தேதி: September 24, 2013
டிசைன் துணி
லைனிங் துணி
குண்டூசி
கத்தரிக்கோல்
ஜிப்
நாடா (லேஸ்)
க்ளூ கன்
பீட்ஸ்
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். டிசைன் துணியை நீள்சதுரமாக (30 செ.மீ - 12 செ.மீ) வெட்டிக் கொள்ளவும். அதே அளவிற்கு லைனிங் துணியையும் வெட்டி வைக்கவும்.

டிசைன் துணியுடன் லைனிங் துணியை ஒன்றாகச் சேர்த்து நான்கு ஓரங்களிலும் தைக்கவும்.

தைத்த பின்பு துணியை கீழிருந்து மேலாக முக்கால் பாகம் மடிக்கவும். பின்னர் மேல் பகுதியில் மீதமிருக்கும் கால் பாகத்தை மேலிருந்து கீழாக மடிக்கவும். மடித்த இரண்டு பகுதியும் இணையுமிடத்தில் ஜிப்பை வைத்து சுற்றிலும் இப்படி குண்டூசிகளை குத்தி வைக்கவும்.

ஒரு புறம் மட்டும் குண்டூசியை அகற்றிவிட்டு லைனிங் துணி வெளிப்பக்கம் இருக்குமாறு பிரட்டிக் கொண்டு, மடித்த இரு துணிகளும் இணையும் இடத்தில் ஜிப்பை வைத்து தைக்கவும். அதன்பின் குத்தி வைத்துள்ள குண்டூசிகள் அனைத்தையும் எடுத்துவிட்டு இரண்டு ஓரங்களிலும் தைக்கவும்.

இனி டிசைன் துணி மேலே இருக்கும்படி துணியை பிரட்டிவிட்டு இரண்டு ஓரங்களிலும் நாடா (லேஸ்) வைத்து தைக்கவும். இதேபோல் உங்கள் விருப்பத்திற்கேற்ப க்ளூ வைத்து பீட்ஸை ஒட்டவும். எளிதாகச் செய்யக்கூடிய அழகான கைப்பை தயார். இதன் அளவைச் சற்று குறைத்தால் செல்போன் பவுச் தயார்.

Comments
musi
சுப்பரா இருக்கு கைப்பை. மொபைல் பௌச் - நல்ல ஐடியா.
- இமா க்றிஸ்
Musi
Nalarku..musi. But athula konjam confusea iruku
Kalam pon ponrathu
Musi
Nalarku..musi.
Kalam pon ponrathu
கைப்பை
உங்கள் கைப்பை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்
நன்றி.
முதல் குறிப்பை அழகாக எடிட் செய்து வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
இமா
இமா மேடம்,மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
kutimarana
நன்றி,என்ன உங்க கன்பியுசன்?
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
கவிசந்துரு
உங்க பாரட்டிர்க்கு நன்றி
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Musi
Lining cloth ithula brown colourthana.. Nenga mudhala 4 pakamum thaiyal adikanum nu solirkinga..apd yepd pana.sory kelvi kekrathuku.na ipathan thachu palaguren.athan musi. Sory
Kalam pon ponrathu
Musi
ரொம்ப நல்லாருக்கு
kutimarana
லைனிங் துணி நாகராமல் இருப்பதர்க்கு தான்,நீங்க எந்த பக்கம் வேண்டுமோ தைக்கலாம.ரப்பா 4 பக்கமும் தைக்க வேண்டும்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நிகிலா
மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
nalla idia
nalla ubayogamana seithi nalla iruku
super musi
கைப்பை அபாரம் கிட்சுக்கு கிஃப்டா குடுக்கலாம்
Eat healthy
jeevitha varsa
மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரஸியா
நன்றி;ரஸியா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
hand bag
ரொம்ப நல்லாருக்கு முஸி. வாழ்த்துக்கள்.
''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.
சஹானா
வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
Kaipai
Romba romba nalla irukku.
Iraivanin uthavi miga
Iraivanin uthavi miga sameebatthil ullathu.
முசி மேடம்
ஹாய் முசி மேடம்.. கைப்பை சூப்பரா இருக்கு... நானும் இதேபோல் ட்ரை பண்ணினேன்.. லைட் ப்ளூ & ப்ளாக் கலர்ல.. .மொபைல் பௌச்சாக யூஸ் பண்ணிட்டிருகேன்.. தேங்க் யூ மேடம்.. இன்னும் நிறைய குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்..
-> ரம்யா
ஷாருக்
மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரம்யாசரன்
செய்துப் பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி;ரம்யாசரன்.லைட் ப்ளூ & ப்ளாக் கலர் காமினேசன் அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.