இடியாப்பம் ஒட்டாமல் செய்வது எப்படி..

எங்கள் வீட்டில் ஒவ்வொரு முறை இடியாப்பம் செய்யும் பொழுதும் அது ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொன்டே வரும். உதிரி உதிரியாக இருக்காது.

இந்த பிரச்சனையய் சரி செய்வது எப்படி.

தயவு செய்து உதவுங்கள்.

நன்றி.

இடியப்ப மாவில் நன்கு கொதித்த நீர் ஊற்றி கரண்டியால் கிளறி ஆறியதும் பிசைந்து (தண்ணிர் கூடவோ குறையவோ செய்யக்கூடாது)அச்சில் போடும்போது இறுக்கமாக இருக்கக்கூடாது.விரும்பினால் இட்லி பாத்திரத்தில் ஆயில் தடவிக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

சுபா சொன்னதைத்தான் நானும் சொல்ல வந்தேன். தட்டில் ஒட்டாமலிருக்க எண்ணெய் தடவலாம். மாவுக்கு நீர் அதிகம் சேர்த்தால் சரியாகப் பிழியவே வராது. பெரியகண் உரலில் பிழியலாம்தான். ஆனால் பிறகு இப்படி ஒட்டிக் கொள்ளும். நீர் தளதளவென்று கொதிக்க ஆரம்பித்த பிறகுதான் தட்டை ஸ்டீமரின் உள்ளே வைக்கவேண்டும்.

‍- இமா க்றிஸ்

நீரை நன்கு கொதிக்கவிட்டு இடியப்பமாவை பிசையவும்.இறுக்கமாக பிசையக்கூடாது.அப்போதுதான் பிளிய இலேசாக இருக்கும்.தட்டில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தடவிக்கொள்ளவும்.

மேலும் சில பதிவுகள்