நான் மிகவும் கவலையில் இருக்கேன் நேற்று மதியம் கடையில் தேங்காய் வாங்கினேன் அதை உடைத்தேன் அழுகி இருந்தது இன்று இரவு கடைக்கு போயி ஒரு தேங்காய் வாங்கினேன் அதுவும் அழுகி இருந்தது மருபடியும் இன்று இரவே 2 தேங்காய் வாங்கினேன் அதுவும் அழுகி இருந்தது எனக்கு ஒன்னுமே புரியலே எப்படி 4 தேங்காவும் அழுகி இருக்கு எனக்கு மனசே சரியில்லை உடனே எங்க அம்மாவுக்கு போன் பன்னி 4 பேருக்கு சாப்பாடு குடு சொன்னேன் இருந்தாலும் எனக்கு கவலையா இருக்கு எங்க அம்மா கிட்ட நான் சொல்லலே ஏன சொன்னா அவுங்க கவலை படுவாங்க எங்க வாப்பாக்கு இந்த வர செவ்வாய் கிழமை கண் ஆப்ரேசன் பன்னுறாங்க அதனாலே நான் சொல்லலே எனக்கு ஒரே குழப்பம இருக்கு நான் இப்படியேல்லாம் நினைகிறது சரியா தப்பானு தெரியலே சகோதிரிகலே
ஹாய் ஷமிம், ஏன்
ஹாய் ஷமிம், ஏன் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க.. எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். கவலைபடாதிங்க.. தேங்காயை ஒரே கடையில வாங்காதீங்க.. வேற கடைக்கு போய் வாங்கிப்பாருங்கப்பா... அழுகாத தேங்காய் கிடைக்கும்.. இதுக்கெல்லாம் மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுங்க..
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
ஷமீம்
அஸ்ஸலாமு அலைக்கும் ஷமீம் நம்ம அல்லாவை நம்புவோம்.மூட நம்பிக்கை வேண்டாம். வாப்பாக்கு கன் ஆபரேஷன் நல்லபடியா நடந்து நல்லாயிருப்பங்க.நீங்க ரெண்டு ரக் ஆத் ந்ஃபில் தொழுது அல்லாஹ் இடம் துவா செய்ங்க அல்லாஹ் சந்தோஷம் கொடுப்பானாக ஆமீன்
ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
தேங்காய்
//எப்படி 4 தேங்காவும் அழுகி இருக்கு// இதுல என்ன யோசிக்க இருக்கு! தேங்காய் மட்டுமில்லை, ஒரு சீசனுக்கு வர மாங்காய் கூட எல்லா கடைலயும் அழுகியே இருக்கு. என்ன, அதை உடைக்க மாட்டோம். கத்தியால நறுக்ஸ். :-)
நல்லது வந்தா எல்லாக் கடையிலயும் நல்லதாவே கிடைக்குது. அமெரிக்கால இருக்கீங்க. இதுல ஆச்சரியப்படுறதுக்கோ யோசிக்கிறதுக்கோ எதுவுமே இல்லை.
//...4 பேருக்கு சாப்பாடு குடு சொன்னேன்// ம்.. அது நல்ல விஷயம்தான். இவ்வளவு யோசிக்கிற ஆளா இருக்கீங்க. இனிமேல் உடைக்கிற தேங்காய் நல்லதா இருந்தா... அதுக்கு நன்றியாக மறக்காம நாலு பேருக்கு சாப்பாடு போடணும். ஓகேயா?
//எங்க வாப்பாக்கு இந்த வர செவ்வாய் கிழமை கண் ஆப்ரேசன் பன்னுறாங்க// யோசிக்காதீங்க, எல்லாம் நல்லபடி நடக்கும்.
//இப்படியேல்லாம் நினைகிறது சரியா தப்பா// நினைக்கிறது தப்பு.
ஆனா நீங்க பண்ணினது சரி. :-)
நொந்து போன நீங்க கூட, திரும்பப் போய் "ஏன் சார் சரியில்லாதை வித்தீங்க? பணத்தைத் திரும்பக் கொடுங்க, இல்லாட்டா வேற நல்லது மாத்திக் கொடுங்க," என்று சண்டை போடல பாருங்க. அவர் உள்ள இருக்கிறது பற்றித் தெரியாம வித்திருக்கார். நாலு தடவை மன்னிச்சிருக்கீங்க. இல்லாட்டா நஷ்டம் அவருக்கு. அந்தக் கடைக்காரருக்கு நல்லதுதானே நடந்திருக்கு!! வாப்பாவுக்கும் நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்.
- இமா க்றிஸ்
Shamim
Ithukupoi kavalapadringa..ipo ula thengaye apdithanrku.dont fel.
Kalam pon ponrathu
தேங்காய்
Shamim, நீங்க அமெரிக்காவில் இருந்துகிட்டு இப்படி கவலை பட கூடாது . நானும் அமெரிக்காவில் தான் இருக்கிறேன். இங்கே கிடைக்கும் தேங்காய் 75% அழுகி தான் இருக்கிறது . நான் வாங்கும்போது கடையிலேயே உடைத்து கேட்டு வாங்குவேன் . அப்படி உடைத்து வாங்கும் போது தேங்காய் அழுகி இருந்தால் வேற தேங்காய் replace பண்ணுவாங்கள். இனி நீங்க வாங்கும் போது உடைத்து கேட்டு வாங்குங்க
Nithi_Nimal
நீங்க அமெரிக்காவில் எங்க இருக்கீங்க
பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது
am new user
hai frns. enaku oru help. na ithuku puthusu. ungakita pesanumnu ninaikiren. eppadi enoda topic podanumnu therila. konjam help pannunga plzzz
fahmeetha
neenga forumla poi anga entha topicla question kekanumnu ninaikirengalo atha click panni unga questiona kekalam puthusa thret aarambikalam.
அன்பே கடவுள்.
சங்கரேஸ்வரி.