ஆண்களும் சமையலும்!!!

புதுசா ஒரு தலைப்பு புதுசா ஒரு தலைப்புன்னு எல்லாரும் கேட்டீங்க... எனக்கும் எப்படி யோசிச்சாலும் மண்டையில் ஸ்டாக் இல்லாத மாதிரியே இருந்துது. இப்ப எதேர்சையாக விஜய் டிவி நீயா நானா பார்க்கும் போது தான் மண்டையில் ஒரு பல்பு எரிஞ்சுது... துவங்கிட்டேன். ;) இங்க நீங்க பகிர்ந்துக்க வேண்டிய விஷயம்...

1. ஆண்கள் அடுப்படி பக்கம் வரலாமா கூடாதா?

2. சமையலில் பெண்ணுக்கு ஆண்கள் உதவுவது நல்ல விஷயமா இல்லையா?

3. எது ஆண்களை அடுப்படி பக்கம் வர விடாம தடுக்குது?

4. சமையல் என்பது சுலபமான விஷயமா? கஷ்டமான விஷயமா?

5. நாம கஷ்டப்பட்டு சமைச்சாலும் அதில் குறை சொல்லும் போது எப்படி இருக்கும்?

6. இதுவரை எத்தனை பேருக்கு யார் உதவியும் இல்லாமல் தனியாக சமைத்த அனுபவம் இருக்கு உங்களுக்கு?

7. உங்க கணவர் உங்களுக்கு உதவி செய்தா உங்களூக்கு எப்படி இருக்கும்? என்ன தோணும்?

இப்படி எதை பற்றி வேணும்னாலும் உங்க கருத்தை இங்கே பதியலாம். தமிழ் பதிவு... முடிஞ்சவரை இதை மட்டும் கடைபிடிங்க. ப்ளீஸ் :) பதிவுகளோட வாங்க... இண்ட்ரஸ்டிங்கா எதாவது கதைப்போம்.

வாங்க வாங்க... என்ன டாப்பிக் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு சின்ன பதிவோட விட்டுட்டீங்க... இன்னும் உங்க அனுபவத்தையும், கருத்தையும் பகிர்ந்துக்கங்க. வனி வெயிட்டிங். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பதிவை படிச்சு நான் நிறைய சிரிச்சேன் ;)

எங்க வீட்டிலும் நீங்க சொல்லும் சூழல் ரொம்ப நாளா இருந்துது... இப்ப இல்லை. ;) அவங்க வளரும் சூழல் காரணம். விடாதீங்கோ உங்க பிள்ளைகளை... அப்பறம் ரெஸ்ட் எப்பவுமே இல்லாம போகும், கூடவே மருமககிட்டையும் டோஸ் வாங்க வேண்டிவந்துரும். :(

//சமையல் என்பது பெண்களின் வேலை என்பது என் கணவரின் எண்ணம்// - சமையல் மட்டுமா? வீடு சுத்தம் பண்றது? பாத்திரம் கழுவுறது? பிள்ளைகளை பார்ப்பது? இதெல்லாம் கூட பெண்கள் வேலைன்னு விட்டுடுறாங்களே :(

//தினமும் தனியாத்தான் சமைக்கிறேன் நாலு பேருக்கு (என் 2 பிள்ளைகளையும் சேர்த்து) இதுக்கே தினமும் தரிகிடதோம்.// - ஹஹஹஹ. முடியல ஜெயா முடியல :) சிரிச்சுகிட்டே இருக்கேன்.

தொடருங்க... இந்த தலைப்பு விஷயமா உங்க கருத்துகளை இன்னும் நிறைய சொல்லுங்க. நாங்க இப்படியே சிரிக்கறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சரி உங்க வீட்டுல எதாவது கத்துகிட்டாரா??? :P//

ம்க்கும்... கத்துக்கிட்டாலும் :(. பேச்சிலரா இருக்கும் போது காரக்குழம்பு எல்லாம் சூப்பரா வைப்பாராம். அவர் ஃப்ரென்ட்ஸ் மூலம் கேள்விப்பட்ட விஷயம். சுவைக்கும் பாக்கியம்தான் இன்னும் கிடைக்கல :(

//அப்போ நம்மை மாதிரி வேலைக்கு போகலன்னா??? விட்டுடலாமா?? 3:) கடிச்சுவெச்சுடுவேன்.//

ஐயாம் பாவம்.... விட்டுடுங்கோ :). இன்னிக்கு சமைக்க போரடிக்குது வெளிய சாப்பிடலாம்னு சொன்னாலும் அப்பாவியா ஒத்துக்கறாரே அதுக்காகவே விட்டுடலாம் :)

//ஒரு முறை இவர் வேலையா இருக்காருன்னு இங்க வந்து சேர்ந்த பேக்கேஜ் எல்லாம் தனியா நகர்த்தி வெச்சேன். இப்போ நீயே சுலபமா செய்துருவியே...ன்னு சொல்லி என்னையே செய்ய வைக்கிறார்//

இப்படி தப்பெல்லாம் செய்யவேப்படாது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எல்லா வேலையும் நம்ம தலையில் விழுந்திடும் :). இப்படித்தான் அவங்களும் நினைச்சுட்டு சமையலில் இருந்து எஸ் ஆகறாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதுவரை உங்க பதிவுகள் படிச்சிருக்கேனா நினைவில்லை... இந்த பதிவு சூப்பரு. அப்படியே நேரில் யாரோ பேசிட்டு இருக்க மாதிரி இருந்துது. கலக்குங்க. :)

//ப்ரேக்ஃபாஸ்ட் தோசைனா அவரே தோசை சுட்டு நா கெளம்பிட்டு இருக்கும் போதே ஊட்டி விற்றுவார்.// - குட். ஏங்க அதை சீக்கிரம் சாப்பிட வைக்கன்னு சொல்லிபுட்டீங்க... பாசந்தேன். நம்புங்க ;) எனக்கு எங்க அப்பா செய்வார்... ஸ்கூல் அனுப்ப. இப்ப இவரும் அவர் பிள்ளைகளுக்கு தான் பண்றார் ;) நம்ம வேலைக்குலம் போகலீங்க.. போனா பண்றாரா இல்லையான்னு தெரியும் :P

//எனக்கு இண்டெரெஸ்டிங்கா இருக்கறப்ப ஈசியா ஃபீல் பண்ணுவேன். ஆனா நெறைய பேருக்கு தனியா சமைக்கணும்னா கொஞ்சம் கஷ்டமா தா இருக்கும். அதுவும் எல்லாம் சமைச்ச அப்பறம் பாத்திரம் கழுவும் போது. அப்பறம் சில சமயம் ஏதாவது செஞ்சு நல்ல இல்லனா கஷ்டமாதான் இருக்கும்.// - எனக்கு பிடிச்சதை சமைக்க சொன்னா எனக்கு ஈஸியா இருக்கும் ;) பிடிக்காததை கட்டாயமா சமைக்க சொன்னா... அம்புட்டு தான்.

//ஆனா அவங்க எத செஞ்சாலும் கரெக்ட்டா செய்யயல னு தான் தோணும். கடைசில உங்க கிட்ட வேலை சொல்றதுக்கு நானே செஞ்சிருக்கலாம்னு நா சொல்ல, செஞ்சிக்க வேண்டியது தானே னு அவரு சொல்ல, சண்டையில தா முடியிது!// - இப்ப ரீசண்ட்டா நான் டீயை குறை சொன்னேன்.. எனக்கு அதன் பின் டீயே கிடைக்கல :(

//சிக்கன் வறுவல் னு செஞ்சு சைக்கில 2 கிமீ வந்து குடுத்துட்டு போவரு. நமக்காக இவ்ளோ தூரம் பண்றாறேனு ரொம்ப சந்தோஷமா இருக்கும். என் ரூம் மேட்ஸ் எல்லாம் நீ ரொம்ப லக்கி னு சொல்லிட்டு, எல்லாத்தாயும் காலி பண்ணிடுவாங்க.// - அது அப்போ... இது இப்போ !!! ;)

இன்னும் நிறைய அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகங்க காயதிரி... உங்க பதிவுகள் படிக்க நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//பேச்சிலரா இருக்கும் போது காரக்குழம்பு எல்லாம் சூப்பரா வைப்பாராம். அவர் ஃப்ரென்ட்ஸ் மூலம் கேள்விப்பட்ட விஷயம். சுவைக்கும் பாக்கியம்தான் இன்னும் கிடைக்கல :(// - எங்க ஆள் தனியா இருந்தா இதை செய்தேன் அதை செய்தேன்னு சொல்லுவார். கூடவே ஒரு டயலாக் வரும் “நீ எப்பவாது இதை இவ்வளவு டேஸ்டா பண்ணிருக்கியா??”ன்னு :(

// இன்னிக்கு சமைக்க போரடிக்குது வெளிய சாப்பிடலாம்னு சொன்னாலும் அப்பாவியா ஒத்துக்கறாரே அதுக்காகவே விட்டுடலாம்// - இங்க அதுவும் நடக்காது... “எங்க வீட்டுல வெளிய போய் சாப்பிடவே மாட்டாங்க”னு டயலாக் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆண்கள் கண்டிப்பாக சமையல் தெரிந்துருக்க வேண்டும். பெண்களுக்கு தலைவலினா கூட அவங்களே டீ போட்டு குடிக்க வேண்டியதா இருக்கு. இந்த help கூடவா ஆண்கள் செய்ய கூடாது. உண்மைலே ஆண்களுக்கு சமையல் தெரிந்துருப்பது ஒரு extra qualification. சமையல் என்பது பெண்மைக்கு உரியது மட்டும் இல்லை இப்பதான் ஆண்கள் கேட்டரிங் துறை படிக்கிறார்களே. ஆண்களுக்கு டைம் கிடைக்கும் போது சமையல் கத்துகிட்டா நல்லது, சில சமையத்தில் அவர்களுகே அது usefulla இருக்கும். ஆண்கள் சமையலில் இற்ங்கி சாதனை படைக்க வேண்டாம் ஆனா டீ, காபி, சின்ன சின்ன டிஷ் செய்ய தெரிந்தால் போதுமானது.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

நல்ல தலைப்பு, வரவே வேண்டாம். எனக்கு உடம்பு சரியில்லை நான் தோசை செய்து தரன்னு சொல்லி போனரு மகராசன் தோசை கல்ல எடுத்து அடுப்பு பக்கதுல வைசிட்டாரு, ஒவெர் சூடு , ட்யுப் புடிச்சி எரியுது ஒன்னும் புரியமல் சத்தம் போட்டு வந்து சொல்ல தெரியமா........? நான் அவரசம கோனி பை எடுத்து அனைத்தேன் . அந்த பதட்ரம் இப்ப நெனச்சா கூட நடுக்கல் எடுக்குது.

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

உண்மை தான்... அவங்க தலை வலின்னு சொன்னா நாம காபி போடுறோம், நமக்கு தலைவலி வந்தா??? :( ஹெல்ப் பண்ண ஆளில்லையே. சமையல் பெண்களுக்கு உரியது என்பது வீட்டுல தான்... வெளியன்னா இவங்க சமைப்பாங்க. வீட்டுல நாம இருக்கோமே அதான் உதவுறதில்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல்ல பென்ச்சுல ஏத்தனும் உங்களை 3:) பட்டிமன்றமா இருந்தா வர மாட்டீங்களா??? பேட் கெர்ள். எம்புட்டு பயம்... :(

தோசைக்கே வீட்டை பத்த வைக்கும் அளவுக்கு போயாச்சா!!!! :o இன்னும் சாம்பார் அது இதுன்னு சமைச்சிருந்தா என்னாகிருக்கும்??? ஆத்தி.... இனியும் விடாதீங்கோ அடுப்படி பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பட்டி மன்றம் என்னக்கு கொஞ்சம் பயம்,

இந்த தலைப்ப பத்தி அதிகம பேசனும் , என் குட்டி எலுந்துட்ட நான் அவல கவனிசிட்டு வரேன்.

World is Round, Round is Zero, Zero in Nothing, Nothing is Life..........

மேலும் சில பதிவுகள்