பான்டன் கடல் பாசி

தேதி: August 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

கடல் பாசி - ஒரு கைப்பிடியளவு
பான்டன் இலை - ஒரு கைப்பிடியளவு
சீனி - ஒரு டம்ளர்
தேங்காய் பால் - ஒரு குவளை
உப்பு - சிறிது


 

பான்டன் இலையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
இலையுடன் தேங்காய் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் 3 குவளை தண்ணீர் ஊற்றி கடல் பாசியைப் போட்டு கொதிக்கவிடவும். கடல் பாசி நன்றாக கரைந்ததும் உப்பு மற்றும் சீனி போடவும்.
அதனுடன் வடிகட்டி வைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றவும்.
கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கடல் பாசி கலவையை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
பின்னர் அதை விரும்பிய அச்சுக்களில் ஊற்றி, நன்றாக ஆறியதும் 2 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

nice mam,pandan leaf'na enna tamilnadula kidaikuma,naan kelvi pattadhu illa

maha

வித்தியாசமான குறிப்பு... நல்லாருக்கு ரஸியா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கிரீனி ரெசிபி சூப்பர் அக்கா....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லா செய்து இருக்கீங்க,நானும் இப்படிதான் செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவுக்கு நன்றி மஹா,பான்டன் இலை நம்ம ஊரில்தான் இருக்கு,அது ஒரு வாசனை இலை,நெய்சாதம்,பிரியாணி,மட்டன்,சிக்கன் குழம்பு இவற்றுக்கு போடுவோம்,அன்னாசி செடி போல் இருக்கும்,கடைகளில் கிடைக்குமான்னு தெரியலை.கூகுளில் தேடிபாருங்க,இன்னும் விபரம் கிடைக்கும்

Eat healthy

நன்றி உமா.
கனி கலரும் நேச்சுரல் அன்ட் வாசனையும் நேச்சுரலா இருக்கும்.நன்றி

Eat healthy

சலாம் முஹ்சினா,எப்படி இருக்கீங்க,நோன்பு எப்படி போகுது,இன்னைக்கி கடைசி நோன்பா கூட இருக்கலாம்,கடல்பாசி அதிகமா நோன்பில் மட்டும்தான் செய்வோம்,அதான் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சேன்,இன்னொறு ரெசிபியும் அனுப்பவுள்ளேன்,நன்றி.

Eat healthy