திருநெல்வேலி தோழிகளே சேலைக்கு ஜமிக்கி வாங்க ஹோல் சேல் கடை தெரியுமா.

ஹாய் friends எனக்கு கொஞ்சம் சாரிஸ்க்கு பால்ஸ், ஜமிக்கி, ஸ்டோன். எல்லாம் வாங்கனும். திருநெல்வேலி தோழிகள் ஹோல் சேல் கடை, or அது வாங்க கூடிய கடை முகவரி தெரியுமா. பீளிஸ் help me.

tirunelveli town -la நெல்லையப்பர் கோவில் தெற்கு ரத வீதியில் professional courier இருக்கு. அதற்கு பக்கத்தில் இருக்கு. town போனா பாருங்க.கடை பெயர் ஞாபகம் இல்லை.நான் நம்ம அறுசுவை தோழிசொல்லி போனேன்.ஜமிக்கி,ஜிகினா,ஸ்டோன்,எல்லாம் வைத்திருக்கிறார்கள்.விலையும் குறைவே தோழி.

டவுண் நெல்லையப்பர் கோவிலுக்கு கொஞ்சம் பக்கத்தில, காந்திமதி ஸ்டோர்ஸ்னு ஒரு கடை இருக்கு.... அங்க கேட்டு பாருங்க. நாலு வருசத்துக்கு முன்னாடி நான் அங்க ஜமிக்கி, ஸ்டோன்ஸ் வாங்கினேன். அதுக்குப்பறம் அங்க போக வாய்ப்பு கிடைக்கல

அன்புடன்
மதி

மேலும் சில பதிவுகள்