பொரித்த பரோட்டா

தேதி: August 28, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

மைதா மாவு - அரை கிலோ
சீனி - 3 மேசைக்கரண்டி
நெய் - 100 கிராம் + 50 கிராம்
முட்டை - 2
பால் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் நன்கு காய்ச்சிய சூடான நெய்யை ஊற்றவும். பிறகு கலக்கிய முட்டை, பால், சீனி மற்றும் உப்பு சேர்த்து பிசையவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பரோட்டா மாவை விட சற்று இறுக்கமாக பிசையவும். தண்ணீர் அதிகம் விடக்கூடாது. மாவை உருண்டைகளாக உருட்டி அதன்மேல் நெய் தடவி, மூடி போட்டு ஒரு மணி நேரம் வரை வைத்திருக்கவும்.
பின்னர் அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து மெல்லியதாக தேய்க்கவும். அதன் இருபுறமும் நெய் தடவவும்.
அதன்மீது மாவைத் தூவி முன்னும், பின்னுமாக (விசிறி போல்) மடிக்கவும். மடிப்பின் இடைக்கிடையே நன்கு மாவு தூவி பரோட்டா போல் சுருட்டவும்.
மீதமுள்ள உருண்டைகளையும் இதேபோல் தயார் செய்து, அதன்மேல் நெய் தடவி வைக்கவும்.
சுருட்டிய பரோட்டாக்களை மிகவும் மெல்லியதாகவும் இல்லாமல், மொத்தமாகவும் இல்லாமல் தேய்க்கவும். மீண்டும் இருபுறமும் நெய் தடவவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு தீயில் வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும்.
சுவையான, மொறு மொறுப்பான பொரித்த பரோட்டா ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இந்தச் செய்முறையில் சிறு மாற்றமிருந்தாலும் பரோட்டா நமர்த்து போகக்கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

super...

பொரிச்ச பரோட்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்,இதன் செய்முறையைதான் நான் தேடிகிட்டு இருந்தேன்,நன்றி.சர்சேல் வந்தால் இதுக்காகவே உங்க வீட்டுக்கு வரேன்,ஹிஹி

Eat healthy

பரோட்டா சூப்பர் அக்கா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அக்கா பொரித்த பரோட்டா செம சூப்பர் அண்ட் கிரிஸ்பி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அவசியம் வாங்க ரஸியா,பெரியெ விருந்தே சாப்பிடலாம்.ஒருமுறை செய்து பாருங்க,கொஞ்சமாக,பாதி அளவாக குறைத்து செய்து பாருங்க.எனகே இரண்டு முறை சுதப்பிவிட்டது.செய்ய செய்ய சரியாக வரும்.வகான்ஸ் முடிய போகுதே?sortie என்கேயாவது போனிங்களா?

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு நன்றி கனி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Poritha parota super. appadiye itharkku oru nalla side dish m seithu kaatungal....

நன்றி ஜோசிகா,இதர்க்கு காரசாரமான மட்டன் அல்லது சிக்கன் குழம்பு பெஸ்ட் காமினேசன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.