நேச நிழலோரம்... - நித்திலா

மாலை நேரம். இதமான காற்று மலர் பவனத்தை சூழ்ந்திருந்தது. தன் வீட்டின் முன் அறையையே அலுவல் அறையாக பயன்படுத்தி வந்தாள் மலர்விழி."மலர் எம்பிராய்டரீஸ்" என்ற பெயர்ப்பலகை அவள் செய்யும் தொழிலை பறைசாற்றியது. சிறு வயதில் பொழுதுபோக்காக கற்றுக் கொண்டதையே இன்று தன் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டுள்ளாள் மலர்விழி.

"நாளைக்கு காலையில கொடுத்துடறேன் மேம்" என வாடிக்கையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த மலர்விழியைக் கண்டு அறை வாசலிலேயே தயங்கி நின்றார் சௌந்தர்யா.

பேசி முடித்துவிட்டுத் திரும்பிய மலர்விழி, " அம்மா! ஏன் அங்கயே நிற்கறீங்க? என்ன விஷயம்மா"

"மலர்.."

"என்னம்மா"

"மாப்பிள்ளைக்கு குணமாயிட்டா திருச்செந்தூர் வர்றதா வேண்டியிருந்தேன்..."

"நீங்க அவ்வளவு தூரம் தனியா போக வேண்டாம்மா! எல்லாரும் சேர்ந்தே போகலாம்! நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்மா"

"இப்பதான் குணமாயிருக்கார்.. அதுக்குள்ள எதுக்கு அவ்வளவு தூரம் மலர்"

"அப்ப..உங்க வேண்டுதலை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நிறைவேத்திக்கலாம்"

"இல்லைடா! நான் போயிட்டு வந்துடறேன் மலர்"

"அம்மா! உங்களை தனியா அனுப்பிட்டு என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாதுமா"

"இல்லை மலர்! நான்..."

"அம்மா!!!" என இரு மலர்ச் செண்டுகள் ஓடி வந்து மலர்விழியின் கால்களை கட்டிக் கொண்டது.

"என் இரண்டு இளவரசிகளும் ஹோம்வொர்க் முடிச்சுட்டாங்களா"

"முடிச்சுட்டோம்மா" முழங்காலி்ட்டு அமர்ந்த தாயின் கன்னத்தில் ரோஜா மொட்டுகள் இரண்டும் முத்தமிட்டது.

"வெரிகுட்! அம்மாவுக்கு வேலையிருக்கு! பாட்டி கூட பார்க்குக்கு போயிட்டு வர்றீங்களா"

"பாட்டியும், நீங்களுமே வர்றீங்க! அப்பா எப்பம்மா எங்க கூட விளையாட வருவாங்க?" குழந்தைகளின் கண்களில் தெரிந்த ஏக்கம் மலர்விழியின் உள்ளத்தை முள்ளாய் கீறியது.

"சீக்கிரமே வருவாங்க கண்ணா"

"மலர்! என்ன இது? புள்ளைக முன்னாடி கண்கலங்கிட்டு"

அவசரமாக கண்ணீரை உள்ளிழுத்த மலர்விழி," அவங்க கேட்கறதை வாங்கி கொடுங்கம்மா" என தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்து தாயிடம் கொடுத்தாள்.

"பாட்டிக்கு தொல்லை கொடுக்காம விளையாடனும்! சரியா"

"சரிம்மா" கையசைத்துவிட்டு பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு கதை பேசியபடியே சென்றன இருமலர்களும்.

முகில்களுக்குள் மறைந்திருந்த வெண்ணிலவு மெதுவாய் தலைநீட்டி தன் நட்சத்திரத் தோழிகள் வந்து விட்டதைக் கண்டு மகிழ்ந்ததில் அதன் ஒளிவெள்ளம் பூமியை முத்தமிட்டது. சிலுசிலுவென்று வீசிய குளிர்க்காற்றை பொருட்படுத்தாமல் வான் நிலவுக்குள் தன் காதல் நிலவை கண்டு கொண்டிருந்த தினகர் இதழ்கள் புன்னகை சிந்தியது. என்னுடைய நிலவு! சுடும் நிலவு!

"இந்த காதல், கத்திரிக்காய், கொத்தமல்லி பிசினஸ் எல்லாம் என்கிட்ட வேண்டாம் மிஸ்டர்"

"அப்ப நேரா கல்யாணத்துக்கு போயிடலாம்"

"அந்த கொடுமைக்கு நான் கிணத்துல குதிக்கலாம்" கோபத்தில் முகம் சிவக்க,கூந்தல் துள்ளி விழ பேசியவளின் மீது படர்ந்த மனதை மீட்க விரும்பவில்லை தினகர்.

"அம்மா! எனக்கு மலரை பிடிச்சிருக்குமா"

"எனக்கு பிடிக்கலை" தனது மகனின் காதலுக்கு ஒரே வார்த்தையில் சமாதி கட்டினார் அந்த தாய்.

"அம்மா!அவ ரொம்ப நல்லவமா..." முன்னர் மலர்விழி தன் காதலை ஏற்பதற்காக காத்திருந்த தினகர், தன் குடும்பத்தாரின் சம்மதத்திற்காக காத்திருக்கத் தொடங்கினான். நாட்கள் உருண்டோடி வருடங்களாக உருமாறியது. தினகரின் காதல் மாறாமல் இருந்தது போலவே அவன் வீட்டாரும் மலர்விழியை மறுப்பதில் உறுதியாக இருந்தனர். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறி தான் விரும்பிய மலர்விழியின் கரம் பற்றினான் தினகர்.

மொட்டை மாடியில் கைப்பிடிச்சுவற்றில் அமர்ந்தபடி நிலவை ரசித்தபடி நின்றிருந்த கணவனை ரசித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. நான்கு மாதங்கள்! எத்தனை வலியும்,வேதனையுமாக கடந்தது! முடியாதோ என்றெண்ணிய ஒரு கொடிய கனவு முடிந்து விட்டது! கம்பீரமாய் நடப்பவன் பிறர் உதவியுடன் நடக்கும்படி நேர்ந்து விட்டதே! எல்லாம் விதி..இல்லை! மனிதன் ஒழுக்கமின்றி வாழ்வதற்கு விதி மீது எதற்கு பழி போட வேண்டும்??

தீவிர சிகிச்சைப் பிரிவில் தினகரைப் பார்த்த நிமிடம்! அம்மம்மா! இப்போது நினைத்தாலும் மலர்விழியின் தளிர்மேனி நடுங்கியது.தினகரின்றி ஒரு வாழ்வு.. சாத்தியமா.. நிச்சயம் முடியாது! அப்பா! அப்பா! பிள்ளைகளின் கதறல்... ஐய்யோ! கடவுளே! என் குழந்தைகள்...! மகளின் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என ஏற்கனவே பலவீனமாக இருக்கும் அந்த இதயம் தன் துடிப்பை முற்றிலுமாக நிறுத்தியிருக்கும்! அம்மா! ஒரு குடிகாரனால் என் அன்பான குடும்பம் அழிந்து விட இருந்ததே!

அழகான வாழ்க்கையை குடிப்பழக்கத்தால் அலங்கோலமாக்கிக் கொண்டு, எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அக்கறையின்றி தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு, குடித்துவிட்டு வாகனத்தில் பறந்து சாலையில் பயணிப்பவர்களுக்கு காலனாகி அடுத்தவர் வாழ்க்கையையும் அழிக்கும் அரக்கர்களின் செவியில் பாதிக்கப்பட்டவர்களின் கதறல் என்றேனும் விழுமா? உறங்கும் மனசாட்சி எழுமா? சவுக்கடி தருமா?

"மலருக்கு என் மேல் என்னடி கோபம்? முள்ளாய் மாறியது"

"தன்னை வாழ வைக்கிற சூரியன் மேல மலர் கோபப்படுமா என்ன" அருகில் வந்து அமர்ந்த கணவனின் கைகளை மென்மையாக வருடிக் கொடுத்தாள் மலர்விழி.காயமனைத்தும் ஆறிவிட்டது!

"நான் உன்னை வாழ வைக்கலை மலர்! ராணி மாதிரி பார்த்துக்கனும்னு நினைச்சேன்! ஆனா,இப்படி கஷ்டப்பட விட்டுட்டு..."

"என்ன தினு..." அவர்கள் சம்பாஷனையில் குறுக்கிடுவது போல் சப்தமிட்டது தினகரின் கைபேசி.

"பாலா கூப்பிடறான் மலர்"

"பேசுங்க! நான் போய் உங்களுக்கு சூடா பால் கொண்டு வரேன்"

நிமிடங்கள் கடந்து செல்ல, நண்பனிடம் பேசிவிட்டு நிலவையே பார்த்தவாறு நின்றிருந்த தினகர்,மலர்விழியின் வருகையை உணர்ந்த பின்பும் சிலை போலவே நின்றிருந்தான்.

"என்ன தினு! உங்க பிரெண்டு என்ன சொன்னார்? ஆபிஸ்ல எதுவும் சொல்றாங்களா? பரவாயில்லை விடுங்க தினு! நாம வேற வேலை தேடிக்கலாம்! எதுக்கும் கவலைப்படாதீங்க தினு!"

"சென்னை போயிருந்தியா"

"இ...ம்.. அம்மாவை பார்த்தா உங்களுக்கு ஆறுதலா இருக்..."

"அவங்கதான் எங்களுக்கு ஒரே ஒரு பையன்தான்! தினகர்னு ஒரு பையன் இல்லவே இல்லைனு சொல்லிட்டாங்களே.. அதுக்கப்புறமும்.. அங்க போய்... ஏன் மலர்? எனக்கு எல்லாமே நீதான்! அது ஏன் உனக்கு புரியலை"

"இல்லை தினு..."

"வேண்டாம் மலர்! நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்! நமக்கு, நாம மட்டும்தான்! நல்லா ஞாபகம் வைச்சுக்கோ" கோபத்துடன் சென்று அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான் தினகர்.

நின்ற இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்த மலர்விழியைக் கண்டு தினகரின் உள்ளம் அசைந்தது. மெலிந்த உடல், கழுத்து எலும்புகள் தெரிய, நகைகள் எதுவுமின்றி.. பாவம்! என்னுடைய மலர்! வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் அலைந்தே தேய்ந்து போய் விட்டாள்! குழந்தைகளை சமாளிப்பதற்கு எத்தனை போராடி இருப்பாள்? அவள் தாயாரும் அத்தனை பலமானவரல்ல! சாய ஒரு தோளின்றி என் கண்மணி மனதிற்குள்ளேயே தவித்திருப்பாள்!

"மலர்" என தன் கரத்தை தினகர் நீட்ட, அதை ஓடி வந்து பற்றிக் கொண்டாள் மலர்விழி.

"சாரி மலர்! என்னால உனக்கு எவ்வளவு கஷ்..." மலர்விழி தன் ஒற்றை விரல் கொண்டு அவன் பேச்சிற்கு அணையிட்டாள்.

"தினு! அப்பா எங்களை விட்டுட்டு வேற ஒரு பெண்ணோட போனதுக்கப்புறம் நானும்,அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கொடிய பாலைவனமா இருந்துச்சு. அதுல நடந்து நடந்து நான் சோர்ந்து போயிருந்தேன். அப்ப எனக்கு நிழல் தந்தது உங்களோட நேசம்தான்! அதுக்கப்புறம்,இப்ப வரைக்கும் என் வாழ்க்கை சோலைவனமாதான் இருக்கு! இனியும் இருக்கும்"

"எனக்கு வருத்தமெல்லாம் உங்களுக்கு இப்படி ஒரு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சேங்கிறது மட்டும்தான்! என்னால உங்க வலியை வாங்கிக்க முடியலையேங்கிறது மட்டும்தான்!"

"மலர்" என அவள் கைகளைப் பற்றி உள்ளங்கையில் இதழ் பதித்த தினகர்," இனிமேல் இந்த எம்பிராய்டரி வேலை எல்லாம் வேண்டாம் மலர்! இனிமேலும் நீ கஷ்டப்பட விடமாட்டேன்! நான் நாளையில இருந்து ஆபிஸ் போறேன் மலர்"

"கஷ்டம் எல்லாம் இல்லை தினு! இந்த எம்பிராய்டரி வேலை நான் சின்னதில் இருந்து செய்யறதுதான்,அப்ப என் அம்மாவுக்காக செஞ்சேன்! இப்ப என் குழந்தைக்காக செய்யறேன்! கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுங்க, அப்புறம் ஆபிஸ் போகலாம்"

தன் மடி சாய்ந்த தன் முதல் குழந்தையின் தலையை வாஞ்சையுடன் வருடினாள் மலர்விழி. அவள் உள்ளம் பாடும் காதல் தாலாட்டை கண்கள் பிரதிபலிக்க, காதலாகி கசிந்துருகினான் தினகர். விழிகள் பாதி பேச, இதழ்கள் மீதி பேச காதல் அலையங்கு பரவியது. அவர்கள் வாழ்வில் இனி வசந்தகாலம் மட்டுமே என சொல்லி கொடியில் பூத்திருந்த ஜாதிமல்லிப் பூக்களின் நறுமணம் இதமாய் பரவி காதல் உள்ளங்களை ஆசிர்வதித்தது.

வீழும் போது
மடியேந்தும்
காதலது
வரமாகும்!!

Comments

நித்திலா பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதை கதையாக வாசிக்கவில்லை. என்னை மலராகவும், என்னவரை தினகராகவும் நினைத்து விட்டேன்.

//அழகான வாழ்க்கையை குடிப்பழக்கத்தால் அலங்கோலமாக்கிக் கொண்டு, எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் அக்கறையின்றி தன்னைத்தானே அழித்துக் கொள்வதோடு, குடித்துவிட்டு வாகனத்தில் பறந்து சாலையில் பயணிப்பவர்களுக்கு காலனாகி அடுத்தவர் வாழ்க்கையையும் அழிக்கும் அரக்கர்களின் செவியில் பாதிக்கப்பட்டவர்களின் கதறல் என்றேனும் விழுமா? உறங்கும் மனசாட்சி எழுமா? சவுக்கடி தருமா?//
குடிப்பவர்கள் மனதில் அழுத்தமாக பதிய வேண்டிய வரிகள்

//எனக்கு எல்லாமே நீதான்! அது ஏன் உனக்கு புரியலை//
வாசிக்கும் போதே கண்கள் கலங்கி விட்டது.

//

வீழும் போது
மடியேந்தும்
காதலது
வரமாகும்!!//

சத்தியமான வார்த்தை
அருமை அருமை மிகவும் அருமை

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

எனது கதையை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,அறுசுவை குழுவினருக்கும்

எனது மனமார்ந்த நன்றிகள்.

ஹாய் பிரெண்ட்ஸ்,

அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கானல் மீன்களை ரசித்த அன்புள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

"நேச நிழலோரம்"உங்கள் நெஞ்சம் இளைப்பாறியதா என்பதை

அறிய காத்திருக்கிறேன்.

நேரம் அனுமதிக்கும் போது வாசித்து,பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.

அன்புடன்
நித்திலா

ஹாய் நித்தி நிறைய முறை நான் பாராட்டிவிட்டேன்.. பாராட்டி பாராட்டி வார்த்தைகளே இல்லாமல் போனது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மிகவும் அர்த்தமுள்ள கதை.. ஒவ்வொரு குடிப்பவர்களுக்கு நல்ல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கடா.. கதை சூப்பரோ சூப்பர்.. எங்கயிருந்துதான் பிடிப்பாயோ வார்த்தைகளை உன்னை போலவே உன் கதையும் சரி கவிதையும் சரி அழகோ அழகு..

---வீழும் போது
மடியேந்தும்
காதலது
வரமாகும்!!---

என்ன வரிம்மா சூப்பர்டா செல்லம்.. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நித்தி கதை அருமையா இருக்கு....

முகில்களுக்குள் மறைந்திருந்த வெண்ணிலவு மெதுவாய் தலைநீட்டி தன் நட்சத்திரத் தோழிகள் வந்து விட்டதைக் கண்டு மகிழ்ந்ததில் அதன் ஒளிவெள்ளம் பூமியை முத்தமிட்டது. சிலுசிலுவென்று வீசிய குளிர்க்காற்றை பொருட்படுத்தாமல் வான் நிலவுக்குள் தன் காதல் நிலவை கண்டு கொண்டிருந்த தினகர் இதழ்கள் புன்னகை சிந்தியது. என்னுடைய நிலவு! சுடும் நிலவு!
வர்ணனை பிரமாதம்.

உங்கள் திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

உங்க அடுத்த கதையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கதை மிகவும் அருமை.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

நேச நிழலோரம் கதை ரொம்ப அருமையா இருந்துச்சுங்க, கருத்தும் மிக மிக அருமைங்க, ஒவ்வொரு வார்த்தைகளும் வர்ணனைகளும் மிக அருமையாய் கொடுத்திருக்கீங்க, மேலும் தொடர வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

ஹாய் நித்தி
கதையின் கரு அருமை.நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க.
முகில்களுக்குள் மறைந்திருந்த வெண்ணிலவு மெதுவாய் தலைநீட்டி தன் நக்ஷத்திர தோழிகள் வந்து விட்டதை உணர்ந்து...................
சூப்பர் நித்தி.தன் மடி சாய்ந்த முதல்குழந்தை......அருமை
வீழும் போது மடியேந்தும் காதலது வரமாகும்.
அற்புதமான வரிகள்.

ஹாய் தாமரை,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

முதல் பதிவிற்கு மிகவும் நன்றி தாமரை,மிகவும் மகிழ்ந்தேன் :-)

//பாராட்ட வார்த்தைகளே இல்லை. இதை கதையாக வாசிக்கவில்லை. என்னை மலராகவும், என்னவரை தினகராகவும் நினைத்து விட்டேன்//

இந்த கதையை எழுதியதற்கான நிறைவை அடைந்து விட்டேன் தோழி,வேறு

என்ன சொல்ல,உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிகவும் நன்றிமா.

//குடிப்பவர்கள் மனதில் அழுத்தமாக பதிய வேண்டிய வரிகள்// நன்றி தாமரை.

//வாசிக்கும் போதே கண்கள் கலங்கி விட்டது//

என் கதைக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறேன்,மிகவும் நன்றி தாமரை.

//சத்தியமான வார்த்தை//அருமை அருமை மிகவும் அருமை//

உங்கள் பாராட்டில் மனம் ஆனந்த வெள்ளம் கண்டது.மீண்டும் எனது நன்றிகள்.

உங்கள் பதிவால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை தோழி,என்னை

நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருந்த உங்கள் வருகைக்கு எனது

எண்ணிலடங்கா நன்றிகள்.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி தாமரை.

அன்புடன்
நித்திலா

ஹாய் ரேவ்ஸ்,

வாங்க,வாங்க :)

மீண்டும் உங்களை என் கதை பக்கத்தில் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி :-)

உங்க பாராட்டுதானே என்னை எழுத வைக்கிறதே,வார்த்தைகளை தேடி பிடிச்சுட்டு

வாங்க செல்லம் :)

//மிகவும் அர்த்தமுள்ள கதை.. ஒவ்வொரு குடிப்பவர்களுக்கு நல்ல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கடா//

ரொம்ப ரொம்ப நன்றிடா ரேவ்ஸ்.

//கதை சூப்பரோ சூப்பர்//ரொம்ப சந்தோஷம்டா,நன்றி ரேவ்ஸ்.

//எங்கயிருந்துதான் பிடிப்பாயோ வார்த்தைகளை உன்னை போலவே உன் கதையும் சரி கவிதையும் சரி அழகோ அழகு//

உங்க அன்பில் தோய்ந்த பாராட்டில் மிகவும் மகிழ்ந்தேன்,ரொம்ப ரொம்ப நன்றிடா.

//என்ன வரிம்மா சூப்பர்டா செல்லம்//

உங்களுக்கு பிடிச்சதில் ரொம்ப சந்தோஷம் ரேவ்ஸ்.

உங்க பதிவை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன் ரேவ்ஸ்,நீங்க இங்க வந்ததுக்கு

ரொம்ப நன்றிடா.மனம் நிறைந்த பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி

ரேவ்ஸ் :)

அன்புடன்
நித்திலா

ஹாய் உமா,

வாங்க :)

//நித்தி கதை அருமையா இருக்கு//

நித்தி என்ற அழைப்பிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் உமா.

உங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி தோழி.

//வர்ணனை பிரமாதம்//ரொம்ப நன்றிடா,கவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு.

உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி உமா.அடுத்த கதை ஒரு

வாரத்திற்குள் கொடுக்கிறேன் தோழி,நன்றிமா.

வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி உமா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் சத்யா,

என் கதை பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் தோழி :)

நித்திலா சின்னப்பெண்தான்,அக்கா வேண்டாமே.

//கதை மிகவும் அருமை// மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி சத்யா.

முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிகவும் நன்றி தோழி.

அன்புடன்
நித்திலா

வணக்கம் குணா,

//கதை ரொம்ப அருமையா இருந்துச்சுங்க//கருத்தும் மிக மிக அருமைங்க//

மிகுந்த மகிழ்ச்சி,மிகவும் நன்றி குணா.

//ஒவ்வொரு வார்த்தைகளும் வர்ணனைகளும் மிக அருமையாய் கொடுத்திருக்கீங்க//

ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து குறிப்பிட்டு கூறியதற்கும்,வர்ணனை

உங்களை கவர்ந்ததிலும் மிகுந்த மகிழ்ச்சி,நன்றி குணா.

உங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிகவும் நன்றி குணா :)

அன்புடன்
நித்திலா

ஹாய் நிக்கி,

//கதையின் கரு அருமை.நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க.//

ரொம்ப சந்தோஷம்டா,நன்றி நிக்கி.

//முகில்களுக்குள் மறைந்திருந்த வெண்ணிலவு மெதுவாய் தலைநீட்டி தன் நக்ஷத்திர தோழிகள் வந்து விட்டதை உணர்ந்து...//சூப்பர் நித்தி//

வர்ணனையை கவனிச்சு சொன்னதில் ரொம்ப சந்தோஷம்டா.நன்றி நிக்கி.

//தன் மடி சாய்ந்த முதல்குழந்தை......//அருமை//

கதையை ஆழ்ந்து படிச்சிருக்கீங்க,ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் தேங்க்ஸ்டா.

//அற்புதமான வரிகள்// எண்ணிலடங்கா நன்றிகள் நிக்கி.

தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்க வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப

நன்றி நிக்கி :)

அன்புடன்
நித்திலா

நித்திலா மிக அருமையான கதை கதைகுள் ஒரு ஆழமான கருத்து கதையோடவே சேர்ந்தே இருக்கு வர்ணனைகளின் ராணிங்க நீங்க உங்க ரசிகை நான். இன்னும் நிறைய கதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்

நித்திலா உங்க கதை வர்ணனை மிகவும் அருமை தோழி.

"தன்னை வாழ வைக்கிற சூரியன் மேல மலர் கோபப்படுமா என்ன"

வீழும் போது
மடியேந்தும்
காதலது
வரமாகும்!!..
இந்த வரிகள் ரொம்ப சூப்பர்.

உங்கள் அடுத்த கதையை எதிர்ப்பார்க்கும் உங்கள் அன்புத் தோழி, கண்டிப்பா உங்க கதையை தொடர்ந்து படிப்பேன் தோழி.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

நித்திலா அக்கா ( ஐயுயோ நீங்க போன தடவையே அக்கானு கூப்ட கூடாது நு சொன்னீங்களே ஹ்ம்ம் இப்போ நியாபம் வந்துடுச்சு ) ...

நேச நிழலோரம்... கதையோட தலைப்பே தூள்...

நீங்க கதையை நகர்த்திக் கொண்டு போன விதம் அருமையிலும் அருமை....

நீங்க பயன்படுத்தி இருக்குற அழகான வார்த்தைகளுக்கு ஒரு கை குலுக்கல் ...

கதையோட கருத்து மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று...

உங்களின் நேச நிழலோரம் உங்களையும்... உங்கள் கதையையும் மிகவும் நேசிக்க வைத்து ஈர்த்து விட்டது...

மொத்ததில் சூப்பர் ..

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் உமா,

உங்கள் தொடர் வருகைக்கு மிகவும் நன்றி தோழி :)

//மிக அருமையான கதை//ரொம்ப சந்தோஷம்டா,நன்றி உமா.

//கதைகுள் ஒரு ஆழமான கருத்து கதையோடவே சேர்ந்தே இருக்கு//

நன்றி தோழி,தவனித்து குறிப்பிட்டு கூறியதற்கு.

//வர்ணனைகளின் ராணிங்க நீங்க உங்க ரசிகை நான்//

அச்சோ!தேங்க்ஸ்டா உமா.உங்கள் மனம் நிறைந்த பாராட்டிற்கு மிகவும் நன்றி

உமா.என்னை நாளெல்லாம் நிலை கொள்ளாமல் மிதக்க வைத்து விட்டீர்கள்

தோழி.ரொம்ப சந்தோஷமாயிருக்கு உமா.Thanks a ton da.

உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிகவும் நன்றி உமா.

அன்புடன்
நித்திலா

ஹாய் சத்யா,

//உங்க கதை வர்ணனை மிகவும் அருமை//

ரொம்ப நன்றிடா சத்யா.

//தன்னை வாழ வைக்கிற சூரியன் மேல மலர் கோபப்படுமா என்ன//

ரசித்த வரியை குறிப்பிட்டு கூறியதற்கு நன்றி தோழி.

//இந்த வரிகள் ரொம்ப சூப்பர்//

ரொம்ப சந்தோஷமாடா,நன்றி சத்யா.

இன்றெனக்கு ஒரு புதிய வாசகியும்,தோழியும் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

உங்கள் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பேன் சத்யா :)

இருமுறை சுருக்கமாகவும்,விரிவாகவும் பதிவிட்டதற்கு மிகவும் நன்றி தோழி.

அன்புடன்
நித்திலா

ஹாய் கனி,

தொடர்ந்து உங்களை காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது,நன்றி கனி :)

//கதையோட தலைப்பே தூள்//

தலைப்பை கவனித்து கூறியதற்கு நன்றிடா கனி.

//நீங்க கதையை நகர்த்திக் கொண்டு போன விதம் அருமையிலும் அருமை//

ரொம்ப நன்றி தோழி,எத்தனை ஆழமாக கவனித்திருக்கிறீர்கள்,

வாசித்திருக்கிறீர்கள்,மிகுந்த மகிழ்ச்சி.

//நீங்க பயன்படுத்தி இருக்குற அழகான வார்த்தைகளுக்கு ஒரு கை குலுக்கல்//

அன்பான கைகுலுக்கலுக்கு நன்றி தோழி :-)

//கதையோட கருத்து மிகவும் கவனிக்கவேண்டிய ஒன்று//நன்றிடா கனி.

//உங்களின் நேச நிழலோரம் உங்களையும்... உங்கள் கதையையும் மிகவும் நேசிக்க வைத்து ஈர்த்து விட்டது//

அன்பில் தோய்ந்த வார்த்தைகள் என்னை மகிழ்ச்சியில் மூழ்கடித்து விட்டது.

மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்.

//மொத்ததில் சூப்பர்// தேங்க்ஸ்டா கனி :)

உங்கள் அழகான விமர்சனத்திற்கு மிகவும் நன்றி கனி.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக குறிப்பிட்டு கூறியதைப் பார்க்கும் போது

என்னுடைய விமர்சனத்தைப் பார்ப்பது போல் உள்ளது.மகிழ்ச்சி+நன்றி தோழி.

வருகைக்கும்,கருத்திற்கும் ரொம்ப நன்றிடா கனி.

அன்புடன்
நித்திலா

மிகவும் அர்த்தமுள்ள கதை.நித்தி வாழ்த்துக்கள்டா