சமையல் சார்ந்த பழமொழிகள்

ஹாய் அறுசுவையோரே! :-) _()_

என்னிடம் சின்னதாக 'சமையலறைப் பழமொழிகள் ' என்று ஒரு புத்தகம் இருந்தது. தேடினேன், காணவில்லை. ஊரில் விட்டுவிட்டு வந்திருப்பேன்.

ஒவ்வொரு ஊரிலும் பிரபலமான பழமொழிகள் சிலது இருக்கும். இந்த இழை கண்ணில் படும் பொழுது ஆளுக்கு இரண்டு பழமொழிகள் - சமையலறைப் பழமொழிகள் மட்டும் சொல்லிவிட்டுப் போங்களேன். சொலவடைகள், பொன்மொழிகள் வேண்டாம்; பழமொழிகள் மட்டும். அவை தமிழில் மட்டும். ஆங்கிலம், தமிங்கிலம் வேண்டாம்.

பாத்திரம், பண்டம், சுவை, ஆரோக்கியம் என்று எது பற்றியும் இருக்கலாம். ஏதாவது ஒரு விதத்தில் சமையல் அல்லது உணவு தொடர்பாக அமைந்தால் போதும்.

இழையில் ஏற்கனவே சொல்லியிருப்பவற்றைத் தவிர்த்து இல்லாதவற்றை மட்டும் பதிவிட்டால் நல்லது. வேறு இணையத்தளங்களின் சுட்டிகள், வெட்டி ஒட்டுதல் நிச்சயம் வேண்டாம். பழமொழி தொடர்பான அரட்டைக்கு அனுமதி உண்டு. அது இல்லாவிட்டால் இழை சுவைக்காது. :-) வேறு வித அரட்டைகள், விசாரிப்புகள் வேண்டாம்.

நன்றி

//ஆளுக்கு இரண்டு பழமொழிகள்// இரண்டு என்றால் 2 அல்ல. ;)

ஆறின கஞ்சி பழங்கஞ்சி. ;)))
இழையை ஆற விடாமல் ஓடி வாங்க.

‍- இமா க்றிஸ்

இமா வணக்கம் _()_
சமையலறை பழமொழி:))

உப்பிட்டவரை உள்ளளவும் நினை...
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்....

(இப்பத்திக்கு மண்டைல இம்புட்டுத்தான் இருக்கு:)) )

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உணவே மருந்து

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு

மாதா ஊட்டாத சோற்றை மாங்கா ஊட்டும்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

கண்டதை தின்பவன் குண்டன் ஆவான்

என் மண்டையில் எட்டியது இம்ஸ் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

பழகப் பழக பாலும் புளிக்கும்

கலை

எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம் ;) இருந்தாலும் என் பங்குன்னு ஒன்னு வேணுமே... எனக்கு தெரிஞ்ச கொஞ்சனஜ்சத்தையும் அத்தனை பேரும் சொல்லிப்புட்டு போயிட்டாங்க...

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

இறுகினால் களி இளகினால் கூழ்.

ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்க வேண்டும்.

உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

பசி ருசியரியாது.

உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்....// என்றால்... //(இப்பத்திக்கு மண்டைல இம்புட்டுத்தான் இருக்கு:))// என்று அர்த்தமா! ஓகே! சூ..ப்பர் அருள். ;)))
~~~~~~~~
//கண்டதை தின்பவன் குண்டன் ஆவான்.// இது சூப்பரா இருக்கே! ;)
//என் மண்டையில் எட்டியது// ரம்ஸ்ஸுக்கு சட்டி, அகப்பை உதாரணம் சரிவராது. பாட்டில், ஷாட் க்ளாஸ் பற்றி பழமொழி ஏதாச்சும் இல்லையா மக்கள்ஸ்! ;)))
~~~~~~~~
ம்... நான் 100 வயது வாழ்வேன்னு கலை சொல்லிட்டாங்க. அவ்வ்வ்! //கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.// என்னை எப்போ பார்த்திருப்பாங்க கலை!! ;)))
//பழகப் பழக பாலும் புளிக்கும்.// அப்போ!! உறை குற்றத் தேவையில்லையா!! ;)))
~~~~~~~~~~~~~
வனீஸ்... //அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்//க்கப் போகிறேன் கிடைத்ததும். ;)
//எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.// அன்றாட வாழ்க்கையிலிருந்து எத்தனை விஷயங்கள் இப்படிப் பழமொழி ஆகிருது இல்ல!
**********
சந்தோஷம். நால்வருக்கும் நன்றி. மீண்டும் வருக.

‍- இமா க்றிஸ்

//சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்....// என்றால்... //(இப்பத்திக்கு மண்டைல இம்புட்டுத்தான் இருக்கு:))// என்று அர்த்தமா! ஓகே! சூ..ப்பர் அருள். ;)))// அக்காங்... இப்ப கொஞ்சம் ஊறுச்சு இம்ஸ்ஸ்...

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது....

கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துக்குடி....(ஆரோக்கியம்)

ஒய்யாரக்கொண்டையில தாழம்பூவாம் உள்ள இருக்கு ஈறும் பேனும்..... (ஆரோக்கியம்)

சட்டி சுட்டதடா கைவிட்டதடா....(சமையல் பாத்திரம் வந்திடுச்சல்லோ)

வித்தாரக்கள்ளி விறகு ஒடிக்கப்போனாலாம் கத்தாழ முள்ளு கொத்தோட ஏறுச்சாம்.....( விறகு சமையல்ல ஒன்றுதானே, இப்ப கூட பீபீக்யூவிற்கு சில இடங்களில் கரி தேவைப்படுத்தல்லவா)

நோகாம நோம்பிகும்புட முடியுமா??.... ( முயற்சி எடுக்காம செயல் நடக்குமா?? ஹீ ஹீ அதுனால இதுவும் அதிலே எதாச்சி ஒன்றுக்கு சம்பந்தபடுத்திடுங்கோ)

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்...(நெல் களத்தில கொட்டி துற்றுவாங்க, அப்ப காற்று வேணும்ல, அதுனால இதுவும் உணவு சம்பந்தப்பட்டது.. நோட் திஸ் உவர் ஆனர்)

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.....

குண்டுசட்டிக்குள்ள குதிரயோட்டமுடியுமா?? (மீண்டும் சட்டி :))

(இழை தொடங்கினாலும் தொடங்கினீங்கமண்டைக்குள்ள ஒரே இமா(ம்)சையா கீது)

இமா நான் எழுதியதில் ஏதேனும் சொலவடையாகவோ, பொன்மொழியாகவோ இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் , திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்பதாலேயே இந்த வேண்டுகோள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்தையும் எல்லோரும் சொல்லிப்புட்டாங்க இனிமே நான் எங்க போவேன் இல்லாத மூளையை கசக்கினதில் கிடைச்சது இதாங்கோ

கேழ்வரகுல நெய் வடியுதுன்னா கேப்பாருக்கு மதி எங்கே போச்சி

பசி வந்தா பத்தும் பறந்துபோகும்

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூனு வேனும்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

இப்போதைக்கு எட்டியது ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இது என்ன வடைங்க??? :( எனக்கு சத்தியமா இதுக்கு வித்தியாசம் தெரியல... பழமொழி, சொலவடை.. அப்பப்ப நம்ம சீதா பயன்படுத்துவாங்க, கேட்டா அது அது தான்னு சொல்வாங்க. அந்த அது எதுன்னு இன்னும் புரியல. எனக்கு தெரிஞ்சதெல்லாம் உளுந்த வடை, மசாலா வடை, கீரை வடை தான்... ஹூ இஸ் திஸ் சொலவடை??? எனக்கு இப்போ இந்த எல்லா வார்த்தைக்கும் டீச்சரம்மா விளக்கம் வேணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஊர் வாயை மூட உலை மூடி இல்லை.
பல்லு நொறுங்க தின்னணும்; எல்லு நொறுங்க வேலை செய்யணும்.
பைய பைய தின்னால் பனையையும் தின்னலாம்.
பந்திக்கு முந்து; படைக்கு பிந்து.
கத்தரிக்காய் முற்றினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.
கோழி குருடானாலும் குழம்பு ருசிக்கும்.
மாமியார் உடைச்சா மண்குடம்; மருமகள் உடைச்சா பொன்குடம்.
அஞ்சும் செட்டாயிருந்தா அறியாபொண்ணும் கறி சமைப்பாள்.
கையிலே காசு; வாயிலே தோசை.
சுண்டைக்காய் காப்பணம்; சுமைகூலி முக்காபபணம்.
சுத்தம் சோறு போடும்.
முருங்கையை ஒடிச்சு வள; பிளளையை அடிச்சு வள.

மேலும் சில பதிவுகள்