எக் கார்ன் சாண்ட்விச்

தேதி: August 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

ப்ரவுன் ப்ரெட் - 8
முட்டை - 2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 5 தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
ஸ்வீட் கார்ன் - 5 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
சாட் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

ஸ்வீட் கார்னை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். ஸ்வீட் கார்னுடன் சில்லி ஃப்ளேக்ஸ், வெள்ளை மிளகுத் தூள், அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரே ஒரு சுற்று அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு முட்டை உதிரியாக வந்ததும் இறக்கிவிடவும்.
2 ப்ரவுன் ப்ரெட்டை எடுத்து பட்டர் தடவிக் கொள்ளவும். ஒரு ப்ரெட்டில் அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் கலவையையும், மற்றொரு ப்ரெட்டில் முட்டை கலவையையும் வைத்து மூடவும்.
தவாவை சூடாக்கி எண்ணெய் விட்டு அதில் பிரட்டை வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும். டேஸ்டி எக் கார்ன் சாண்ட்விச் தயார்.

முட்டைக்கு பதிலாக எலும்பில்லாத சிக்கன் துண்டுகளில் தொக்கு செய்தும் ப்ரெட்டில் வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவிற்க்கு மிக்க நன்றி ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லா இருக்கு கனி, குழந்தைகள் விரும்பும் ஹெல்த்தி டிஸ்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ரொம்ப நல்லாருக்கு கனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உங்களின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி... ஹ்ம்ம் கண்டிப்பா குட்டிஸ்க்கு இந்த டிஷ் ரொம்ப புடிக்கும் அக்கா செய்து குடுங்க ....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உமா அக்கா உங்களின் பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி நீங்க FBல இருகீங்களா? உங்க ID என்ன?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா அக்கா ஹ்ம்ம் இருக்கேனே Kani Mozhi இப்படி டை பண்ணிங்கனா ஒரு ஜீசஸ் க்ராஸ் ல ஷால் போட்ட மாறி ஒரு ப்ரொபைல் போட்டோ வரும் அது தான் அக்கா ஐடி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லா வந்திருக்கு கனி... நல்ல முயற்சி... நான் டெய்லி காலை உணவிற்க்கு ப்ரெட் தான் செய்யரேன்... உன் குறிப்பை கண்டிப்பா செய்து பார்க்கிரேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்காக கடவுளை வேண்டிகொள்ளுங்கள் தோழிகளே:குழந்தை பெற தகுதி இல்லாதவள் என்று பல அவமானங்களுக்க பிறகு எனக்கு குழந்தைகக கடவுளை வேண்டி நான் IUI செய்துள்ளேன் எனக்கு இப்போது 2 நாட்கள் தள்ளி போகி இருக்கு . இந்த முறை எனக்கு குழந்தை தங்குவதற்கு எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.
பதிலை எதிர் பார்த்து
நன்றியுடன் :விஜயலட்சுமி