பட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா? சிரமமா?

கூவி கூவி பார்த்தேன்... யாரும் நடுவரா வர மாட்டன்னு ஓடிப்புட்டாங்க. 3:) ஆனாலும் விடுறதா இல்லை... நானே நடுவரா வந்திருக்கேன் ;) மாட்டுனீங்களா? இப்ப பதிவு போட வாதம் பண்ண வராதவங்களை எல்லாம் பென்ச் மேல ஏத்த போறேன். அதனால் எல்லாரும் கரக்ட்டா ஆஜராகிடுங்க பார்ப்போம் :P

தலைப்பு: இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா? சிரமமா?

தலைப்பை தந்தமைக்கு நன்றி சோல்இன்பீஸ் (மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை).

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே:

1. யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.
2. அரசியல் அறவே பேசக்கூடாது.
3. அரட்டை கூடவே கூடாது
4. ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.
5. நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.
6. ஆங்கில பதிவு ஏற்கப்பட மாட்டாது.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

யாரு யாரு யாரு அங்க?? எல்லாரும் இங்குட்டு வந்து பதிவை போடுங்க. பல வேலைக்கு நடுவுல வந்து பட்டிமன்றத்தை நேரத்துக்கு துவங்கி இருக்கேன்ல ;) அதுக்காகவாது எல்லாரும் சரியா நேரத்துக்கு வந்துடனும் வாதத்தோட. வாதம் இல்லாம வெறும் கையை வீசிகிட்டு வந்தாலோ, வாராம எஸ்கேப் ஆக பார்த்தாலோ பென்ச் காத்திருக்கு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டிமன்றத்தை துவங்கிய நடுவருக்கு வாழ்த்துக்கள். என்ன நடுவரே இதுல சந்தேகம்... நல்லவரா வாழ்வதே சிரமம் ... ஓரே ஒரு கேள்வி நடுவரே நீங்க நல்லவரா கெட்டவரா....? பிறகு வாரேன்....

அன்புடன்,
லலிதா

அன்பு நடுவருக்கும் தோழிகளுக்க்கும் நல்ல வணக்கமுங்கோ :). நடுவருக்கு இப்போ புரிஞ்சிருக்குமே... அதேதானுங்க நல்லவராக வாழ்வது இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் சாத்தியமே!

முதல்ல ஒரு சின்ன விளக்கம் நடுவரே! நல்லவரா வாழ்வதுன்னா என்ன? தனிமனித ஒழுக்கத்தோடு பிறருக்கும் சமூகத்துக்கும் தீங்கிழைக்காமல் தன்னால் இயன்ற பங்களிப்பை சமூகத்திற்கு செய்து வாழ்பவரைத்தான் நாம் நல்லவரா வாழ்பவர் அப்படீன்னு சொல்லுவோம். நான் புரிஞ்சுக்கிட்டது சரியான்னு நடுவரே நீங்க நல்லவரா வந்து விளக்கம் சொல்லிப்போடுங்கோ :)

இப்படி இருப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் மன உறுதியோடு இருந்தால் நல்லவராக வாழ்வது சாத்தியமே! எவ்வளவு சவால்களுக்கு இடையேயும் தாம் கொண்ட நேர்மையிலும் கொள்கையிலும் இருந்து தவறாத நல்லவருக்கான எடுத்துக்காட்டாக இருப்பவர் திரு. சகாயம் ஐஏஎஸ் அவர்கள். அவர் சந்திக்காத சவால்களா மிரட்டல்களா... இருந்தும் அவர் நல்லவராகவே இருக்கவில்லையா? இப்படிப்பட்டவர் வாழும் காலத்தில்தானே நாமும் இருக்கிறோம். அப்போது நாமும் ஏன் நம் அளவில் நல்லவராக வாழ முடியாது?

இப்போ நல்லா தூக்கம் வந்திடுச்சு நடுவரே! இன்னும் விரிவான வாதங்களுடன் நாளை வருகிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க வாங்க :) முதல்ல வந்ததுக்காக பாராட்டுக்களை பிடிங்க. நல்லவரா இருக்கது கஷ்டம்னு சொல்லி ஆரம்பிச்சுட்டீங்க... குட் ;) ஆனா என்னை ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க பாருங்க... பேட். நான் நல்லவளா? கெட்டவளா? தெரியலயே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்கோ வாங்கோ... உங்க விளக்கம் மிகச்சரியே ;) இந்த காலத்துல நல்லவன் என்பத்ற்கு ஒருத்தருக்கு சரியா விளக்கம் தெரிஞ்சிருக்கே... குட் குட். ஐ லைக் இட் :P

நியாயம் தான்... ஒரு சில நல்லவர்கள் வாழும் போது மற்றவ்ர்கள் ஏன் வாழக்கூடாது நல்லவங்களா? கரக்ட்டு. ஆனா நீங்க சொன்னவங்க கஷ்டங்கள் இல்லாம வாழலன்னும் நீங்களே சொல்லிப்புட்டீங்க. பார்ப்போம்... எதிர் அணி இப்போதைக்கு லலி தான் ;) மற்றவர்களும் வரட்டும். என்ன என்ன சவாலை சந்திக்க நேரிடும்னு சொல்லுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே,
வெகு நாட்களுக்கு பின் உங்களை இங்கே நடுவராக சந்திப்பதில் மகிழ்ச்சி :-)

உண்மையில் தலைப்பு என்னை கொஞ்சம் குழப்புகிறது... ஆனால் என் தோழி லலிதாவிற்கு கம்பெனி கொடுக்க சிரமம் அணியையே நானும் தேர்ந்தெடுக்கிறேன் ;-)

இந்த கேள்விக்கு பதில் ரொம்பவே ஸ்ட்ரெயிட் பார்வர்ட் நடுவரே...
அரிச்சந்திரன் காலம் தொடங்கி இன்று வரை நல்லவராக வாழ்வது சிரமமே...

நல்லவராக வாழ வேண்டும் என்றால் ஒரு சில restrictions உடன் வாழ்வது. கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தாலே சிரமமும் கூடவே வர தானே செய்யும்.

சிரமம் இல்லை என்றால் இத்தனை கோடி மக்களில் இருந்து ஒருவர் பெயரை எடுத்து எதிரணி வாதம் செய்ய வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே!

practical வாழ்க்கையில் சிரமத்துடன் நூறு சதவிகிதம் நல்லவராக வாழ்வதை விட, நம்ம சாமி பட விக்ரம் ஸ்டைலில், நல்லது நடக்க சில விஷயங்களை கண்டும் காணாமலும் இருக்கலாம்... சினிமாவிலேயே இப்போது எல்லாம் இப்படி நூறு சதவிகிதம் நல்லவனாக வாழ்வது சிரமம் எனும் போது, நிஜ வாழ்க்கையை சொல்லவே வேண்டாமே!

பெரிய அளவில் இல்லாமல், சின்ன அளவில் உதாரணம் சொல்லுகிறேன், பள்ளியில் தோழி ஆசிரியையிடம் திட்டு வாங்குவதை தவிர்க்க பொய் சொல்ல மாட்டோமா? அதே போல் தான் நம் உடன் பிறந்தவருக்காக, பெற்றோர்களுக்காக, குடும்பத்திற்காக... இப்படி எத்தனை எத்தனையோ... நான் நேர்மையின் உறைவிடம்... அக்மார்க் நல்லவள், பொய்யே சொல்ல மாட்டேன் என்றால் இங்கே ஒரு individualஆக என்னை மட்டும் இல்லாமல் நம் அன்புக்கு உகந்தவர்களையும் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது, ஏதோ விதத்தில் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டி இருக்கிறது...

முடிந்த அளவில் நல்லவளா(னா)க வாழ முயற்சி செய்யலாம்... அந்த அளவு எந்த அளவு சிரமம் என்ற அளவுகோலை பொருத்தது... நல்லவராக வாழ்வது மிகவும் சிரமமே!!!!

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மீண்டும் வணக்கம் நடுவரே! நல்லவனா வாழ்வதுன்னா பொய்யே சொல்லாமல் வாழ்வது மட்டும் இல்லை நடுவரே. இங்கதான் நம்ப வள்ளுவர் சொல்லியிருக்காரே
"பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கு மெனின்" அப்படீன்னு.

நல்லவனாக வாழ்வபவர்னு எங்க அணி ஒரே ஒரு நபரைக்குறிப்பிட்டுத்தான் வாதம் செய்கிறோமாம். இல்லை நடுவரே நம்மில் பலரும் நம்மளவில் பிறருக்குத் தொல்லையின்றி தனிமனித ஒழுக்கத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் பிரபலமானவர் என்பதால் உதாரணத்திற்கு அவரைக் குறிப்பிட்டு சொன்னோம் அம்புட்டுதான்.

நல்லவராக இருப்பது அப்படி ஒன்னும் சிரமமே இல்லை நடுவரே! சட்டத்தை மதித்து விதிகளை கடைபிடித்து தன்னால் இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்து வாழ்வது அத்தனைக் கடினமா என்ன? நல்லவனா வாழ்வது ஏமாந்த சோணகிரியாக வாழ்வதும் இல்லை. ஹீரோயிசம் காட்டி நாட்டைத் திருத்தப் போகிறேன் என்று சவடால் விட்டு வாழ்வதும் இல்லை. ஒவ்வொருவரும் தன்னளவில், தன்னைச்சுற்றிய விஷயங்களில் நல்லவராக இருந்தாலே போதுமானதுதான். அதில் என்ன சிரமம் வந்துவிடப்போகிறது எதிரணியினருக்கு. எனக்குப் புரியவில்லை நடுவரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவருக்கு வணக்கங்கள்..மேலும் பட்டியை சரியான நேரத்தில் துவங்கியமைக்கு வாழ்த்துக்கள்.....இரு அணிதோழி தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் நடுவரே.....
வணக்கம்போதும் வாதத்துக்கு வான்னு சொல்றது காதுல விழுது.....இதோ வந்தேன்.

நான் நல்லவரா வாழ்வது சிரமமே அணியில் வாதாடுறேன்.

நல்லவன் - தான் ஒழுங்கா இருந்து அடுத்தவரை துன்புறுத்தாமல் உதவி செய்து மற்றவரையும் மகிழ்ச்சியூட்டுபவன்.இப்போதைக்கு அடுத்தவரை துன்புறுத்தாமல் இருப்பவன்னும் சொல்லலாம்.

கெட்டவன் - தான் நன்றாக மகிழ்ச்சியாக இருக்க மற்றவருக்கு தெரிந்தே துன்பத்தை கொடுப்பவன்.தெரியாமலும்கூட தொந்தரவுகள் கொடுக்கலாம் இக்காலத்தில்.

நடுவரே,இக்காலத்தில் தன் சுயத்தை மட்டும் பார்ப்பவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர்.தன் குடும்பத்தில் ஒருவன் அரசு வேலை வாங்கிட திரட்டுத்தொகஒ கொடுப்பவரே அதிகம்.(இல்லை நான் கொடுக்காமல் வேலை வாங்குறேன்னு சிலர் இருந்தால் அவன் இன்னும் வேலை தேடுவார்.)
இங்கே திரட்டுதொகை கொடுப்பது அவரை பொருத்தமட்டும் சரியே,ஆனால் சமூகத்திற்கு அது எவ்வளவு பெரிய தவறு?எவ்வளவு பெரிய துரோகம்?இதில் நல்லவன் கெட்டவனாக மாறிடுரானே....
மீண்டும் வருகிறேன் நடுவரே.நல்லா யோசிங்க.....நீங்க நல்லவரா?கெட்டவரான்னு....

வாங்க வாங்க... நான் கூப்பிடாம நீங்களே ஆஜரானது எனக்கும் மகிழ்ச்சியா இருக்கு :) நடுவரா வந்திருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன் ;)

//அரிச்சந்திரன் காலம் தொடங்கி இன்று வரை நல்லவராக வாழ்வது சிரமமே...// - ஆரம்பத்துலையே ஸ்டராங்கா ஒரு உதாரணத்தை பிடிச்சுபுட்டீங்க.

உண்மை தான்... எல்லாரும் எதாவது ஒரு ஸிடுவேஷன்ல நம்மை சார்ந்தவர்களுக்காகவோ, நமக்காகவோ விட்டுக்கொடுத்து தான் போக வேண்டி இருக்கு. அப்பறம் என்ன நல்லவங்க??? நியாயமான கேள்வி தான்.

ரைட்டு... அடுத்தவாட்டி இன்னும் பெரிய பதிவோட வாங்க, எதிர் அணியை அழ வைக்க :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதானே வள்ளுவரே சொல்லிட்டார்... இனி என்னப்பா? அப்படி பார்த்தா நாம எல்லாருமே நல்லவங்க தானே ;) கரக்ட்டு கரக்ட்டு.

அதானே... மனசாட்சிக்கு விரோதம் இல்லாம நல்லவங்களா இருக்குறது அம்புட்டு கஷ்டமாப்பா? விடாதீங்க கவிசிவா... எதிர் அணியை. (y)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்