6 மாதமாக மாதவிடாய் பிரச்சனை

என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ,
என் அம்மாவிற்கு 48 வயதாகிறது அவருக்கு கடந்த 6 மாத காலமாக மாதவிடாய் நிற்காமல் வருகிறது மிகவும் கஷ்ட படுகிறார் நீண்ட நாட்கள் வருவது முழுதாக நின்று போக என்று அறிந்திருக்கிறேன் , மருத்துவரிடம் ஆலோசனை செய்தோம் சில மாத்திரைகள் கொடுத்தார் 1 மாத அலவக மாதவிடாய் இல்லை . பிறகு திரும்ப வர ஆரம்பித்தது மீண்டும் மருத்துவரை அணுகினோம் கரு பையேய் எடுத்து விட்டால் சரி ஆகிவிடும் என்றார் . அதற்க்கான ஏற்பாடுகள் செய்யபட்டது பிறகு அந்த நேரத்தில் மாதவிடாய் நின்றுபோனது ஆதலால் ஏன் தாய் அறுவை சிகிச்சை வேண்டாம் இப்போது மாதவிடாய் இல்லை என்று சொல்லிவிட்டார் , காரணம் அறுவை சிகிச்சி என்றுடன் என் அம்மாவிற்கு மிகவும் பயம் வந்துவிட்டது . தற்போது மீண்டும் இரத்த போக்கு ஆரம்பித்து விட்டது மிகவும் கஷ்டபடுகிறார் , நான் நாட்டு வைத்தியம் , இயற்கை வைத்தியத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் காரணம் உருபுகளை வெட்டி எறிதல் கிடையாது . நாட்கள் எடுத்தாலும் குணமாகிவிடும். ஆதலால் ஏன் அம்மாவிற்கு மாதவிடாய் முழுதாக நின்று போக எதாவது வழி மருந்துகள் , வீட்டு வைத்தியம் ,கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் , என் மனமார்ந்த நன்றிஏய் முன்னதாக தெரிவித்து கொள்கிறேன் .

மேலும் சில பதிவுகள்