கேழ்வரகு புட்டு

தேதி: September 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

கேழ்வரகு மாவு - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் - 4
உப்பு - கால் தேக்கரண்டி

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சர்க்கரையுடன் உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் அரைத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்க்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாவில் ஊற்றி உதிரியாக இருக்கும்படி பிசைந்து கொள்ளவும். பின் புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புட்டு குழாயில் முதலில் தேங்காய் துருவல் அதன் மேல் கேழ்வரகு மாவு, பிறகு மீண்டும் தேங்காய் துருவல், கேழ்வரகு மாவு என மாற்றி மாற்றி புட்டுக் குழாயை நிரப்பவும்.
அதை அப்படியே மூடி புட்டு பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சுவையான கேழ்வரகு புட்டு தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சர்க்கரை கரைந்து சுவையாக இருக்குமே! சூப்பர் கனி.
//20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சுவையான கேழ்வரகு புட்டு தயார்.// எப்பிடி சிரிக்க வைச்சீங்க! தேங்காய்ப்பூ! அழகா இருக்கு. ;)

‍- இமா க்றிஸ்

அட்மின் அட்மின் என்ன சொல்ல அய்யோ நான் மறந்தே போய்டேன் நீங்க கேட்டத .. இருந்தாலும் இப்படி ஷாக்லாம் குடுக்க கூடாது மிக்க மிக்க நன்றி குறிப்பை வெளியிட்டதற்க்கு....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி... நானும் சிரிக்காத என் ரெசிபி பார்த்து என் ரெசிபியே சிரிச்சா அறுசுவை ல போட மாட்டாங்கனு சொன்னேன்ம்மா ஆனா அது கேகுர மாறி தெரிலா... நானும் சிரினு விடுட்டேன் ஹ்ம்ம் தேங்காய் பூவே தான்.. இன்ஃபேக்ட் இது மம்மா ஐடியா .... :-) :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி,ஹெல்த்தி புட்டு.நல்லா இருக்கு,இனியும் குறிப்புகள் பல கொடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

புட்டு சூப்பர் கனி... நான் இதை சீனி இல்லாமல் செய்வேன்.... சீனி போட்டு செய்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா அக்கா உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Super and helathy receipa..

Be simple be sample

வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்