சோத்தோ அயாம்

தேதி: August 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

கோழி - அரை கிலோ
வேக வைத்த ரைஸ் நூடுல்ஸ் - 100 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
வேக வைத்த முட்டை - 4
திக் சோயா சாஸ் (ஸ்வீட் சோயா சாஸ்) - 4 தேக்கரண்டி
கஃபிர் எலுமிச்சை இலை - 2 (சாதாரண எலுமிச்சை இலை பயன்படுத்தலாம்)
சலாம் இலை - 2 (கிடைக்கவில்லை என்றால் தவிர்க்கலாம்)
லெங்குவாஸ் (ஃப்ரெஷ் சித்தரத்தை) - 2 அங்குலத் துண்டு
லெமன் கிராஸ் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சிறிய எலுமிச்சை - 2
சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி
அரைக்க 1:
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 (அ) 5 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
ஃப்ரெஷ் மஞ்சள் - அரை அங்குலத் துண்டு (மஞ்சள் தூள் பயன்படுத்தலாம்)
தனியா விதை - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
கேன்டில் நட் - 2 (கிடைக்கவில்லை என்றால் தவிர்க்கலாம்)
அரைக்க 2:
பச்சை மிளகாய் - 7 (அ) 8
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - ஒரு பல்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை (சீனி) - கால் தேக்கரண்டி


 

மிக்ஸியில் அரைக்க 1 ல் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அரைத்த கலவையை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
வதங்கியதும் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் சுத்தம் செய்த கோழித் துண்டுகளைச் சேர்க்கவும். அதனுடன் எலுமிச்சை இலைகள் மற்றும் சலாம் இலைகளை கையால் லேசாக கசக்கி சேர்க்கவும். லெமன் கிராஸில் வெளியே உள்ள இரு இதழ்களையும் எடுத்து விட்டு தடிமனான அடிப்பகுதியை வெட்டிவிட்டு லேசாக இடித்து சேர்க்கவும். லெங்குவாசை தோல் நீக்கிவிட்டு இடித்துச் சேர்க்கவும். பின் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
கோழித் துண்டுகள் வெந்ததும் சூப்பை வடிகட்டி கோழித் துண்டுகளை தனியாக எடுத்து எலும்பு நீக்கி சிறு துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் அரைக்க 2 ல் கொடுத்துள்ள பொருட்களில் சர்க்கரை தவிர மற்றவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பரிமாறும் கிண்ணத்தில் ஒரு கையளவு வேக வைத்த ரைஸ் நூடுல்ஸ் போட்டு, அதன் மீது ஒரு மேசைக்கரண்டி மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ், ஒன்றரை மேசைக்கரண்டி உதிர்த்த கோழித் துண்டுகள் போட்டு வேக வைத்து பாதியாக நறுக்கிய முட்டையை வைக்கவும். அதன்மேல் ஒரு தேக்கரண்டி அளவு ஸ்வீட் அல்லது திக் சோயா சாஸை பரவலாக ஊற்றவும்.
அதன்மீது வடிகட்டி வைத்திருக்கும் சூடான சூப்பை ஊற்றி, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சம் பழத்துடன் பரிமாறவும். அவரவர் காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் கலவையும் எலுமிச்சம் பழச்சாறும் கலந்து சாப்பிடலாம். தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு ஸ்வீட் சோயா சாஸும் ஊற்றிக் கொள்ளலாம்.

சோத்தோ அயாம் (Soto Ayam) இந்தோனேஷியாவில் பிரபலமான உணவு வகை. ஒரு பவுல் சூப்புடன் ஒரு சின்ன பவுல் அளவு சாதமும் சேர்த்து சாப்பிட்டால் முழு உணவாக இருக்கும்.

இந்த சூப்பில் முட்டை கோஸ் தவிர நறுக்கிய தக்காளி துண்டுகள், முளைக்கட்டிய பயறு, வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் டாப்பிங்காக சேர்க்கலாம். எண்ணெயில் பொன்னிறமாக வறுத்த சின்ன வெங்காயத்தை மேலே தூவினால் இன்னும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா ரிச் & ஹெல்தி டிஷ்..... சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கவி அக்கா டிஷ் ரொம்ப சூப்பரா கலர்புல்லா இருக்கு...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அப்பாடியோவ்! எம்மாம் பெரீ..ய லிஸ்ட்!
சிக்கன்... சும்மா பார்த்துட்டு ஓடிருறேன் கவீஸ்.

‍- இமா க்றிஸ்

கவி சூப் குடிச்சிட்டுதான் படிக்கமுடியும் போல இருக்கு அப்போ செய்ற்துக்கு?????????பார்சல் பீளீஸ் நல்ல குறிப்பு

Hi Happy independence day to all jai hind

Wlcome to arusuvai friend Happy independence day to all jai hind

கவி சோத்தோ அயாம் சூப்பரா இருக்கு பார்க்கும்போதே குடிக்கனும்னு தோனுது ஆனா கண்டிப்பா என்னால செய்யமுடியாது அதனால நீங்களே செய்து கொடுத்துடுங்க ப்ளீஸ்
வாழ்த்துக்கள் கவி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சோத்தோ அயாம் - பேரை சொன்னதுமே அயாம் ஃப்ரம் இண்டோனேஷியான்னு சொல்லிடுச்சு ;) சூப்பரு கவிசிவா... இப்ப தான் நீங்க வெளிநாட்டுல இருக்கீங்கன்னு சொன்னா நான் ஒத்துக்குவேன், இதுவரை கேரள பொண்ணுன்னு நினைப்பேன். ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சோத்தோ அயாம் - முகப்பு படம் பார்த்ததும் நீங்களாதான் இருக்கும்னு நினைச்சேன். :-) குறிப்பு, படங்கள் எல்லாமும் பளிச்சுனு அழகா இருக்கு. வாழ்த்துக்கள் கவி!

அன்புடன்
சுஸ்ரீ

'சோத்தோ அயாம்' பெயரே தூள், ரொம்ப ரொம்ப அருமைங் , படங்களும் சூப்பர் :-)

நட்புடன்
குணா

வாவ் கவி கலக்கிட்டீங்க... இவ்ளோ செய்பொருட்கள் பார்த்ததும் தலை சுற்றுது, நாங்க தான் சமையலில் இன்னும் கத்துகுட்டியாச்சே... பேசாமல் நான் எப்ப பாத்தம் வரேனோ அப்ப செய்து குடுத்திடுங்க...

வாழ்த்துக்க்ள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

தாமதமான பதிவுக்கு முதலில் மன்னிச்சு மன்னிச்சு :). ஊர் சுத்திட்டு வந்ததுல லேட்டாயிடுச்சு. நன்றி டீம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி உமா! ஆமா உமா ஹெல்தியான சூப்தான் :). .

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கனி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா! லிஸ்ட்தான் பெரிசு... செய்வது சுலபம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஹமீது ஃபாத்திமா. கொஞ்சம் தம் கட்டி படிச்சு செய்துட்டா தெம்பா சூப் குடிக்கலாம் :). உங்களுக்கு பார்சல் அனுப்பிட்டேனே வந்துச்சா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீக்கிரமா கிளம்பி இந்தப்பக்கம் ஒரு ட்ரிப் அடிங்க. சூடா செய்து கொடுக்கறேன். நன்றி சுவா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாஹா வனி... பேரே சொல்லிடுச்சா அயாம் ஃப்ரம் இந்தோதோனேஷியான்னு :). அயாம் னா இந்த ஊர் மொழியில் கோழி என்று அர்த்தம். கேரள பொண்ணுன்னு நினைக்கப்படாது... நான் அக்மார்க் தமிழச்சியாக்கும் :). என்ன... கேரள பார்டரில் இருப்பதால் எங்க ஊர் சமையலிலும் கேரள சாயல் இருக்கும்.

நன்றி வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

முகப்பில் பார்த்ததுமே கண்டுபிடிச்சுட்டீங்களா... பவுலை மாத்தணும் :). நன்றி சுஶ்ரீ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி குணா தம்பிங் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி பிரேமா! கண்டிப்பா பத்தாம் வர்றப்போ செய்து கொடுக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!