சின்ன சின்ன சந்தேகங்கள் - 6

சின்ன சின்ன சந்தேகங்கள் 200 பதிவுகள் ஆகிவிட்டது தொடர்ந்து உங்களின் சந்தேகங்களையும், அதற்கான விளக்கங்களையும் இந்த இழையில் தொடருங்கள்.
முந்தைய இழைகள் :-

http://www.arusuvai.com/tamil/node/13099
http://www.arusuvai.com/tamil/node/17266
http://www.arusuvai.com/tamil/node/19309
http://www.arusuvai.com/tamil/node/21604
http://www.arusuvai.com/tamil/node/23677

எனக்கு நான் இருக்கும் இடத்தில் மீன், ஆட்டுக்கறி எல்லாம் கிடைப்பதில்லை. அதுக்கு வேறு ஒரு இடம் போக வேண்டி இருக்கு. அங்கிருந்து வாங்கி வந்தால் அளவு அதிகம் வாங்க வேண்டி இருக்கு. எனக்கு அவ்வளவும் செலவு ஆகுறதில்லை. கறி, மீன் எல்லாம் ஸ்டோர் பண்ண ஸ்டெப் ஸ்டெப்பா முறையா சொல்லி கொடுங்க. ஏன்னா நான் இதுவரை ஃப்ரெஷ் கறி வாங்கி அதை ஸ்டோர் பண்ணதில்லை. ஃப்ரோசன் தான் அதிகம் வாங்கி இருக்கேன். எவ்வளவு நாள் ஸ்டோர் பண்ணலாம் இப்படி ஃப்ர்ரிசரில் ஃப்ரெஷ் கறி வாங்கி வெச்சா? எல்லாம் சொல்லுங்க. :) இப்பவே அட்வான்ஸா நன்றி சொல்லிடுறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா இனிய மதிய வணக்கம்...
எங்க வீட்ல மீன், சிக்கன் லாம் வாரத்துக்குஒரு முறை சேர்த்து வாங்கி வச்சுடுவோம்.. ஏனா தாத்தா நான் வெஜ் இல்லாமா சாப்ட மாட்டாங்க...

னீங்க சூப்பர் மார்கெட் கடைக்கு போனீங்கனா அங்க திக் ப்ளாஸ்டிக் கண்டெய்னர்ஸ் கிடைக்கும் அத வாங்கிகோங்க

மீன் இருந்தா நல்லா க்ளீன் பண்ணிட்டு மஞ்சள் தூள் போட்டு கடைசியா ஒருகுறை கழுவிட்டு அந்த கண்டெய்னர்ஸ் ல் அ போட்டு வச்சுகோங்க ஒரு வாரம் வரை வச்சி யூஸ் பண்ணலாம்...

சிக்கன் இருந்தா அதே மேறி சுத்தம் பண்ணிட்டு மஞ்சள் தூள் போட்டு கழுவிட்டு ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து வச்சிங்கனா ஒரு வாரம் வரை ஃப்ரெஷ் ஆவெ இருக்கும் அக்கா

திக் கண்டெய்னர் ஆ இருந்தா தான் ப்ரீசர் ல வைக்கும் போது அதிக கூலிங் தாங்கும்
அப்புரம் அக்கா நீங்க சமைக்க போறதுக்கு முன்னாடி அந்த கண்டெய்னர் அ எடுக்கும் போது கொஞ்சம் பத்திரமா எடுங்க அக்கா ..

ஏனா அதிக டெம்பரேச்சர் ல வைக்குரதாலா நீங்க எடுக்கும் போது கை தவரி கீழ விழுந்த்துட்டா அந்த கண்டெய்னர் சுக்கு சுக்கா உடஞ்சு போய்டும்..

அப்புரம் ப்ரீசர் ல இருந்து எடுக்கும் போது ஒரு துணி புடிச்சு எடுங்க கை ல அந்த சில்னெஸ் பட்டா கை ல இருக்குற ரத்தம் உறஞ்சு போய்டும்

சோ நீங்க அதிக டெம்பரேசர் ல வச்சா தான் ப்ரெஷ் ஆவே இருக்கும் அக்கா
இப்டிதான் நான் ஸ்டோர் பண்ணி யூஸ் பண்ணுவேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இங்கே எனக்கும் இதே நிலைமைதான். சிக்கன், மீன், மட்டன் எல்லாமே ஒரு வாரத்துக்கு தேவையான அளவு வாங்கி ஸ்டோர் பண்ணிதான் பயன்படுத்தறேன்.

வாங்கும் போதே நல்ல ஃப்ரெஷா பார்த்து வாங்கணும். வாங்கிட்டு வந்ததும் க்ளீன் பண்றதுதான் முதல் வேலை.

சிக்கன், மட்டன் க்ளீன் பண்ணும் முறை (நான் செய்வது):

தோல் கொழுப்பு எல்லாம் நீக்கி வேண்டிய அளவுகளில் துண்டுகளாக்கி மூன்று நான்கு முறை நீரில் நன்றாக அலசி மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து நன்றாக பிசிறி வைக்க வேண்டும். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து மீண்டும் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும்.

போன்லெஸ் தனியே, குழம்புக்கு தனியே, கீமா தனியே என ஒரு நேரத்துக்கு சமைக்கத் தேவையான அளவுகளில் பிரித்து ஏர்டைட் பாக்ஸில் போட்டு மூடி ஃப்ரீசரில் வைக்கவும். சமைக்க 1மணிநேரத்துக்கு முன்னர் வெளியே எடுத்து பெரிய பவுலில் தண்ணீர் எடுத்து அதனுள் இந்த பாக்சை மூடியோடு வைத்து விட்டால் இறுகிய சிக்கன் மட்டன் எல்லாம் ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். மீண்டும் ஒரு முறை கழுவி விட்டு சமைக்க பயன் படுத்தலாம். மைக்ரோவேவில் டீஃப்ராஸ்ட் செய்தால் சில நேரங்களில் ஐஸ் உருகாமல் சில துண்டுகள் மட்டும் வெந்து விடுகிறது. அதனால் நான் டீஃப்ராஸ்ட் செய்வதில்லை.

மீன் சுத்தம் செய்ய:

மீனையும் கழிவுகள் நீக்கி துண்டுகளாக்கி தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பிசிறி 5நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை நீரில் கழுவ வேண்டும்.

சிக்கன் மட்டன் செய்தது போலவே ஒவ்வொரு நேரத்துக்கும் தேவையான அளவுகளில் பிரித்து பாக்சில் போட்டு ஃப்ரீசரில் வைத்துவிட்டால் தேவையான போது எடுத்து பயன்படுத்தலாம்.

பத்து நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். அதற்கு மேலும் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் நிச்சயம் சுவை குறைந்து விடும்.

முக்கியமான குறிப்பு: ஒருமுறை ஃப்ரீசரில் இருந்து எடுத்து குளிர் போன பிறகு மீண்டும் ஃப்ரீசரில் வைத்து பயன்படுத்தக் கூடாது. மசாலா புரட்டி அது ஊறுவதற்காக ஃப்ரிட்ஜில் சில மணிநேரங்கள் வைக்கலாம். ஆனால் அன்றே சமைத்து விட வேண்டும்.

ஃப்ரீசரின் உள் சில துண்டுகள் எலுமிச்சைத் தோலை போட்டு வைத்தால் வாடை எதுவும் இருக்காது.

ஒருவாரத்துக்கான மீன் கோழி எல்லாம் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன் நல்லா சாப்பிட்டுட்டு ஆரம்பிங்க :) இல்லைன்னா பாதியிலேயே பசிக்க ஆரம்பிச்சிடும் :). வாரம் ஒரு நாள் ஒரு மூணு மணிநேரம் சிரமம் பார்க்காம இந்த வேலையை செய்துட்டோம்னா ஒரேயடியா சின்க் ஐ நல்லா கழுவி விட்டுடலாம். மீன் வெட்டும் கத்தி பலகை எல்லாம் ஒரேயடியாக சுத்தம் செய்துடலாம். அப்பப்போ நான் வெஜ் வாங்கி சுத்தப்படுத்தும் போது இந்த வேலை எல்லாம் தினமும் செய்யற மாதிரி ஆயிடும் :)

இப்போ இவ்ளோ மீனும் கோழியும் மட்டனும் சுத்தம் செய்து சிங்க் நாறிப்போய் இருக்கும். அதை பழையபடி சுத்தமாக வாசனையா மாற்ற ஒரு டிப்ஸ் :). கத்தி, கட்டிங் போர்ட், சிங்க் எல்லாத்தையும் எலுமிச்சம் பழத்தால் நல்லா தேய்ச்சுட்டு மீண்டும் சோப் போட்டு கழுவிடணும். இப்பவும் சில நேரம் வாடை போகாது. கிச்சன் மேடை சுத்தம் செய்ய வச்சிருக்கும் லிக்விட் அல்லது ஃப்ளோர் க்ளீனரில் ஒரு மூடியை சிங்கில் எல்லா இடமும் படற மாதிரி ஊற்றி விட்டால் அப்படியே வாசனை ஆளைத் தூக்கும் :). கட்டிங் போர்டுக்கும் கத்திக்கும் மட்டும் மிஸ்டர் மசில் மாதிரி ஏதாச்சும் ஒன்னை ஸ்ப்ரே பண்ணி மீண்டும் சோப்பால் கழுவினால் நாற்றம் போயே போச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி ரொம்ப அருமையாக தெளிவா சொல்லியிருக்கீங்க எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது இன்னிக்கு க்ளியர் பன்னிட்டீங்க.
அனைவருக்கும் ரொம்ப உபயோகமாக இருக்கும் நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி... நன்றி நன்றி கேட்டாது ஓடி வந்து பதில் சொன்னதுக்கு. கட்டாயம் ஜாக்கிறதையா பயன்படுத்தறேன். விளக்கமா சொன்னத்க்கு மிக்க நன்றி கனி :)

கவிசிவா... வாவ்... இம்புட்டு நீட்டா கடைசியில் க்ளீன் பண்ற வரைக்கும் விளக்கமா... சான்ஸே இல்லங்க. சூப்பர். மிக்க நன்றி :) செய்யும் போது ஏதும் சந்தேகம் வந்தா கட்டாயம் கேட்கறேன் கவிசிவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர்... இனிமே நானும் இததான் ஃபாலோ பண்ண போறேன். கவி அக்கா மணிப்புட்டு எப்படி செய்றதுன்னு நீங்க சொல்வீங்கன்னு வனி அக்கா சொன்னாங்க. எப்ப சொல்லித்தர போறீங்க? எதிர்பாத்துகிட்டுருக்கேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றிலாம் வேணாம் ஷார்ப் பொருட்க்களை பத்ரமா பயன்படுத்தி புது புது நான் வெஜ் ரெசிபியா போடுங்கோ அது போதும்....

உமா அக்கா ஹ்ம்ம் நீங்களும் பத்ரமா கையாளுங்க கத்தி லாம் பயன்படுத்தும் போது ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சிக்கன்/மீன் வெட்டுறதுக்கு நல்ல ஷார்ப்பான கத்தியா வச்சுக்கோங்க.. கத்தியை பிடிக்கிறப்ப பின்னாடி இருக்கிற கைப்பிடியை பிடிச்சு, கத்தியோட கூரான பாகத்தால மீனையோ, சிக்கனையோ நறுக்கணும். அப்படி நறுக்குறப்ப இன்னொரு கையோட விரலை ஒரு 10 செ.மீ தள்ளி வச்சுக்கணும். இல்லேன்னா கத்தி விரலை நறுக்கிடும். அப்படி ஒருவேளை நறுக்கிட்டா விரல்ல இருந்து இரத்தம் வரும். உடனே பஞ்சு வச்சு தொடைச்சிடுங்க.. பஞ்சுல இரத்த கறை இருக்கும்ங்கிறதால அதை வேற எதுக்கும் யூஸ் பண்ண முடியாது.. அதனால அதை குப்பைத் தொட்டியில போட்டுடுங்க. ஓக்கே. சிக்கன்/மீன் எல்லாத்தையும் எப்படி ஃப்ரிஜ்ஜை திறந்து வைக்கிறதுன்னு அடுத்த பதிவுல சொல்றேன். :-)

அண்ணா இவ்ளோ யூஸ்புல்லா ஆன டிப்ஸ்லாம் உங்கள விட்டா வேற யாராலயும் குடுக்க முடியாது ..

படிக்கும் போதே இவ்ளோ விஷயம் இருக்கானு ரொம்ப ப்ரமிப்பா இருக்கு அண்ணா

வா,வ் மார்வெலஸ், ஆசம், சூப்பர்ப், ஃபெண்டாஸ்டிக் ஹா ஹா ஹையோ ஹயோ :-) :-) :-) :-)

அடுத்த பதிவு வேறயா:-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

:o என்னைய வெச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்களா எல்லாரும் 3:)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்