மட்டன் கோலா உருண்டை

தேதி: October 1, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (11 votes)

 

மட்டன் (கொத்தியது) - கால் கிலோ
தேங்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
பொட்டுக்கடலை - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

மட்டனை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
மட்டனுடன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பொட்டுக்கடலை, இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து ஒன்றாக கலந்து மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ கெட்டியாக அரைத்தெடுக்கவும். (மிக்ஸியில் அரைக்கும் போது நீர்த்துவிடுமென நினைத்தால் பொட்டுக்கடலைத் தவிர மற்ற அனைத்தையும் அரைத்துக் கொண்டு, பொட்டுக்கடலையைப் பொடித்து சேர்த்தால் ஈரத்தன்மை சரியாகிவிடும்).
பிறகு அரைத்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்... பாருங்க நான் மிஸ் பண்றேன்னு சொன்னதுமே உங்க குறிப்புக்கு வந்து அசத்துது ;) அருமையா இருக்கு சுவா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோலா சூப்பர் சுவர்ணா....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா & குழுவிற்க்கு நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முதல் பதிவே உங்களுடையது அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோசம் வனி :)
ரொம்ப நாளா அனுப்ப நினைத்து இப்பதான் அனுப்ப முடிந்தது .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உமா மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அசத்தலா இருக்கு..

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

Aahaa .swa uga kurippa. inaikuthaan ithu mathiri seiyanumney theriumkelvi pattathoda sari.supera iruku.. sekiram seithudaraen..

Be simple be sample

மிக்க நன்றி ராஜீ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்படியா ரேவா புரட்டாசி முடிஞ்சதும் செய்து பாருங்க நன்றி :)

இதே முறையில் கேரட்,பீட்ருட்,காரகருணை,வாழைப்பூவிலும் செய்யலாம்
வாழைப்பூவை வேகவைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து மற்ற பொருட்கள் சேர்த்து அரைத்து செய்யனும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று கோலா உருண்டை செய்தேன்.. ரொம்ப நல்லா வந்தது.....

ஸ்வர்ணா,

ரொம்ப நாளாகவே இதை செய்யனும்னு நினைச்சிட்டே இருந்தேன்... இப்ப தான் கண்ணில் பட்டுது, விரைவில் செய்திடுவோம்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்