வ்லி வரதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

எங்க வாப்பாக்கு கண் ஆப்ரேசன் நல்லபடிய முடிஞ்சிருச்சி எங்க அம்மாக்கு இருந்த கவலையில ஒன்னு நல்லபடிய ஆயிடிச்சி இப்ப என் தங்கச்சி இன்னும் அவளுக்கு வலி வரல டாக்டர் 2 நாள் கழிச்சு வர சொல்லிருக்காங்க வ்லி வரதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

வேண்டாம். நீங்களாக எதுவுமே செய்ய வேண்டாம். இயற்கையாக வலி வரட்டும் அல்லது ஹாஸ்பிட்டல் போன பின்னால் வலி வரவைக்க ஏதாவது கொடுப்பார்கள். அது வேறு. அவர்கள் மீதி பார்ப்பார்கள். அதனால் பாதுகாப்பு பற்றிப் பயப்பட வேண்டியது இல்லை.

தயவு செய்து வீட்டில் வைத்து வலி வர எதுவும் கொடுக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

இமா சொன்னதையே தான் சொல்ல நானும் வந்தேன்... எனக்கு ஹாஸ்பிடல்ல கூட வலி வர கொடுக்கும் மருந்து மேல நம்பிக்கை இல்லை... அப்படி இருக்கும் போது வீட்டு வைத்தியம்... வேண்டவே வேண்டாம்னு மட்டும் தான் சொல்வேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்