ஹேர் பேண்ட்

தேதி: October 1, 2013

5
Average: 4.6 (8 votes)

 

ஸ்பாஞ்ச் ஷீட்
எலாஸ்டிக்
கத்தரிக்கோல்
ஊசி
நூல்

 

ஸ்பாஞ்ச் ஷீட்டில் பெரிய ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு நான்கு வட்டங்களும், அதைவிடச் சிறிய வட்டம் ஒன்றும் வரைந்து அதை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய துண்டுகளில் பெரிய வட்டங்களின் ஒரங்களை மட்டும் படத்தில் உள்ளவாறு பூ வடிவத்திற்கு நறுக்கி இதழ்களைத் தயார் செய்து கொள்ளவும்.
ஊசியில் நூல் கோர்த்து தயார் செய்த இதழ்களில் ஒன்றை எடுத்து நான்காக மடித்து, அதற்கடியில் சிறிய வட்டத் துண்டை வைத்து படத்தில் காட்டியுள்ளபடி தைக்கவும்.
இதேபோல் மீதமுள்ள 3 இதழ்களையும் நான்காக மடித்து அடுத்தடுத்தாக வைத்து தைக்கவும். பூ தயார்.
படத்திலுள்ள பிங்க் நிற பூ 8 இதழ்கள் வைத்து தைத்தது. பூ அடர்த்தியாக இருக்க வேண்டுமெனில் கூடுதலான எண்ணிக்கையில் இதழ்கள் தயார் செய்து தைக்கலாம்.
தேவையான அளவில் எலாஸ்டிக்கை நறுக்கிக் கொண்டு, ஊசியில் நூலைக் கோர்த்து பூவின் அடிப்பகுதியில் விட்டு ஒரு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
எலாஸ்டிக்கின் ஒரு பக்கத்தை பூவின் அடிப்பகுதியில் வைத்து இதேபோல் தைக்கவும்.
பிறகு மற்றொரு பக்கத்தையும் இதேபோல் சேர்த்து தைத்து முடிக்கவும்.
எளிமையாகச் செய்யக்கூடிய அழகிய ஹேர் பேண்ட் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பிடிச்சிருக்கு. ஸ்கூல் க்ராஃப்ட்டுக்காக குறிச்சு வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சூப்பர். எனக்கு அந்த பின்க் கலர் ரொம்ப பிடிச்சிருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Girls ku romba use fulla irukkum.

ஹாய், ப்ரண்ட்ஸ், நான் அறுசுவைக்கு புதுசு. என்னையும் உங்க ப்ரண்டா ஏத்துப்பிங்களா?

Sure welcome