வணக்கம் பிரண்ட்ஸ்!
இன்னொரு சந்தேகம் பிளீஸ் உங்களுக்கு இதில் அனுபவம் இருந்தா சொல்லுங்க. எனது கடைசி பீரியட் டேட் - 19 ஆகஸ்ட்.
நான் கர்ப்பமாக இருக்கின்றேனோ என்ற எண்ணம் அடிக்கடி உண்டானதால் நேற்று இரவு வீட்டில் சிறுநீர் பரிசோதனை செய்து பார்த்தோம். அதில் ஒரு கோடு மிக தெளிவாகவும் தடிப்பாகவும் இருக்க, மற்ற கோடு மங்கலாக தெரிகின்றது. மீண்டும் உறுதி செய்ய இன்னொரு ஸ்ட்ரிப் லும் செய்த போது அதே மாதிரி தான் வந்தது.
மீண்டும் இன்று காலை சிறுநீரில் பரிசோதித்த போதும் அதே போல ஒரு கோடு மங்கலாகத்தான் தெரிகின்றது.
இதற்கு அர்த்தம் என்ன இது + ஆ? நான் கர்ப்பமா? ஒரே குழப்பமாகவும் , இனம்புரியாத மனநிலையிலும் இருக்கின்றேன். பிளீஸ் எனது குழப்பத்தை தீர்த்து வையுங்கள் நண்பிகளே!
இப்படி அனுபவம் உள்ள நண்பிகளிடமிருந்தும் ஆலோசனைகள் தேவை. பிளீஸ் சொல்லுங்க
hi frnd,
enga akkavuku ippadidhan light ah therinchudhu ava docterkitta poi conform pannikitta. sep19 docterkitta check pannunga 32 days la therium... happy ah irunga pa...naan pray paannuren ungaluku..
Muthumari
ஹாய் முத்துமாரி,
ரொம்ப தேங்க்ஸ்பா, என்னவரும் இதைத்தான் சொல்றார். ஆனாலும் ஒரு அவசரம்! நம்பிக்கையா இருக்கு பார்ப்போம்.
எனக்காக பிரார்த்திக்கிறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா
hi frnd,
thanks ellam vendam pa...neenga sandhosapadura maadhiri ellam nadakkum.. manasa relax vachukkonga...
Muthumari
இன்பாஸா சஎஹூன்
dont worry pa ennakum ethe matiri than line vanthatu conform aidhuchu.ungalukum conform aidum.Ethana naal airuku pa
விஜி
தேங்க்ஸ்பா, எத்தன நாள்னு தெரியல்ல. லாஸ்ட் பீரியட் 19 ஆக்ஸ்ட்பா!
hi frnd,
test panni paarthingala..
Muthumari
இன்பாஸா சஎஹூன்
இதில் வருத்த பட ஒன்றும் இல்லை.. இது போல் எனக்கும் இருந்தது.. ஒரு வாரம் கழித்து பார்த்த போது நல்லா தெளிவா தெரிந்தது.. போனமாதம் 18 ம் தேதி தானே இன்னும் ஒரு வாரம் போகட்டும்.. 45 நாள் கழித்து எடுத்தால் நல்ல ரிசல்ட் தெரியும்.. ரொம்ப சந்தோஷமா இருங்க.. டென்ஷன் ஆகாதீங்க.. அதிக எடையுள்ள பொருட்களை தூக்காதீங்க.. உடம்பை பார்த்துக்கோங்க.. நிச்சயம் நல்ல செய்தியாக தான் இருக்கும்.. டாக்டர்கிட்ட போய் அட்வைஸ் கேளுங்க.. அவங்க சொல்வாங்க.. மற்றப்படி இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை தோழி.. சீக்கிரம் குட்டி பாப்பா உங்கள் வீட்டில் விளையாடுவார்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
நன்றி நண்பிகளே
நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்!! நேற்றுத்தான் பிளட் டெஸ்ட் பண்ணொம். பொஸிடிவ்!! ஆமா!!! நான் கர்ப்பமா இருக்கேன்... (HCG - 1332 ன்னு போட்டிருந்துச்சு ) ரொம்ப ஹெப்பி... வர்ர 12ம் திகதி ஸ்கேனிங்க் க்கு வர சொல்லி இருக்காங்க..
இது என் முதல் கர்ப்பம். ரொம்ப மகிழ்ச்சியாவும் எக்ஸைட்டிங்காவும் இருக்கு பிரண்ட்ஸ்.. எல்லாம் நல்லபடியா நடக்க ப்ரே பண்ணுங்கப்பா!
முத்து & ரேவதி தேங்க்ஸ்பா!
hi frnd,
congratz......... dear frnd..happy ah irunka.....
Muthumari
Infasha
Congrats mam.