நீர் கடுப்புH

தோழிகளே எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் பல சோதனைகள் முடிந்து விட்டது. எந்த பிரச்சனையும் இல்லை என் கூறிவிட்டனர். குடும்ப பிரச்சனை காரணமாக் நானும் என் கணவரும் கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்தோம். 20 நாள் முன்புதான் சேர்ந்தோம்.இப்போது 5,6 நாட்களாக எனக்கு நீர்கடுப்பு பயங்கரமாக இருக்கிறது. அடிக்கடி பாத்ரூம் வருவது போல் உள்ளது. ஆனால் சிறிதளவே வருகிறது. இரவு தூக்கமே வரமாட்டேங்கிறது.
மதியம் தூக்கம் வந்தாலும் தூங்க முடியவில்லை. அடிக்கடி பாத்ரூம் செல்ல தோன்றுவதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.இன்றுதான் டாக்டரிடம் செல்ல போறேன்.நீர் கடுப்பு தீர தண்ணீரும் குடித்து பார்த்துவிட்டேன். தயவுசெய்து உதவுங்கள். பீரியட்ஸ் ஆகஸ்டு 30 வந்தது. இந்த மாதம் 15 வது நாள் வழியும் ரொம்ப வலித்தது. இப்போது நீர் கடுப்பு. உதவுங்கள் தோழிகளே!!

அன்பு ஸ்ரீதேவி,

புளியை ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு எடுத்து, நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நன்றாகக் கரைத்து, வடிகட்டி, எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கருப்பட்டியை(வெல்லம் அல்ல) சிறு துண்டுகளாக தட்டி, இந்த புளித் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பானகத்தை, 15-20 நிமிடத்துக்கு ஒரு முறை, சிறிது சிறிதாக அருந்துங்கள்.

நீர்க் கடுப்புக்கு மிகச் சிறந்த மருந்து இது.

ஒரு வெள்ளைத்துணியை நனைத்து, வயிற்றில் தொப்புளின் மேல், போடலாம். ஈரம் காயக் காய, திரும்பவும் நனைத்துப் போடவும்.

நீங்கள் புது இடத்தில் குடி வந்திருக்கிறீர்கள் என்றால், இங்கு இருக்கும் குடி தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லையென்றாலும் நீர்க் கடுப்பு வரலாம். மினரல் வாட்டர் அருந்துங்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

thanneer kudinka. leman juice kudinka. ilaneer kudinka. dr.kitta ponka, urine test pannuvanka .tab. saptta sariyagitum. payapada vendam. venthayam saptunka. ithu kastama than irukkum. enakum summar time la over ra varum.

நேத்து டாக்டர்ட்ட போனேன். யூரின் டெஸ்ட் பண்ணாங்க. லைட்டா ப்ளட் கலந்து இருக்காம். கல்ச்சர் டெஸ்ட் ரிசல்ட் நாளை தெரியும்னு சொன்னாங்க. இளநீர், தண்ணீர் எல்லாம் குடிச்சிட்டேன். ஆனா லைட்டா கடுப்பு இருந்துட்டே இருக்கு.
நைட் பூரா தூங்கல.ஊசி போடல. மாத்திரை மட்டும் தான் தந்தாங்க. தேங்க்ஸ் அக்கா.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

Plz frnds.help me .nigtlam thoonga mudla 4 daysa neer kadupu iruku..ena panrathu help me frnds...

Kalam pon ponrathu

நீர்கடுப்பு தீர இளநீர் அருந்தலாம், அந்த காலத்து பாட்டி வைத்தியம் புளியங்கொட்டை நன்கு மென்று சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து திங்கலாம், நம்பிக்கை வைத்தியம் கால் கட்டை பெரு விரலில் சுண்ணாம்பு தடவுவார்கள் இந்த கால காலேஜ் பசங்க புதுட்ரெண்ட் கண்டுபிடித்திருக்கிறார்கள் நிஜாம் சுபாரி பாக்கு இருக்கிறது அல்லவா அதை நன்கு மென்று தின்றுவிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்

Thank u frnd.sunampu poten.but enake theriyuthu odampu rompa heeta irukunu nenaiken.athanalathan ipd nerkadupu varukiratha?

Kalam pon ponrathu

சீதா சொன்ன கைவைத்தியம் ட்ரை பண்ணீங்களா? பண்ணிப்பாருங்களேன். நானும் ஷிஃபா சொன்ன மாதிரி கேட்டிருக்கேன்.. பாக்கு சாப்பிடுறது, இளநீர் குடிப்பது... இப்படி. இதெல்லாம் செய்தாலும் ஃப்ரீகுவண்டா நீர் குடிக்கனும். சீரகம் ஊற வெச்ச நீர் குடிச்சாலும் நீர்கடுப்பு நீங்கும். பகல் முழுக்க் நிறைய தண்ணி குடிங்க... ஒரே நாளில் சரியாகிடும். கூடவே தலைக்கு தேங்காய் எண்ணெய் / நல்லெண்ணெய் வைத்து ஊற விட்டு குளிங்க. உடல் உஷ்னம் குறையும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய்,

நீர்கடுப்புக்கு தொப்புள் சுற்றி விபூதியை நீரில் கரைத்து கெட்டியாக‌ பத்துபோடலாம்.சாதம் கொதிக்கும்போது கொதி நீர் ஒரு கப் அதில் நிறைய‌ வெண்ணை சேர்த்து வெதுவெதுப்பாக‌ குடிக்கலாம்.சுரைக்காய்,பூசனிகாய்,பீர்கை போன்ற‌ நீர்சத்துள்ள காய்களை கூட்டாக‌ செய்து சாப்பிடலாம்.

ரஜினிபாய்

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

எனக்கு 30 நாள்க்காலவே நீர்கடுப்பு உள்ளது.நான் நிறைய‌ தண்ணீர் குடிக்கிரேன்.காலையில் வெந்தயத்தை தயிரில் உரவைத்து சாப்பிடுகிரேன்,ஆனால் அப்போது மட்டும் தான் சரியாகிரது
நான் குழந்தைக்கா சிகிச்சை எடுக்கிரேன்.இதனால் எதவாது பாதிப்பு வருமா?
அதுமட்டும் இல்லாமல் எனக்கு கடந்த‌ 6 மாதமாக வெள்ளைபடுகிரது,(பால் திரிந்தது போல் )நானும் dr கிட்ட‌ சொன்னேன்.அவர் ஆன்டிபாயடிக் கொடுத்தர்.
3முறை மாத்திரை சாப்பிட்டு விட்டேன்,குணமாகவில்லை.ஏதவாது வீட்டுவைத்தியம் இருந்தல் கூறுங்கள் தோழி
pls thozhi uthavunggal

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

pla thozhi uthavunggal .pls pa eannala mudiyala

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

மேலும் சில பதிவுகள்