காரைக்குடி சிக்கன் கறி

தேதி: September 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (23 votes)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - கால் தேக்கரண்டி (தாளிக்க)
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 (அ) மிளகு - 2 தேக்கரண்டி (விரும்பினால்)
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
அரைக்க:
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 4 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
மராத்தி மொக்கு - சிறிது
ஜாதிக்காய் - கால் பாகம்
கறிவேப்பிலை - 8 கொத்து
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி


 

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்).
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்).
சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.
பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார்.

பச்சை மிளகாய் கடைசியாக சேர்த்தால் மிளகு தூள் சேர்க்கத் தேவையில்லை. ஃப்ரெஷாக பொடித்த மிளகு சேர்க்க விரும்பினால் பச்சை மிளகாயை தவிர்த்துவிடலாம். இந்த அளவில் செய்தாலே காரம் தூக்கலாகத் தான் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வருக... வருக... வனி அக்கா. குழம்பு சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குழம்பு நல்லா இருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குழம்பு மிகவும் நன்றாக உள்ளது. சன்டே செய்து பார்கிறேன்.

இந்த வாரம் ரெசிப்பி இது தான், தெரியுது சுவை.கீப் இட் அப்.......

romba romba nalla irrukkkkkuuuuuuu.............

arumaiyaaka irukku mam

maha

Varum pothey asathala oru entryaa.. mmmmmm super vani

Be simple be sample

குழம்பு ரொம்ப நல்லா இருக்கு, but செய்து பார்க்க புரட்டாசி முடியனும், செய்துட்டு மறுபடி சொல்றேன்.

வனி காரைக்குடி சிக்கன் முகப்பில் பார்த்ததுமே நீங்கதான்னு தெரிஞ்சிடுச்சே ;)
சூப்பரா இருக்கு வனி நானும் இதே முறையில் செய்வேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Hai vani akka,today, just now i try this recipe. it's very very tasty.like hotel taste.we ate very well. Thanks a lot ka

God bless us.

-

God bless us.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) என்ன எனக்கு “வருக வருக” சொல்லும் நிலைக்கு ஆயிடுச்சேன்னு தான் யோசிக்கிறேன் :P ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க பிடிச்சுதான்னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்க பேரும் அழகா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) மேடம் சொல்லி கூப்பிட்டா அடுத்த பதிவுக்கு பதில் போட மாட்டேனாக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) மேடம் வர சொல்லி சொன்ன பிறகு நான் எப்படி வராம இருக்குறது... உங்க மேல அம்புட்டு பயமாச்சே எனக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) புரட்டாசிக்கு லீவா வீட்டுல... மெதுவா செய்துட்டே சொல்லுங்க :) நான் வெயிட் பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்க குறிப்புகளை பல நாளா நான் மிஸ் பண்றனே... எப்ப எனக்காக அனுப்ப போறீங்க???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தாங்க... ரோஜாப்பூ... முதல் ஆளா குறிப்பை செய்து சொன்னதுக்காக :) மிக்க நன்றி ரூபி. உங்க எல்லாருக்கும் பிடிச்சதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சன்டே உங்க சிக்கென் கொழம்பு தான். ருசி இன்னும் நாக்குலயே நிக்குது.

நான் தளத்திற்கு புதிது.... சமையலுக்கும் தான்....
மிக நன்றாக இருக்கிறது...

வனி,

போன வாரம் எங்க வீட்ல உங்க காரைக்குடி சிக்கன் கறி தான் செஞ்சோம்... டேஸ்ட் ரொம்பவே நல்லா இருந்தது...

உங்கள் அருமையான குறிப்பிற்க்கு பாராட்டுகள்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்துட்டீங்களா? உங்களுக்கு பிடிச்சதில் மிகுந்த மகிழ்ச்சி பிரேமா. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி காரைக்குடி சிக்கன் சுவை நல்லா இருந்தது :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அட... நான் சொன்னது எனக்கேவா ;) நடக்கட்டும் நடக்கட்டும். நன்றி அருள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அக்கா,

நான் உங்கள் குறிப்பை வைத்து இரு முறை செய்து விட்டேன், ஆனால் உங்கள் குழம்பின் நிறம் வரவில்லை :( அத்ற்கு என்ன‌ செய்வதென்று கூறுங்களேன்.

செம காரசாரமான‌ குழம்பு :) வீட்டில் அனைவரும் ஸ்... ஸ்.. என்று தான் சாப்பிட்டனர்:)

நன்றி!!

அன்புடன்,
ராணி

Super. keep the update