தொடை உரசி மிகவும் அசிங்கமாக உள்ளது

எனது தொடை மிகவும் பெரிதாகதான் இருக்கும். எனக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம். இரு தொடையும் உரசி மிகவும் அசிங்கமாக உள்ளது. மிகவும் கருப்பாகி விட்டது. தயவு செய்து உதவுங்கள் தோழிகளே. நான் மிகவும் கலாராகா இருப்பேன்.எதாவது cream இருந்தால் கூறவும்.

please yaravathu answer panunga

something is better than nothing.

இறுக்கமான ஆடை மற்றும் அதிகப்படியான வியர்வை காரணமாகவே, இந்த மாதிரி தோல் பகுதி கருப்பாக மாற சான்ஸ் இருக்கு. அதிக உடல் எடை காரணமாகவும் இப்படி ஆக வாய்ப்பு இருக்கு. உடல் எடை அப்போ கம்மி பண்ணுங்க. தானாகவே இந்த ப்ரோப்ளம் சரி ஆயிடும் . நீங்க முடிந்த வரை காட்டன் டிரஸ் அதிகமாக யூஸ் பண்ணுங்க synthetic டிரஸ் கொஞ்ச நாட்களுக்கு அவாய்ட் பண்ணுங்க. குளித்து முடித்தவுடன் வியர்வை வாராமல் இருக்க பவுடர் யூஸ் பண்ணுங்க. தண்ணீர் தினமும் 2 ltr குடிங்க.

எனக்கு தெரிந்து உருளைக்கிழங்கு ப்ளஸ் கடலை மாவு சேர்த்து அரைத்து , கருப்பா இருக்கும் பகுதியில் ரெகுலரா போட்டு பாருங்க. உருளைக்கிழங்கு நேச்சுரல் ப்ளீச் சோ கண்டிப்பா கேக்கும்.

க்ரீம் விட இந்த மாதிரி இயற்கை பொருள் மூலமாக சரி பன்றது நல்லதுன்னு எனக்கு தோணுது.

லெமன் ஜூஸ் கொஞ்சமும் , ஆலிவ் ஆயில் கொஞ்சம் சேர்த்து மசாஜ் செய்துட்டு ஒரு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் வாஷ் பண்ணுங்க. தோல் கலர் திரும்ப கிடைக்க உதவும்.

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

மிகவும் நன்றி sudha mam. நான் அனைத்தையும் முயற்சி செய்து விட்டேன் ஒரு பலனும் இல்லை. இனி திருமணம். என் கணவர் வெளி நாட்டில் உள்ளார் நானும் திருமணம் முடித்து அவருடன் செல்கிறேன். அவர் எப்படி எடுத்து கொள்வாரோ என்று மிகவும் கவலையாக உள்ளது. நான் கலராக இருப்பதால் அங்கு மட்டும் மிகவும் கருப்பாக அசிங்கமாக உள்ளது. அதனால் தான் விரைவில் வெள்ளையாக கிரீம் கேட்டேன். நேரமும் குறைவாகவே உள்ளது. நான் என்ன செய்வது

something is better than nothing.

SKIN LITE என்ற கிரீம் போட்டு பாருங்கள். இது இயற்கை இல்லை. medical store -ல் கிடைக்கும். ஆனால் உடனே கலர் ஆகிவிடும். உங்களுக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

ஹாய் ,

முதலில் வாழ்த்துக்கள். ;)) உங்கள் கல்யாண வாழ்க்கை இனிமையாக அமையும். ;) மேம் எல்லாம் வேண்டாம். பெயர் சொல்லியே அழைக்கலாம். நீங்க PAPAYA KOJIC ACID SOAP AND WHITENING CREAM யூஸ் பண்ணுங்க. இது கண்டிப்பா உங்களுக்கு யூஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்.

Bleaching cream for inner thigh-ன்னு google-ல சர்ச் பண்ணி பாருங்க. நிறைய solution கொடுத்து இருக்காங்க. அப்படியே நான் மேலே சொன்ன soap & cream அதோட reviews கூட google-ல செக் பண்ணுங்க. இந்த soap யூஸ் பண்ணி இரண்டு வாரத்தில் result கிடைக்கும். ஆல் தி பெஸ்ட்.. :-)

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

நன்றி சுதா. நீங்கள் கூறிய PAPAYA KOJIC ACID SOAP AND WHITENING CREAM எனக்கு நன்றாக தெரியும். நான் ஒரு முறை google தேடிய போது தான் அதை பார்த்தேன். அது ஒரு US online shopping website.அதையும் நான் போன மாதம் ஜூலை 12 தேதி ஆர்டர் செய்தேன். அவர்கள் அனுப்பி இங்கு வர ஒரு மாதம் ஆகும்.அதனால் எப்பொழுது வரும் என்றே தெரியாது.எனது நேரம் அவர்களால் அனுப்ப முடிய வில்லை. அவர்களது product அனைத்தும் customs ila மாட்டி விட்டதாம். நான் அனுப்பிய mail ku அவர்கள் பதில் அனுப்பி இருந்தார்கள் 2 நாட்களுக்கு முன்பு. அதுவும் போய் விட்டது.அனைத்தும் எனது நேரம். நான் கொஞ்சம் fat ஆகா தான் இருப்பேன். but medium than. எனது தொடை சிறு வயது முதலே பெருசாக தான் இருக்கும் அதனால் தான் இப்படி கருப்பாகி விட்டது.எனது கவலை ஆனைத்தும் எனது கணவரை திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் நான் பார்கவே போகிறேன். பார்த்து ஒரே வாரத்தில் திருமணம். அதன் பின் அவர் எப்படி எடுத்து கொள்வாரோ என்று தான் அதற்கு முன்பே உங்களிடம் உதவி கேட்கிறேன்.

something is better than nothing.

மிகவும் நன்றி poorni mam. SKIN LITE நான் முயற்சி செய்திருக்கிறேன். அதை apply செய்து மூன்று நாள் கழித்து தோல் உறியும். எனக்கும் அப்படி தான் ஆச்சு திரும்பவும் ஒரு வாரம் கழித்து கருபாகி விட்டது.

something is better than nothing.

டாக்டரை கன்சல்ட் செய்யாமல் அதிகமாக க்ரீம் யூஸ் பண்ணி ரொம்ப கருப்பாக்கிக்க வேண்டாம். நீங்கள் ஸ்கின் டாக்டரை பார்த்து கன்சல்ட் செய்வதே ஒரே வழி. அவர்களால் மட்டும் தான் உங்களுக்கு சொல்யூசன் சொல்ல முடியும்.

வருத்தபடவேண்டாம். உங்களுக்கு வர போகும் கணவரும் உங்களை புரிந்து கொள்வாராக அமைவார். டாக்டரை பாருங்க, அவங்க க்ரீம் சஜஸ் பண்ணுவாஙக, நீச்சயமா க்யூர் ஆயிரும். டோன்ட் ஃபில்... கல்யாண பொன்னு ஹாப்பியா இருங்க. :))

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

kandipaga டாக்டரை கன்சல்ட் seikiren.. thank you so much for your kindness.

something is better than nothing.

Nanri

மேலும் சில பதிவுகள்