா இன்னைக்கு எனக்கு மெசேஜ் பண்ணி சொன்னாங்க, இழை துவங்கணும்னு ;) நீங்க துவங்கிட்டீங்க. சூப்பர்.

அறுசுவைக்கும் அறுசுவை குடும்பத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். :) இன்னும் நிறைய இருக்கு சாதிக்க. ஆல் தி பெஸ்ட். வெற்றிகள் குவியட்டும், அறுசுவை குடும்பத்தில் அன்பும் புரிதலும் அதிகரித்து மகிழ்ச்சி பூக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த 50000 உறுப்பினர் எண்ணிக்கை என்பது சரியான எண்ணிக்கை அல்ல. கடைசி சில ஆயிரம் உறுப்பினர் சேர்க்கைகளில் நிறைய சேர்க்கைகள் spammers/spam bot களால் பதிவு செய்யப்பட்டவை. நூற்றுக்கணக்கில் அந்த ரெஜிஸ்ட்ரேசன் நடந்து கொண்டிருக்கின்றது. அதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை கடைபிடித்தும், இன்னமும் அதில் வெற்றி அடைய முடியவில்லை. அதனால்தான் இப்போது பெயர்ப்பதிவு என்பது எங்களது அப்ரூபவல்க்கு பிறகு மட்டுமே சாத்தியமாக உள்ளது. முன்பு போல், அப்ரூவல் இல்லாமல் பெயர்ப்பதிவு செய்து, உடனே பதிவுகள் கொடுப்பது இயலாது. பெயர்ப்பதிவு செய்தவர் உண்மையிலேயே உறுப்பினர்தானா என்பதை பார்வையிட்டு, spam registration இருந்தால் அதை நீக்கிவிட்டு, உண்மையான உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து வருகின்றோம். ஆனால், நீக்கப்படும் spam registrations க்கும் உறுப்பினர் எண் சென்றுவிடுவதால், உண்மையான உறுப்பினர் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம். எனவே, 50000ல் நான்கு ஐந்தாயிரம் உறுப்பினர்கள் Spam ஆக இருக்கும். ஆகவே, தயவுசெய்து இதற்கு வாழ்த்துக்கள் எல்லாம் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். :-)

மேலும் சில பதிவுகள்