இக்கான் சம்பால் கோரேங்

தேதி: September 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

மீன் - 300 கிராம்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
லெமன் கிராஸ் - ஒன்று
எலுமிச்சை இலைகள் - 2 (அ) 3
எண்ணெய் - 3 (அ) 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பழுத்த மிளகாய் அல்லது மிளகாய் வற்றல் - 15 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறு துண்டு
தக்காளி - ஒன்று
சர்க்கரை (சீனி) - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

மீனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். (மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. மிளகாய் வற்றல் பயன்படுத்துவதாக இருந்தால் வெந்நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் அரைக்கவும்).
வாணலியில் எண்ணெயை சூடாக்கி ஊறவைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் அரைத்த மிளகாய் கலவை, லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். (லெமன் கிராஸின் தடிமனான அடிப்பகுதியை மட்டும் லேசாக நசுக்கிச் சேர்க்கவும். எலுமிச்சை இலைகளை கையால் கசக்கிச் சேர்க்கவும்).
மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை குறைந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். (மசாலா மிகவும் ட்ரையாவது போல் தோன்றினால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம், காரம் குறைவான மிளகாயை அதிக எண்ணிக்கையில் சேர்த்தால் தேவையான அளவு மசாலா கிடைக்கும்).
அதனுடன் பொரித்த மீன் துண்டுகளைச் சேர்க்கவும். மீன் துண்டுகளுடன் மசாலா சேரும்படி நன்றாக கிளறி மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
சுவையான இந்தோனேஷியன் இக்கான் சம்பால் கோரேங் (Ikan Sambal Goreng) தயார். ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இந்தோனேஷிய மொழியில் இக்கான் (Ikan) என்றால் மீன். கோரேங் (Goreng) என்றால் பொரிப்பது (ஃப்ரை). சம்பால் என்பது நம் சட்னி எனச் சொல்லலாம். அனைத்து வகையான மீனிலும் இதைச் செய்யலாம். திருக்கை மீனில் செய்தால் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

இந்தோனேஷியர்கள் பெலாச்சான் என்னும் ஷ்ரிம்ப் பேஸ்ட் சேர்த்து செய்வார்கள். ஆனால், அதன் ஸ்ட்ராங் ஸ்மெல் நம்மால் சாப்பிட முடியாது. இங்கே மசாலாவின் அளவை அதிகரிக்க கேண்டில் நட் (Candle Nut) என்னும் பொருளைச் சேர்த்து அரைப்பார்கள். உங்கள் பகுதிகளில் கேண்டில் நட் கிடைத்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

குறிப்பை தெளிவாக எடிட் செய்து வெளியிட்டமைக்கு நன்றி டீம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அருமையான குறிப்பு அக்கா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கொரேங் என்று படித்ததும் கவீஸ்தான் நினைவுக்கு வந்தீர்கள். ;) பார்க்க அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

பேரும், குறிப்பும் கலக்கலா இருக்கு...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

meen azhaga irukku. beautiful kurippu. kalakkuringa.

Superppppp Akka,,
apdiye oru barcel plz .. :)))

நன்றி உமா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹா ஹா கோரேங் னதும் என் ஞாபகம் வந்திடுச்சா. பார்க்க மட்டும் இல்லை லெமன் கிராஸ் எலுமிச்சை இலை வாசனையோடு காரமாக சாப்பிடவும் நல்லா இருக்கும். நன்றி இமாம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பஹாசா இந்தோனேஷியா பேராச்சே அதான் சூப்பரா இருக்கு :). நன்றி ராஜி

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சரிகாஜெய்ன்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நிகிஷாவுக்கு ஒரு இக்கான் சம்பால் கோரேங் பார்சே....ல் :). நன்றி நிகிஷா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Pakave alagarku na try panren.nalaike...

Kalam pon ponrathu

நான் மீன் சாப்பிட மாட்டேனே. அதனால்தான் அந்த... //பார்க்க அழகாக இருக்கிறது.// கமண்ட். ;)

‍- இமா க்றிஸ்

ஹா ஹா எனக்கு தெரியுமே நீங்க மீன் சாப்பிட மாட்டீங்கன்னு :). இதே ரெசிப்பியை அப்படியே கோழியிலும் செய்யலாம். இஞ்சிப்பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, மிளகுதுதூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊறவைது இதேபோல் செய்யலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ராணா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Super Fish Curry

Ella puzhalum Iraivan Oruvanuke

ஹாஹாஹா ;) முடியல கவீஸ். ;))) //அப்படியே கோழியிலும்// என் முதல் எதிரியே அவங்கதானே. ;D பக்கத்து இலைல இருந்தாலே என் இலைல உள்ளதெல்லாம் உள்ளபடியே இருக்கும். எதுவுமே இறங்காது.
வாழ்க்கை வாழ்வதற்கே! சாப்பிட முடியாததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல! ;)))))))
ம்.. கவிக்காக பண்ணி சாப்பிட்டுப் பார்க்கிறேன். ;)

‍- இமா க்றிஸ்

நன்றி மோஹனாசுதாகர்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹ் கோழியும் உங்க எதிரியா :O. ஆலு சம்பால் கோரேங்க் செய்து பாருங்க :)

//வாழ்க்கை வாழ்வதற்கே! சாப்பிட முடியாததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல! //

ஹாஹாஹா.. இது சூப்பர்! :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

aahaa kavi.. samaya irukku.. intha month seiyamaatomey... next month kandipa seithuduvaen. .m.lamon cross ena..

Be simple be sample

குறிப்பு நல்லா இருக்கு,தாய் மசாலா சேர்த்து நானும் செய்வதுண்டு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆ பார்க்கும் போதே சாபிட தோணுது எலுமிச்சை இலை சேர்க்காமல் செய்தா நல்லா இருக்குமா இங்கு கிடைக்காதே

நன்றி ரேவதி! புரட்டாசி முடிஞ்சதும் செய்யுங்க :). லெமன் கிராஸ் (lemon grass) பார்க்க பனங்கிழங்கு ஷேப்பில் இருக்கும் எலுமிச்சை வாசனையோட. lemon grass னு கூகுள் பண்ணி பாருங்க படங்கள் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி முசி. தாய் மசாலா இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நஸ்ரின்! எலுமிச்சை இலை சேர்க்காமல் செய்தால் அந்த மணம் குறையும். சுவையில் வித்தியாசம் இருக்காது. தாய் ஷாப் இருந்தால் அங்கே கண்டிப்பாக லெமன் கிராஸ் எலுமிச்சை இலை எல்லாம் கிடைக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி அருமையா இருக்கு ஆனா இந்த மாசம் முழுக்க அறுசுவையை கண்ணை கட்டிக்கிட்டுதான் பாக்கனும் போல ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.