ஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப்

தேதி: July 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு கப்
வெள்ளை மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாலுடன் மேத்தி, வெள்ளை மிளகுத் தூள், அரிசி மாவு, சோள மாவு, மிளகுத் தூள், சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் கரம் மசாலா தூள், நறுக்கிய பூண்டு, கொத்தமல்லித் தழை சேர்த்து பொரியவிடவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் ஸ்வீட் கார்ன் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பால் கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்
சுவையான ஸ்வீட் கார்ன் ஸ்பைசி சூப் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சூப்பர் சூப் கனி. ரிச் & ஹெல்தி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப் ரொம்ப சூப்பரா இருக்குங்க, கலக்குங்க கனிமொழி :-)

நட்புடன்
குணா

ஹெல்தி சூப் கனி தொடருங்க வாழ்த்துக்கள்

சூப் நல்லா செய்து இருக்கீங்க,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கனி என்னோட ஃபேவரைட் ஸ்வீட் கார்ன் சூப் அருமையா செய்துருக்கீங்க வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உமா அக்கா உங்களின் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் குணா உங்களின் பதிவுக்ம் வருகைக்கும் மிக்க நன்றி... :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா நலமா ? பேசி ரொம்ப நாள் ஆய்டுச்சே... வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அக்கா தம்பிக்களாம் நலம் தானே....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முசி அக்கா வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஸ்வர்ணா அக்கா .. உஙக் பேவரிட் நு தெரியும் அதான் செய்தேன் நீஙக் நலமா??

பிறந்தநாள் லாம் எப்படி போச்சு ....

உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு மிக்க நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

super.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ஹாய் சத்யா அக்கா உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

yennathu akkavaaaa. akkanu kupidatheenga

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

இல்ல நீங்க சிஸ்ட்டர் நு போட்டு இருந்தீங்களே அதான் நானும் அப்டியே கூப்டேன் சரி ஒக்கே சத்யா ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

nanthan ungala akkanu niaichiten.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

சத்யா நீங்களூம் அக்கானு கூப்ட வேண்டம நானும் உங்களை கூப்டல நாம ரெண்டு பேருமே பேர் சொல்லியே கூப்ட்டுப்போம் எனக்கும் 22 தான் சரியா ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ok kani

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

சூப் டேஸ்ட்டாக வந்தது. ஆனால் நான் கூடுதலாக 1/2 கப் பால் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றியும் கிரேவி போல் திக்காக இருந்தது. என்ன காரணம்

ஹாய் மிகவும் தாமதமான பதிலுக்கு சாரி

நீங்க ரொம்ப நேரம் கொதிக்க வச்சுடீங்களோ பாலும் தண்ணீர் சேர்த்து ..

ஏனா சோளமாவு தான் திக்னிங் குடுக்கும். நீங்க ரொம்ப நேரம் விசில் போடுறதுக்கு முன்னாடியே கொதிக்க வச்சு இருந்தா தான் திக்கா வந்து இருக்கும்...

அடுத்த முறை ட்ரை செய்யும் போது தண்ணீரின் அளவை 2 கப் ஆகவும் பால் அளவை 1/2 கப்பாகவும் குறைத்து செய்து பாருங்கள் ... ட்ரை செய்து பார்த்து பதிவிட்டதற்க்கு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்