உதவி செய்யுங்க

அன்பு தோழிகழே எனக்கு இன்னும் மாதவிடாய் வரல போன மாதம் 3 தேதி வந்தது ஆனால் இந்த மாதம் இன்னும் வரல யுரியன் செக் பன்னி பாத்துட்டேன் குழந்தை இல்லைனு வந்துடுச்சி நான் அமெரிக்கவில இருக்கிறதலே எனக்கு இங்கு டாக்டர் கிட்ட போக பயம இருக்கு எனக்கு வழி சொல்லுங்க

தயவுசெய்து எனக்கு பதில் சொல்லுங்க இன்னும் மாதவிலக்கு வரல ஆனால் வயிற்றில் லேசக அங்க அங்கே வலி இருக்குது அது மட்டும் இல்ல உடல்வுறவு இருக்கும் போது வலி அதிகம இருக்குது எதனால இப்படி இருக்கு எனக்கு பயம இருக்கு

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

இது யாரும் படிச்சுப் பதில் சொல்லும் விஷயம் இல்லீங்க. ஒவ்வொருவர் ஹெல்த் ஒவ்வொரு மாதிரி. மருத்துவரிடம்தான் நீங்க இப்படியான சந்தேகங்களைக் கேட்கணும். ஒரு பொது தளத்தில் வந்து கேட்கும், படிப்பவர்கள் படித்துப் பதில் சொல்லும் விஷயம் இல்லை இது.

// நான் அமெரிக்கவில இருக்கிறதலே எனக்கு இங்கு டாக்டர் கிட்ட போக பயம இருக்கு // எதுக்கு பயப்படறீங்க எனப் புரியவில்லை! அமெரிக்க டாக்டர்கள் என்ன சிங்கமா, புலியா? அவங்களும் மனுஷங்க தானே? பயப்படாம தைரியமாப் பேசுங்க. உங்க பிரச்சனைகளை ரொம்ப கவனமாவே கேட்பாங்க. மொழிப் பிரச்சனை இருக்கும்னா உங்க கணவர்கிட்ட உங்க பிரச்சனைகளைச் சொல்லி, மருத்துவரிடம் சொல்லச் சொல்லுங்க. இன்ஷூரன்ஸ் இருக்குதானே? அது இல்லாமல் அமெரிக்காவில் மருத்துவமனைக்குப் போவது காஸ்ட்லி ஆகும். அதனால் இன்ஷூரன்ஸுடன் போங்க. ஆல் த பெஸ்ட்!

அன்புடன்,
மகி

என்னை மன்னிக்கவும் இந்த மாதிரி பிரச்சனை எப்போவும் வந்தது இல்லை அதனால் தான் உங்க கிட்ட ஆலோச்னை கேட்ட பிறகு டாக்டர் கிட்ட போகலாம் நினைத்தேன் உங்களை சிரமத்துக்கு ஆலாக்குனதுக்கு மறுபடியும் மன்னிக்கவும்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

ungal karuthai en evalavu kovamaka kurukirikal theriyama than ah c is asking anyway sorry

மேலும் சில பதிவுகள்