மெகந்தியால் அலர்ஜி

கையில் மெகந்தி போட்டுகிட்டேன் ஒரே அரிப்பு பீளிஸ் எதாவது தீர்வு சொல்லூங்களேன். போட்ட இடம் எல்லாம் வீங்கி போச்சு பா.

யாராவது பதில் போடுவாங்க என்று பார்த்துட்டே இருந்தேன். பதில் தெரிஞ்ச யார் கண்ணுலயும் படவில்லை போல இருக்கு. எனக்கு இப்படி ஆனதில்லை. ரெடிமேட் போட்டீங்களா? வேற ப்ராண்டுக்கு மாறுங்க. முதல்ல சின்னதா முழங்கைல வைச்சு ஒரு நாள் கழிச்சு பாருங்க. ஒன்றும் பண்ணாம இருந்தால் பிறகு பெருசாக வைக்கலாம். எதற்கும்... இனி நீங்களே அரைச்சு வைக்கிறது பாதுகாப்பு. (மிளகாய் அரைச்ச அம்மியாக இல்லாமலிருக்கட்டும்.)

இப்போதைக்கு கையில் வெயில், சோப் படமா பார்த்துக்கங்க. துணி பட்டாலும் சிரமமா இருக்கும். பத்திரம். லாக்டோ காலமைன் வைச்சா இதமாக இருக்கும். கையை தேய்ச்சு கழுவ வேணாம். ரெண்டு மூன்று நாளைக்குள் அடங்கிரும். அதிகமாக இருக்கிற மாதிரி பயமா இருந்தா டாக்டர்ட்ட போய்ருங்க. டாப்லட் கொடுப்பாங்க.

‍- இமா க்றிஸ்

ப்ரண்ட் நீங்க சொன்னது ரொம்ப சரி சோப், வெயில் பட்டால் அரிப்பு ரொம்ப அதிகமாயிடுது. ரெடிமேட் மெகந்தி தான் போட்டேன். இப்ப lobate skin cream வாங்கி போட்டு இருக்கேன். பார்க்கலாம் எப்படி இருக்குனு.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்