சொல்ல விரும்பினேன் - 9 !!

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

காது மட்டும் நன்றாக கேட்கிறது. கண்களைக்கூட திறக்க முடியவில்லை. காலையில் எழுந்து கடனே என்று சமைத்து விட்டு படுத்தால் பசியும் இல்லை தூக்கமும் இல்லை படுத்தே இருக்கிறேன். தோல் பட்டையிலிருந்து விரல் நுனி வரை எழும்பு குத்தி குத்தி வலி படுத்துகிறது. காய்ச்சல் வந்ததுபோல் எப்பொழுதும் ஒரு உணர்வு.

இந்த வீடு வாங்கி குடிவந்து 11/2 வருடங்களாகிறது. வந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை கீழே போகிறது. அடுத்தமாதம் மீண்டும் தாய்நாட்டிற்கு பயணம். ஏதாவது மோகினி பிடித்திருக்குமோ ஊருக்குப் போய் பேயோட்டி பார்க்கலாமா என கேட்டால் அது இங்கிலீஷ் பேயா இருந்து மந்திரம் புரியாமல் பூஜை நல்ல எண்டர்டெயின்மன்டா இருக்குன்னு ஸ்ட்ராங்கா உட்கார்ந்திட்டா என்ன பண்ணுவேன்னு கிண்டல் பண்றார் பார்ட்னர்.

மருத்துவமனை போனேன் ஆர்த்தரிடீஸ் இருக்கும்னு ப்ளட் டெஸ்ட் செய்யச் சொன்னாங்க. 4 ட்யூப் இரத்தம் மீண்டும் போச்சு. ஒண்ணுமே இல்லேன்னு சொல்றாங்க.வலி இருக்கும்போதெல்லாம் 2 டைலனால்( நம்மூர் பாரசிட்டமால் போல்தான்) 4 மணிக்கு ஒருதடவை போட்டுக்கோங்கன்னு சொன்னாங்க.

ஆனா என்னால் எதிலும் கவனம் செலுத்தவே முடில . 1/2 மணி நெரம் சேர்ந்தாப்பல் நிக்க மிடில. பட்டி பாதியில் நின்னு மானமே( ?) போச்சு. அதை எடுத்துட்டீங்கன்னு பார்த்தால் இன்னும் அப்படியே இருக்கு. நிழலடியில் வளரும் நோஞ்சான் செடிபோல சூரிய ஒளியில்ல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து இப்படி ஆகிபுட்டேனா தெரியல? எனக்கு கண்ணை மூடினால் தெரிவதெல்லாம் Health is real wealth.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

மிக வருத்தமா இருக்கு,இப்போ பரவாயில்லையா இன்னும் வலி அப்படியே இருக்கா?
உங்கு வருகிறேன்னு சொன்னீங்க.அப்படி வரும்போது நம்மூர் புளிய மரத்தின் இலைகளை எடுத்து தண்ணீரில்போட்டு கொதிவிட்டு அதனை குளிக்க உபயோகியுங்கள்...(இது பேறுகாலத்தில் பெண்களின் உடல் வலியினை போக்கும்)உங்களுக்கும் உபயோகமா இருந்தால் சந்தோஷம்பா.வேறுமுறைகள் தெரிந்தால் சொல்கிறேன்....இங்கே வந்து நல்ல டாக்டரை பாருங்கள்.....

விளக்கமாக எழுத நினைக்கிறேன் . என்னால முடியல இதுதான் நான் வீட்டிலும் சொல்லும் வாசகம். ஊருக்கு போகும் முன் பயணத்தைத்தாங்க முடியுமளவாவது தேறவேண்டும். என்னால் என் குடும்பம் படுகிறது. குழந்தைகளும் ப்ரட் சாப்பிட்டே தாங்குகிறார்கள்.

உடல் தேற நிறைய கீரைகளும் பழங்களும் நேற்று வாங்கினேன். . வித் வித்மான உணவுகளுக்கு வித்விதமான என்சம் தேவைப்படும் . ஒன்றாக சாப்பிட்டல் டாக்சின் உருவாகுமென என் பெண் கூறி என்னை குழப்பிட்டாள். ஃபுட் காம்பினேஷன் பற்றி படித்தால் தலை வலிக்கிறது. எதை பார்த்தாலும் பயம் இப்போ.

பென்சில் முனை கொண்டு கை முழுதும் குத்தினால் வலிக்கு இதமா இருக்கு. அடிக்கடி கூப்பிட்டால் என் சின்னப்பெண் வரமறுக்கிறாள். 1/2 மணி நேரம் உதவினால் 1 டாலர் என் டீல் பேசி உதவி வாங்கிக்கொண்டிருக்கிறேன். வெள்ளத்திற்கு பிறகு கணவர் 2 நாளாகத்தான் அலுவலகம் போகிறார் . அதுதான் எழுத முடிந்தது . மனதுக்கு நிம்மதி. தொடர்ந்து எழுதி கைவலி.

ரேணு, நீங்க சொன்னதை ஊருக்கு போய் செய்து பார்க்கிறேன். ஏதாவது நல்ல மாற்றம் கிடைக்காதா என்று இருக்கிறது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

:( இன்னுமா இப்படி இருக்கு??? வெய்யில் இல்லாத காரணமா தான் இருக்கும். பயம் வேண்டாம். மனசை முதல்ல உற்சாகமா தைரியமா வைங்க. அதுவே பாதி உடல் நலத்தை சரி பண்ணும். இது என் அனுபவத்துல கண்டது. ஏன் இப்படி இருக்கு, எப்படி இப்படி ஆச்சுன்னு யோசனை ஓடிட்டே இருந்தா நம்ம உடம்பு ரொம்ப சோர்வா தோண்றும். அதனால் தான் இதை பற்றி யோசிக்காம நம்மால் முடியுது நல்லா இருக்கோம் என்ற எண்ணத்தை அதிகப்படுத்திக்கணும். நம்ம ஊர் மண்ணில் காலை வெச்சதுமே எல்லாம் சரியா போகும். பயப்படாதீங்க. :) எனக்கு பெங்களூரில் இப்ப குளிரே இல்லைன்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனா அந்த குளிருக்கே நம்ம ஊர் வெய்யில் பட்டதும் எனக்கு என்னவோ ரொம்ப ஃப்ரெஷ் ஆன மாதிரி ஒரு ஃபீல் வருது. எல்லாம் சரியா போகும் ஜெயந்தி. சீக்கிரம் ஊர் வந்து சேருங்க. பட்டியை அம்புட்டு சீக்கிரம் தூக்க மாட்டோம்... வாங்க... நீங்க வந்து தீர்ப்பு சொல்லாம உங்களை நாங்க விட போறதே இல்லை ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம அனுபவத்தை தான் நம்ம எப்பவும் மிஸ் பண்னாம இங்குட்டு சொல்லிபுடுவோமே... ;) அப்படி ஒரு அனுபவத்தை இப்பவும் சொல்ல வந்திருக்கேன்.

இரண்டு நாள் முன்னாடி டாட்டா டோக்கோமோ’ல இருந்து பேசுறதா சொல்லி ஒரு பெண் என்னை அழைத்தார்.

”மேடம் உங்க நம்பருக்கு ஒரு ஆஃபர் கொடுத்திருக்கோம்” என்றார்.

“சாரி என்னோடது டாட்டா டோக்கோமோ இல்லை” என்றேன்.

“பரவாயில்லை மேடம், உங்க இந்த நம்பரை அப்படியே டாடா டோகோமோவா மாற்றி இந்த ஆஃபரையும் தருவோம்” என்றார்.

“இல்லைங்க, எனக்கு ப்ளான் மாத்தும் ஐடியா இல்லை”

“ஆனா நீங்க ஆஃபர் என்னன்னு கேட்கவே இல்லையே...”

“இல்லைங்க, இந்த நம்பர் எனக்கு டெம்பரரி... “ பேசி முடிக்கும் முன் எதிர் முனையில் கால் துண்டிக்கப்பட்டது.

மகாஜனங்களே... வழக்கமா இந்த மொக்க காலை எல்லாம் நம்ம தானே கட் பண்ணுவோம்???!!! நான் பாவம் ஒருத்தி இது தானே தனக்கு வேலைன்னு பண்றா, அவளை இன்ஸல்ட் பண்ண வேண்டாம்னு பொறுப்பா பதிலை சொல்லி வைக்க பார்த்தா... அவ என் ஃபோனை கட் பண்ணிப்புட்டா!!! அவ மட்டும் என்கிட்ட நேருல சிக்கினா... மவளே... கைமா பண்ணி கறி உருண்டை குழம்பா வெச்சு புடுவேன். 3:) எத்தன பேருயா கிளம்பி இருக்கீங்க இப்படி?? ஒரு ஆள் உனக்கு கஸ்டமர் ஆகணும்னு நீ ட்ரை பண்ணும் போதே அவங்களை மறியாதையா ட்ரீட் பண்ண தெரியல... இன்னும் கஸ்டமராயிட்டா... மதிப்பியா மிதிப்பியா???!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாவம் போன் செய்து பேசியவங்களுக்கு benefit of doubt கொடுத்து மன்னிச்சு விட்றுங்க :) ஒரு வேளை சிக்னல் இல்லாமல் கட் ஆகி இருக்கும்... நீங்க சொன்ன மொபைல் சிக்னல் பற்றி தான் தெரியுமே :)
அதற்காக எல்லாம் நீங்க அவங்க ரேஞ்சுக்கு போகலாமா? கூல் டவுன் :P

சென்னையில் வெயில் அதிகமோ ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

”வனிதா”னு கண்டதும் யாரோன்னு நினைச்சேன் :(

சரி சரி... அப்பமே திருப்பி அந்த நம்பருக்கு டயல் பண்ணி திட்டி இருப்பேன்... இந்த சந்தேகத்தின் பலனை தந்ததால் தான் பண்ணல. ஆனாலும்... தப்பு தப்பு தான் ;) என்னை தவிற எல்லாருக்கும் சப்போட் பண்ணுங்க நீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இம்முறை சென்னை கிளம்பியதும் பெங்களூர் கண்டோன்மண்டில் தொண்டைக்கு இதமாக இருக்கட்டும் என காலை நேரம் ஒரு சூடான காபியும், பையன் கேட்டான் என அவனுக்கு ஒரு பாலும் வாங்கினோம். மகள் சமத்து எதுவும் வேண்டாம் என்றாள். வாங்கிய பால் கொதிக்கும் நிலையில் இருந்தது. மகனாள் கையால் தொடவே முடியாது. உடனே கடையில் பால் தந்த பையனிடம் “தம்பி கொஞ்சம் ஆத்தி கொடுங்க, குழந்தைக்கு வாங்கிய பால்” என்றேன். “அதெல்லாம் முடியாது” என்று மொட்டையாக பதில் வந்தது. :( சரி போனா போது நீ பிசி பிசினஸ் மேன் என நினைத்துக்கொண்டு “நானே ஆத்திக்கறேன், இன்னொரு யூஸ் அண்ட் த்ரோ கப் மட்டும் கொடுங்க” என்றேன். “எக்ஸ்ட்ரா கப்பெல்லாம் இல்ல” என்றார். மனசுக்குள் கோபம் வந்தாலும் “மனசாட்சி இல்லாதவன் போலும், பேசி பயனில்லை” என உள் மனசு சொல்ல அமைதியாக இடத்தை விட்டு நகர்ந்தேன். என் காபியை வேகமாக குடித்து விட்டு பாலை அந்த கப்பில் ஆற்றிக் கொடுத்தேன்.

சென்னை சென்று இறங்கியதும் மழை கொட்டிக்கொண்டிருந்தது. நீரில் வழுக்கி மீண்டும் மகனே விழுந்தான். முட்டியில் அடிபட்டு ரத்தம் வர துவங்கியது. பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. வீட்டில் இருந்து அழைத்து செல்ல உள்ளே வரும் வரை காத்திருக்க இயலாது. அழுக்கான இடத்தில் விழுந்து ரத்த காயம். உடனே கழுவி விட்டால் சேஃப் என தோண்றவே, பக்கத்தில் இருந்த கடை ஓரம் பிள்ளைகளை நிக்க விட்டு, அடிபட்ட இடத்தை கழுவ முயற்சித்தேன். இவன் பயத்தில் அழ, கால்களை காட்ட மறுத்தான். ஒரு கையில் தண்ணி பாட்டில், இன்னொரு கையால் இவனை மடக்கி என்னால் ஏதும் செய்ய முடியாமல் போக, கடையில் இருதவரிடம் “கொஞ்சம் இவனை பிடியுங்க, அடி பட்டு ரத்தம் வருது, வாஷ் பண்ணி விடணும் ப்ளீஸ்” என்றேன். கிழே குனிந்து ஒரு டிஷு பேப்பரை கையில் கொடுத்து துடைக்க சொன்னார். “இல்லைங்க, கொஞ்சம் பிடிங்க, தண்ணி ஊற்றி விட்டுடுறேன்” “அதெல்லாம் ஆவர்தில்ல” என முகத்தை திருப்பிக்கொண்டு வெட்டியாக தான் நின்றார். அவர் கொடுத்த டிஷு பேப்பரை அவரிடமே திருப்பி கொடுத்து விட்டு “தேன்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

ஒரு காலத்தில் என் அம்மா எங்க இருவரையும் சிறு பிள்ளைகளாக தனியாக பஸ்ஸில் அழைத்துக்கொண்டு பல மணி நேரம் பயணம் செய்தது உண்டு. உடன் பயணிப்பவர்கள் முதல், பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் வரை அனைவரும் உதவுவார்கள். ஆனால் இன்றோ... ரத்த காயத்தோடு நின்று உதவி கேட்டால் கூட மறுக்கிறார்கள். உலகம் எங்கே போகின்றது? இவ்வளவு தானா மனிதன்? மனிதம் எங்கே? இன்று நாம் மற்ரவருக்கு உதவி செய்ய மறுக்கும் போது தெரியாது... நாளை நமக்கு ஒருவர் உதவியை மறுக்கும் போது நிச்சயம் அந்த வலி புரியும். அன்றாவது தன் தவறை உணர்ந்தால் மனிதனாக மாற வழி இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன மனுஷங்கடா இவங்க :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முன்பு நடந்த பட்டிமன்றம் நினைவுக்கு வருது... மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா, குறைந்து வருகிறதா? இதுக்குலாம் இதை விட நல்ல உதாரணம் தேவையா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்