ப்ரைடல் மெஹந்தி டிசைன்

தேதி: August 12, 2013

4
Average: 3.9 (16 votes)

 

மெஹந்தி கோன்

 

முழங்கையின் கீழ் பகுதியில் படத்தில் உள்ளது போல் இரு கோடுகள் வரைந்து அதன் மேல் கொக்கி போன்ற டிசைன்ஸ் வரையவும்.
அதன்பிறகு இரு கோடுகளும் இணையும் இடத்தில் ஒரு கொக்கி டிசைனை வரைந்து அதைச் சுற்றிலும் படத்தில் உள்ள டிசைனை வரையவும்.
அதற்கடுத்து ஒரு மாங்காய் வரைந்து அதன் மேல் பகுதியில் அடுக்கடுக்காக இதேபோல் டிசைன் வரைந்து அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.
பின் அந்த டிசைனை சுற்றிலும் நெருக்கமாக கொக்கி டிசைன்ஸ் வரையவும்.
கொக்கி டிசைனைத் தொடர்ந்து ஒரு வட்டம் வரைந்து அதனுள்ளே கட்டங்கள் வரைந்து நிரப்பவும்.
பின்பு அதன் இருபுறமும் இதேபோல் மாங்காய் வரைந்து அதனுள்ளே விருப்பமான டிசைன்ஸ் வரையவும். பின் அந்த டிசைனிலிருந்து உள்ளங்கை தொடங்கும் வரை புள்ளிகள், கோடுகள் மற்றும் கொக்கி டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.
அதன்பின் உள்ளங்கையின் தொடக்கத்தில் கோடுகள் வரையவும். அதனைத் தொடர்ந்து கட்டை விரலின் கீழ் பகுதியில் ஒரு மாங்காய் வரைந்து அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரைந்து நிரப்பவும்.
படத்தில் உள்ள டிசைனை கட்டை விரலில் வரையவும்.
அதன் கீழ் பகுதியில் இதேபோல் டிசைன் வரையவும். பின் ஒன்றன்மேல் ஒன்றாக வருவது போல் மாங்காய் டிசைன்ஸ் வரைந்து, அதனுள் விருப்பமான டிசைன்ஸ் வரையவும். மீதமுள்ள இடத்தில் நெருக்கமாக கொக்கி டிசைன்ஸ் வரையவும்.
படத்தில் உள்ள டிசைனை ஆள்காட்டி விரலில் வரையவும். மற்ற விரல்களிலும் இதே டிசைனை வரைந்து முடிக்கவும்.
இப்போது அருமையான ப்ரைடல் மெஹந்தி நம் கைகளில்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உங்களுடைய மெஹந்தி டிஸைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ரொம்ப அழகா இருக்கு டிசைன்.கட்டாயம் போட்டு பார்ப்பேன்.வாழ்த்துக்கள் :)

Kalai

அழகான டிசைன் சஹானா.

‍- இமா க்றிஸ்

super

டிசைன் ரொம்ப நல்லா இருக்கு சஹானா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

arumai..............god bless u my child