4வயது குழந்தைக்கு வயிறு பசிக்க வீட்டுவைத்தியம் சொல்லுங்கள்

சாப்பிட அடம் பிடிக்குது
என் மகள்l.k.g. படிக்கிறாள்.சோறு சாப்பிட மாட்டேங்கிறாள்.நானும் என்னவரும் எவ்வளவோ அடித்தும்,மிரட்டியும் பார்த்தாச்சு.ஸ்கூலுக்கு குடுக்கும் டிபனையும் சாப்பிட மாட்டுக்கு.டாக்டரிடம் போயும் பலனளிக்கவில்லை.அன்டர் வெய்ட்டாயிட்டாள்.எனவே மிகவும் கவலையாக உள்ளது. வயிறு பசிக்க ஏதாவது வீட்டு வைத்தியம் உள்ளதா.தனியாக நிஸ்வாவில் புலம்புகின்றேன்.ப்ளீஸ் இதுக்கு என்ன பண்ணலாம் என்று சொல்லுங்கள் தோழிஸ்.சீக்கிரம் உதவுங்கள்.
<!--break-->

நகம் கடிக்கும் இனியாவா?? இல்லை அதே பேரில் வேறு யாருமா?

பிள்ளைக்கு வேறு ஏதும் கொடுக்கறீங்களா? பீடியாசுயூர், பூஸ்ட், மைலோ.... இப்படி ஏதும்?? அப்படி ஏதும் கொடுத்தால் அதை நிறுத்தி பாருங்கள். பசிக்கலாம். நல்லா ஓடி விளையாட வைங்க. என் மகனிடம் இது நடந்தது... அவன் நன்றாக பந்து விளையாட துவங்கிய பின் பசி என்று அவனாகவே கேட்கிறான். நேரத்துக்கு தூக்கம் கூட நன்றாக பசிக்க தேவையான ஒன்று தான். பலகாரம் கொடுக்கும் பழக்கத்தை நிறுத்திவிடுங்கள் (இப்போது கொடுத்தீர்களானால்). உணவை மாற்றிப்பாருங்கள். முக்கியமா மிரட்டாதீங்க, அடிக்காதீங்க... குழந்தை உணவை வெறுப்பாக பார்க்கும். அன்பாக ஏதும் விளையாட்டு காட்டி ஊட்டி விடுங்கள். எங்க வீட்டு பிள்ளைகள் எல்லாம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சாப்பிடுவார்கள். ஒரு வாய் உணவு வாங்கினால் தான் அவர்கள் அடுத்த ரவுண்டு போக டிக்கட் தருவேன் என்பார் அம்மா. இப்படி ஏதும் அவர்களை திசை திருப்புங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா அதே இனியாதான்.உங்களுக்கு அரட்டையில் பதில் போட்டிருந்தேனே,பார்க்கவில்லையா. எங்க,இருக்கீங்க,யாழினி,குமரன் நலமா? இப்போதான் உங்க கஷாயம்(பசிக்க) பார்த்தேன் அதை எவ்வளவு கொடுக்கலாம்.எத்தனை நாளுக்கொர்க்க கொடுக்கலாம். அவளுக்கு காம்ப்ளான் கொடுக்கிரேன்.அதையும் இப்ப நைட்தான் கொடுக்கிரேன்.பதிலளித்ததுக்கு மிக்க நன்றி

இஞ்சி கஷாயமா.... அது கொடுக்கலாம் 2 தேக்கரண்டி அளவு கொடுங்க. ஒரு முறை மட்டுமே கொடுங்க. தேன் அதிகம் சேருங்க. வயிறு வலிக்காம இருக்க உதவும்.

அரட்டையில் பதிவு... பார்க்கலயே இனியா :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi iniya.im new here.i hav a 3 yr baby.she also doing lik tht.1/2 glass water la 1 spoon omam and one spoon jiraham pottu nangu kothikka vittu kal glass ah sundiyathum aravaithu marunthu pola baby ku kuduga .nalla serichu pasi edukkum.try panni paruga.oru nalaiku oru thadavai kuduga

hello inia...Better you consult with good child specialist...

Neenga different different dish seinchu kudunga school ku becoz oru sila school la baby proper ah sapadarangala illa ya nu check pana mattanga.....biscuit kudukathinga biscuit sapta pasi adukathu snacks um limit ah kudunga...oru sila baby ku vegtables pidikathu so cutlet,sandwich antha mathir try pani parunga.kandipa pidikum....neenga baby mirratathinga,adikathinga...atha pola romba compel pani food kudukathinga romba compel pani kuduthu baby ku food mela unga melaiyum verupu vanthudum....

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

hello...good comments...

s absolutely

மேலும் சில பதிவுகள்