பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - அரைக் கிலோ (எலும்பில்லாதது)
மிளகு - 15
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 4 (நடுத்தரமானது)
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
குடை மிளகாய் - ஒன்று (நடுத்தரமானது)
தயிர் - ஒரு கப்
ப்ரஷ் க்ரீம் - 3 மேசைக்கரண்டி
கார்ன்ஸ்டார்ச் - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று (வெள்ளைக் கரு மட்டும்)
கரம் மசாலாத்தூள் - அரைத் தேக்கரண்டி
ஏலப்பொடி - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு, நீரில்லாமல் சற்று உலரவிடவும்.
மிளகினை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டினைத் தோலுரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டினை காம்பு நீக்கின பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை எண்ணெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, எண்ணெய்யை வடித்து பிறகு மையாக அரைத்துக் கொள்ளவும்.
குடைமிளகாயை கழுவி, விதைகளை நீக்கி, ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தயிரினை ஒரு மெல்லியத் துணியில் கட்டித் தொங்கவிட்டு, நீர் எல்லாவற்றையும் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தயிர், ப்ரஷ் க்ரீம், கார்ன்ஸ்டார்ச், முட்டையின் வெள்ளைக்கரு, நறுக்கின குடைமிளகாய் துண்டுகள், மிளகுத் தூள், ஏலப்பொடி, தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து, ஒன்றாய் கலக்கவும்.
பிறகு அதில் கோழித் துண்டங்களைப் போட்டு நன்கு பிரட்டி சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு ஊறவிடவும்.
ஒரு சொருகு கம்பியில் கோழித்துண்டங்கள், குடைமிளகாய் துண்டங்கள் என மாற்றி மாற்றி சொருகி, தந்தூரி அடுப்பில் வைத்து கருகாமல் வேகவிட்டு எடுக்கவும்.
இல்லையெனில், 250 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். அவ்வபோது எடுத்து, வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.


மேலும் சில குறிப்புகள்