ஹெர்னியா-உதவுங்கள்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்,

அனைவரும் நலமா? எனக்கு உங்கள் அனைவருடைய உதவியும் வேண்டும். என் அப்பாவிற்கு ஹெர்னியா ஆபரேஷன் கடந்த 10 நாட்களுக்கு முன் தான் பண்ணினோம். ஆபரேஷன் முடிந்து மருத்துவர் சொல்லும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து கொண்டு தான் வருகிறோம். இருந்தாலும் வலி குறையவில்லை. கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த வலி இருப்பதாக கூறுகிறார். அவருக்கு வயிற்றில் குடல் புண் வேறு இருக்கிறது. அதுக்கும் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கோம். முன்பெல்லாம் அப்பா சிகரெட் பிடிப்பார். இப்பொழுது அதையெல்லாம் நிறுத்தி விட்டார். இருந்தாலும் ஆபரேஷன், மருந்து என மாறி மாறி ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வருவதாலோ என்னவோ தெரியவில்லை ரொம்ப சோர்வாக இருக்கிறார். முடி எல்லாம் கொட்டி போய், ரொம்ப பலவீனமாக தெரிகிறார். எனக்கு என் அப்பாவை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கு. எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலியே இருக்கிறார். அவர் பழைய மாதிரி மாற நாங்கள் என்ன செய்ய வேண்டும் ? என்ன என்ன உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்? மேலும் ஹெர்னியா பற்றி தெரிந்தவர்கள், ஆபரேஷன்க்கு பிறகு எந்த மாதிரி உணவுமுறைகள் எடுக்க வேண்டும் என்று கூறுங்கள். தயவு செய்து உதவவும். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

ஹாய் சுதா, கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும். என் அப்பாவிற்க்கும் ஆறு மாதங்களுக்கு முன்னால் ஹெர்னியா ஆபரேஷன் நடந்தது. கடவுள் கிருபையால் இப்போது நன்றாக இருக்கிறார். ஆனால் வயிற்றுப்புண் தான் ஆறவில்லை. காரணம், இன்னும் அவர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. என் அப்பா வெளிநாட்டில் இருப்பதால் சாப்பாட்டில் கொஞ்சம் கவனமாக இருப்ப்பார்.. நேரம் தவறாமல் உனவு எடுத்துக் கொள்வார். காரம் சுத்தமாக சேர்ப்பதில்லை. பழங்கள் சாப்பிடுவார். நீங்களும் உங்கள் அப்பாவிற்க்கு இந்த முறையில் உணவு கொடுங்கள். சீக்கிரம் அவர் பழைய நிலைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் அப்பாவுக்கு இப்போ குணமாகிருச்சா. ரொம்ப சந்தோஷம். அப்படியே அப்பா கிட்ட சிகரெட் பிடிக்கறதையும் நிறுத்த சொல்லுங்கள். நீங்க சொல்ற மாதிரியே சாப்பிட கொடுக்கிறோம். பொதுவா இந்த ஆபரேஷன் பண்ணுன்னா மறுபடியும் குடல் இறக்கம் வரும்ன்னு பக்கத்துல இருக்றவங்க சொல்றாங்க. அப்படி வர சான்ஸ் இருக்கா?

எப்பவும் சுறுசுறுப்பா இருக்கிற அப்பா இப்படி வீட்டில் முடங்கி கிடப்பதை நினைச்சு மனசுக்கு கஷ்டமாயிருச்சு. பழையபடி எப்ப மாறுவார்ன்னு இருக்கு. உங்கள் வேண்டுதல் படியே சீக்கிரம் குணமாகனும் அதான் என்னுடைய வேண்டுதலும்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

//மறுபடியும் குடல் இறக்கம்.... வர சான்ஸ் இருக்கா?// கட்டாயம் வரும் என்பது கிடையாது. வரச் சர்ந்தர்ப்பம் இருக்கு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.
//பழையபடி எப்ப மாறுவார்ன்னு இருக்கு.// பத்து நாட்கள்தானே ஆகிறது. குணமாகி திரும்ப பழைய சுறுசுறுப்பு மீண்டுவிடும், யோசிக்காதீங்க.

சிலர் எந்தச் சிகிச்சையானாலும் சமாளித்துவிடுவார்கள். எல்லோராலும் அது முடிவதில்லை. ஒவ்வொருத்தர் உடல் குணமாகும் விதம் வேறு. சிலருக்கு விரைவில் சரியாகிவிடும். சிலருக்கு நாள் எடுக்கும். மனத்தைரியம், உடல்நிலை, சிகிச்சை, வயது எல்லாவற்றையும் பொறுத்தது. இத்தனை நாட்களில் குணமாகும் என்று சொல்ல முடியாது. எப்படி இருந்தாலும் நிச்சயம் சரியாகும். சத்திரசிகிச்சையின் பின் மிகவும் சிரமப்பட்ட ஒருவரைப் பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில் நிமிரச் சிரமப்பட்டு கூனிக்கொண்டு நடப்பார். சில மாதங்களின் பின் சரியாகிவிட்டது.

//கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த வலி இருப்பதாக கூறுகிறார்.// சிகிச்சை செய்த இடத்தில் இன்ஃபெக்க்ஷன் ஆகியிருந்தாலும் இப்படி இருக்கும். உடனே டாக்டரைப் பாருங்கள். //குடல் புண்// ஊகம் வேண்டாம். வேதனை குடற்புண்ணாலா அல்லது வேறு காரணமா என்று தெரிந்துகொள்ள வேண்டும். எதையும் ஆரம்பத்தில் காட்டிவிட்டால் நல்லது. எதற்கு வீணாக வேதனை! //முன்பெல்லாம் அப்பா சிகரெட் பிடிப்பார்.// இப்போது இருமல் இருந்தால் நிறுத்துவதற்கு ஏதாவது கொடுங்கள். இருமினால் வலிக்கும். //முடி எல்லாம் கொட்டி போய்// இது இப்போதிருந்து? சிகிச்சையின் பின்னாலா! எதற்கும் ஒருமுறை டாக்டரிடம் கூட்டிப் போய் உங்கள் சந்தேகங்கள் எல்லாவற்றையும் கேட்டுவருவது நல்லது என்று படுகிறது.

//எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டிலியே இருக்கிறார்.// இப்போதைக்கு அவசரம் வேண்டாம். முதலில் கூட்டிப் போய்க் காட்டுங்கள். தேவைக்கு ஓய்வு எடுக்கட்டும். பொழுது போக ஏதாவது (புத்தகம், பாட்டு, அவருக்குப் பிடித்த ஏதாவது) வழி செய்துகொடுங்கள்.

//ஹெர்னியா பற்றி தெரிந்தவர்கள், ஆபரேஷன்க்கு பிறகு எந்த மாதிரி உணவுமுறைகள் எடுக்க வேண்டும். // எனக்கு ஆம்ப்ளைக்கல் ஹேர்னியா, 1993ல் கூடவே வேறு ஒரு சிறிய சத்திரசிகிச்சையும் சேர்த்துச் செய்தார்கள். முதல் இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் இருந்தேன். அதன் பிறகு வீட்டில் மற்றவர்களுக்குச் சமைத்ததைத்தான் சாப்பிட்டேன். விசேடமாக எதுவும் செய்யவில்லை.

இரண்டு நாட்களுக்கொருமுறை ட்ரெஸ்ஸிங் போனேன். (எனக்கு ஆன்டிபயோடிக் எதுவும் தந்திருக்கவில்லை. உடல் தானாகக் குணமாகும் என்றார்கள்.)

சில வாரங்களின் பின்பு வெளிக் காயத்தைச் சுற்றி மேடுதட்டி சிவந்து வலியும் மிகுதியாக இருந்தது. இன்ஃபெக்ஷன் ஆகி இருந்தது. அப்போதும் மாத்திரைகள் எதுவும் தரவில்லை. தொப்புளில் என்பதால் ஆன்டிபயோடிக் பலன் கொடுக்காது என்றார்கள். வைட்டமின் சீ மட்டும் தினமும் எடுக்கச் சொன்னார்கள். ட்ரெஸ்ஸிங் வெகு காலம் போய்க் கொண்டிருந்தது. சேலை கட்ட சிரமப்பட்டேன். அதோடு கற்பிக்கும் வேலை. படிகள் ஏறி இறங்கவேண்டும். குரல் உயர்த்திப் பேச வேண்டும். சிரமமாக இருக்கும். ஆனால் அதைக் காட்டிக் கொள்வது இல்லை. வீட்டாரோடு எப்போதும் கடுகடுவென்று இருந்தது மட்டும் நினைவு வருகிறது. பாவம் அவர்கள்.) ;))) கிட்டத்தட்ட ஒரு பத்து மாதங்கள் உடல் அவ்வப்போது சிகிச்சையை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. ;)) காலப் போக்கில் எல்லாம் காணாமல் போய்விட்டது. இப்போது எதுவும் இல்லை. எப்போதாவது மிக மோசமாக தொடர் இருமல், வாந்தி என்று வந்தால் பயம் வரும். வயிற்றைப் பிடித்துக் கொள்வேன்.

அப்பாவுக்கு வேறு வகை ஹேர்னியா என்பதால் என் அனுபவம் உங்களுக்கு உதவாது. ஆனால் இன்ஃபெக்க்ஷன் இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. கவனியுங்கள்.

‍- இமா க்றிஸ்

இவ்வளவு விளக்கமா எனக்கு வேண்டி பதில் அனுப்பியதுக்கு மிக்க நன்றி. மேலும் சில சந்தேகங்கள் கொஞ்சம் விளக்குங்கள். ப்ளீஸ்... அப்பாக்கு குடல் புண் என்று நான் சொன்னதுக்கு காரணம் சில மாதங்களுக்கு முன் சரியா சாப்பிடாமல், அதிகமான சிகரெட் பழக்கத்தினால் வயிற்றில் புண் வந்து ரொம்ப கஷ்டபட்டார். டாக்டரிடம் போன போது ஸ்கேன் எடுத்து பார்த்து விட்டு அல்சர் என்றும், சிகரெட் பழக்கத்தை அறவே விட வேண்டும் என்று கூறி அதற்கு தகுந்த ட்ரீட்மென்ட் தந்தார். அந்த ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கும் போதே, ஹெர்னியா இருப்பது தெரிய வந்து இப்பொழுது ஆபரேஷன் முடிந்து அதற்கு மாத்திரை எடுத்துட்டு இருக்கார், பட் தற்சமயம் அல்சர் ட்ரீட்மென்ட் எடுக்கல.

//முடி எல்லாம் கொட்டி போய்// இது இப்போதிருந்து? சிகிச்சையின் பின்னாலா! // அல்சர் ட்ரீட்மென்ட் ஆரம்பத்திலிருந்தே முடி கொட்றதுக்கு ஆரம்பிச்ருச்சு. டாக்டர் கிட்ட அப்பவே கேட்டோம் , வயிற்றில் புண் அதிகமாக இருப்பதாலும், மாத்திரை சாப்பிடுவதாலும் முடி கொட்றது சகஜம் என்று சொன்னார். பட் எனக்கு தான் மனசுக்கு பயமா இருக்கு.

சிகரெட் பிடிப்பதை நிறுத்தியதில் இருந்து இருமல் இல்லை.

//சில வாரங்களின் பின்பு வெளிக் காயத்தைச் சுற்றி மேடுதட்டி சிவந்து வலியும் மிகுதியாக இருந்தது. // அப்பாக்கும் இப்போ அப்படி தான் இருக்கு. பட் ஆபரேஷன் பண்ணுன இடத்துக்கு கீழ தான் அப்படி இருக்குன்னு அப்பா சொல்றார் . சரின்னு டாக்டர் கிட்ட நேற்று போன போது, கொஞ்ச நாட்களுக்கு வலி இருக்கத்தான் செய்யும் , வேற பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறி 15 daysக்கு மாத்திரை தந்துள்ளார். அப்படியும் வலி நிக்கவில்லை என்றால் அடுத்த முறை ஸ்கேன் எடுத்து கொள்ளலாம் என்று சொன்னார். எனக்கு என்ன பயம்ன்னா மறுபடியும் குடல் இறக்கம் வந்து ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிருமோன்னு, கண்டதை நினைக்கிறேன் .

அல்சர்க்கு ஸ்கேன் எடுக்கும் போதே டாக்டர் கேன்சரா இருக்க சான்ஸ் இருக்குன்னு ரொம்ப பயபடுத்திட்டார். பட் கடவுள் புண்ணியத்துல அந்த மாதிரி ஏதும் இல்ல, அல்சர் மட்டும்தான்னு ரிப்போர்ட் வந்துச்சு. அல்சர் ட்ரீட்மென்ட் வேற டாக்டர் கிட்ட காண்பித்தோம். ஹெர்னியா பிரச்சனைக்கு வேற hospital-ல பார்த்தோம். சோ அல்சர் ட்ரீட்மென்ட் எடுக்க முடியல.டாக்டர் கூட ஹெர்னியா ஆபரேஷன்க்கு அப்புறம் அல்சர்க்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம்ன்னு சொல்லிட்டார். அதிகமான மாத்திரை சாப்பிடுவதாலோ என்னமோ வயிற்று பகுதியில் எரிச்சல் இருப்பதாக சொல்றார். இன்று காலையில் கூட உதட்டில் புண் வந்துருக்கு . இதெல்லாம் மாத்திரை எடுப்பதால் வருகிறதா ? குளிர்ச்சியான உணவு கொடுத்தால் சரியாகிவிடுமா?

மன்னிக்கவும் . அதிகமான கேள்விகள் கேட்டு விட்டேன். பட் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அதான் மனதில் இருந்ததை அப்படியே உங்களிடம் கேட்டுட்டேன் .

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

சுதா அப்பா விரைவில் பூரண குணம் பெற எல்லாம் வல்ல பிதாவை இறஞ்சுகிறேன் ... கவலைப்படாதீங்க சீக்ரமா எல்லாம் சரி ஆகிடும் பாருங்க...

இதுக்குமுன்னாடி நான் ஒரு பெரிய நெட்வொர்க் ஹாஸ்பிட்டல் ல தான் வேலை பார்த்தேன் அதுனால எனக்கு தெரின்சத சொல்லுரேன் ....

அதிகமா கார்போஹைட்ரேட்ஸ் உணவு எடுத்துக்கொள்ள கூடாது னு சொல்லுவாங்க சுதா ஏனா அது செரிக்க டைம் ஆகும்..

அப்புரம் நிறயோ லிக்வுட் ட்ரிங்க்ஸ் குடுங்க அது கொஞ்சம் உடம்புக்கு பலம் குடுக்கும்...
எதயும் சூடா சாப்ட கூடாது .... கொஞ்ச நாளைக்கு எண்ணையில் வறுத்த உணவு பொருட்க்களை கண்டிப்பா தவிர்க்கனும்..

அரிசி சாதம் கூட குறச்சுடுங்க காரம் இல்லாம சூப் குடுங்க ... அதே மாறி அதிக குளிர்ச்சி உள்ளதும் சாப்ட வேணாம் டோஸ்ட் பண்ண ப்ரெட், பால், தயிர், மோர் எடுதுக்கலாம் ...

காய்கறிகள் கொடுக்கறதா இருந்தா பொடியா நறுக்கி சமைக்கணும் இல்லனா சாப்டும் போது வயிறு வலிக்கும்... முட்டை அவித்து கொடுக்கலாம்..

உருளைகிழங்கு, கேரட்லாம் வேக வச்சு மசிச்சுட்டு சாப்டலாம் ...

நல்லா ரெஸ்ட் எடுக்கனும் தண்னீர் கொதிக்க வச்சு ஆற வச்சு குடிக்க கொடுங்க....

நல்ல படியா விரைவில் குணமாவாங்க.. நீங்க அப்பாக்கு தைரியம் சொல்லுங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//தற்சமயம் அல்சர் ட்ரீட்மென்ட் எடுக்கல.// குணமாகியாச்சு என்று டாக்டருக்கு தோன்றி இருக்கும். போதும் என்று விட்டிருப்பாங்க.

// மாத்திரை சாப்பிடுவதாலும் முடி கொட்றது சகஜம் என்று சொன்னார். // அப்போ பயம் எதுக்கு! யோசிக்க வேணாம்.
///கொஞ்ச நாட்களுக்கு வலி இருக்கத்தான் செய்யும் // நிச்சயம் இருக்கும். சும்மா குண்டூசி குத்தினா, பென்சில் சீவுறதா விரலை சீவிட்டா வலிக்குதே! இது அதைவிடப் பெருசு இல்லையா? அப்போ என் சின்னவங்க எனக்கு சொல்லுவாங்க 'காயம் என்றால் வலிக்கத்தானே செய்யும்!' என்று. ;)

//எனக்கு என்ன பயம்ன்னா மறுபடியும் குடல் இறக்கம் வந்து ஆபரேஷன் பண்ண வேண்டியதாயிருமோன்னு, கண்டதை நினைக்கிறேன் // தெரியுது இல்ல! ;) கண்டதையும் நினைக்காம அப்பாவை ஒழுங்காப் பார்த்துக்கங்க. நீங்க ஏதாச்சும் பேசி வைக்க அவங்களும் யோசிக்கப் போறாங்க. நிச்சயமா இப்போதைக்கு திரும்ப வராது. திரும்ப வரலாம்னு சொல்றது... நாலைஞ்சு வருஷம் கழிச்சு, அதுவும் கவனமில்லாமல் இருந்தால்தான் வரும். பாரம் தூக்குற வேலை செய்றவங்க யோசிக்கணும். எல்லாருக்கும் இப்படி வருவதில்லை. யோசிக்க வேணாம். எங்க மருமகன் ஒருத்தருக்கு 5 வயசுல பண்ணாங்க. இப்போ 30 வயசு இருக்கும் அவருக்கு. திரும்ப வந்ததாகத் தெரியவில்லை இதுவரை. அப்படி உடனேயெல்லாம் திரும்ப வருவதாக இருந்தால் கட்டாயம் எனக்கு வந்திருக்க வேண்டும். ;)

//அதிகமான மாத்திரை சாப்பிடுவதாலோ என்னமோ வயிற்று பகுதியில் எரிச்சல் இருப்பதாக சொல்றார். // இருக்கலாம். முன்பே அல்சர் இருந்து இருக்கு. அனுபவம் இருக்கும் உங்களுக்கு. அல்சர் இருக்கும் போது பின்பற்றிய உணவு முறையை இப்போதும் பின்பற்றலாம். எரிச்சல் மோசமாகினால் அப்போது வேறு மாத்திரை மாற்றிக் கொடுக்க முடியுமா என்று டாக்டரிடம் கேட்கலாம்.

//இதெல்லாம் மாத்திரை எடுப்பதால் வருகிறதா?// ஹை! நல்ல கேள்வி இது! நான் டாக்டரா! ;) அதுல்லாம் சொல்லத் தெரியாது எனக்கு. எப்போ பயமா இருந்தாலும் கைமருந்து, இங்க கேட்டு பதிலுக்கு காத்துட்டு இருக்கிறதுல்லாம் வேணாம். போய்க் காட்டீரணும். ஆளைப் பார்க்காம ஊகங்கள்ல பதில் சொல்லுவோம் நாங்க. நாங்க யாரும் வைத்தியரும் இல்லை. ஒரு டாக்டர் கண்ணால பார்க்கிறது போல வராது. அவங்க மேல நம்பிக்கையும் இருக்கணும்.

யோசிக்க வேணாம். அப்பாவைப் பார்த்துக் கொள்வதோடு நீங்களும் போதுமான அளவு ரெஸ்ட் எடுங்க.

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கடா? வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?

ரொம்ப தேங்க்ஸ் கனி. இவ்வளவு விளக்கமா எது சாப்பிடம்ன்னு லிஸ்ட் கொடுத்ததுக்கு. கண்டிப்பா இதே மாதிரி உணவு வகைகளை கொடுக்கிறோம். அப்பாவும் அம்மாவும் தைரியமா இருக்காங்க.நான் தான் கண்டதை நினைச்சு அதிகமா பயந்துக்குவேன். இதையெல்லாம் கொஞ்சம் மாத்திக்க ட்ரை பண்ணனும். உன்னோட வேண்டுதல்க்கு ரொம்ப தேங்க்ஸ் கனி.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

உங்களுக்கு பெரிய பெரிய தேங்க்ஸ்.என்னடா அப்பாக்கு உடம்பு சரி இல்லையேன்னு ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு. உங்க நகைச்சுவை கலந்த பதில் எனக்கு சந்தோஷத்தை தந்தது.:)

டாக்டர்ஸ் மேலே நம்பிக்கை இருக்கு. பட் நாமளும் நோய்க்கு தகுந்த உணவு வகையை செய்து கொடுத்து அப்பாவ பழைய மாதிரி இருக்க வைக்கணும்ன்னு ஆசை.அதான் கொஞ்சம் அதிகமாகவே கேள்வி கேட்டுட்டேன். சிரமம் பார்க்காமல் எனக்கு தெளிவாகவும் , நச்ன்னு சில விஷயங்களை புரியற மாதிரி விளங்க வைச்சுட்டீங்க. :)

அப்பாவை நல்லா பார்த்துகிறேன். உங்கள் பதிவை படித்தவுடன் அவர் பூரண குணமடைவார்ன்னு நம்பிக்கை வந்துருச்சு.எவ்வளவு தெளிவா பேசறீங்க! கிரேட் நீங்க.. :-) மிக்க நன்றி!

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

எனக்கு செப்டம்பர் மாதம் அபார்ஷன் ஆகிற்று. அதற்கு முன்பு இருந்தே வயிற்றில் ஏதோ ஒரு அசைவு இருந்தது. அபார்ஷன் பிறகும் இந்த அசைவு இருந்தது. மருத்துவரிடம் ஸ்கேன் செய்து பார்த்தேன். வயிற்றில் காற்று நிறம்பி உள்ளது என்றார்..
இருபது நாட்கள் கழித்து வர சொன்னார்.
மீண்டும் ஸ்கேன் ஹெர்னியா என்று கூறினார்.
வெள்ளை படுகிறதா என்று கேட்டார். எனக்கு வெள்ளை படுதல் இருந்தது.
அதற்கு டாக்டர் ஒன்றும் கூறவில்லை.
இன்று வரை எனக்கு வலது புறத்தில் அந்த அசைவு இருக்கிறது. அதிகமாக வெள்ளை படுகிறது.
மீண்டும் டாக்டரிடம் போகவா வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது.
எனக்கு இதனால் வயிறு மிகவும் கனமாக உள்ளது. படுத்துவிட்டு எழும்ப கூட கனமாக தெரிகிறது.
இது நார்மல் தானா இல்லை நான் தான் குழம்புகிறேனா என்று புரியவில்லை எனக்கு..

//மீண்டும் டாக்டரிடம் போகவா வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது.// இப்போ வேதனை எதுவும் இல்லை; நார்மலாக‌ இருப்பதாகத் தெரிந்தால் போகாமல் விடலாம். ஆனால் இருக்கிறது. போகத்தானே வேண்டும்!!

இந்த‌ டாக்டர் சொல்வது சந்தேகமாக‌ இருந்தால்... அவர் தப்பான‌ டாக்டர் என்று சொல்லவில்லை ‍ சிலருக்கு சிலது சட்டென்று பிடிபடாது; சிலர் பார்த்ததுமே சொல்லுவார்கள். இது அனுபவம் மட்டுமல்ல‌, அவரவருக்கு எந்த‌ லைனில் சுவாரசியம் இருக்கிறது என்பதையும் பொறுத்தது. அதனால் இன்னொரு டாக்டரைப் பார்க்கலாம்.

//எனக்கு இதனால் வயிறு மிகவும் கனமாக உள்ளது. படுத்துவிட்டு எழும்ப கூட கனமாக தெரிகிறது. இது நார்மல் தானா// நீங்களே சொல்லுங்க‌, இது நார்மலாகத் தெரிகிறதா உங்களுக்கு! !!

கருச்சிதைவு ஆகி முழுமையாக‌ 2 மாதங்கள் முடிந்தாயிற்று. அது பிரச்சினையாக‌ இருக்கக் கூடாதுதான். ஆனால்... சந்தேகத்தை வைத்திருப்பானேன்; வலிகளோடு போராடுவானேன்! இது உங்கள் அன்றாட‌ சந்தோஷங்களை, உறக்கத்தைக் குழப்புவதாக‌ இருந்தால், தீர்வு உடனடியாகத் தேடப்பட‌ வேண்டும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் முடிவுகளிலும் தங்கியிருக்கிறது. ஹேர்னியாவாக‌ இருந்தாலும் சரிசெய்தாக‌ வேண்டும்; கருப்பைப் பிரச்சினையாக‌ இருந்தாலும் சரிசெய்தாக‌ வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு; வலிகளைப் பொறுத்துக் கொண்டு போராடுவதற்கு அல்ல‌.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்