ஃபிஷ் பன்

தேதி: October 19, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (11 votes)

மைதா மாவு - 750 கிராம்
பட்டர்/மாஜரின் - 100 கிராம்
ஈஸ்ட் - 2 தேக்கரண்டி
சீனி - 2 தேக்கரண்டி
டின் ஃபிஷ் (பெரியது) - ஒன்று (அ) முள்ளிலாத மீன் - 250 கிராம்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
எலுமிச்சை - பாதி
முட்டை (மஞ்சள் கரு) - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - காரத்திற்கேற்ப
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் ஈஸ்ட்டுடன் சீனி சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் கரைத்து நுரைத்து வரும் வரை 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். டின் ஃபிஷ்ஷில் தண்ணீரை வடித்துவிட்டு மீனை உதிர்த்து வைக்கவும். முள்ளிலாத மீனாக இருந்தால் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன் பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நுரைத்த ஈஸ்ட் கலவையை ஊற்றி கையில் ஒட்டாமல் வரும் வரை நன்றாக பிசைந்து மேலே சிறிது எண்ணெய் தடவி, மூடி சூடான இடத்தில் வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து பார்த்தால் பிசைந்த மாவு இரு மடங்காகி இருக்கும். அதை ஒரே அளவில் 15 உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
வதக்கியவற்றுடன் மீன், உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மசாலாவைத் தயார் செய்து வைக்கவும்.
உருட்டி வைத்துள்ள மாவில் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து தட்டி நடுவில் சிறிது மசாலாவை வைத்து படத்தில் காட்டியவாறு இரு புறமும் மடிக்கவும்.
பிறகு அதன் மேல் பக்கத்தையும் மூடி முக்கோண வடிவில் தயார் செய்து கொள்ளவும்.
மடித்த பகுதி கீழ் புறம் இருக்குமாறு பட்டர் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு மேலே முட்டையின் மஞ்சள் கருவைத் தடவி முற்சூடு செய்த அவனில் வைத்து 250 டிகிரியில் 15 - 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
காலை, மாலை, இரவு என எந்நேரத்திலும் சாப்பிடுவதற்கேற்ற சாஃப்ட் & டேஸ்டி ஃபிஷ் பன் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஆகா... மாலேவில் சுவைத்தது டூனா பன். :) ஆசையாக இருக்கு செய்து சாப்பிட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்குங்க, கண்டிப்பா ட்ரை பண்றேன். அசத்தல் டிஷ்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவிற்கு நன்றி வனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி சசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஃபிஷ் பன், ரொம்ப அருமையா இருக்குங்க, படங்களும் சூப்பர்ங்க..

நட்புடன்
குணா

நன்றிங்க தம்பிங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இது போல்தான் நானும் செய்வேன்,ஆனால் பன் போல் உருண்டை வடிவில் செய்வேன்,இதுவும் நல்லா இருக்கு.

Eat healthy

உமா ரொம்ப நல்ல செய்துருக்கீங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இங்க (ஸ்ரீ லங்கா) கடைகள்ல இந்த ஷேப்லதான் இருக்கும் ரஸி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி சுவர்ணா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லாயிருக்கு,இந்த மெதடிலும் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா. செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Shaa I made 2day veryvery nice

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Shaa I made 2day veryvery nice

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Shaa I made 2day veryvery nice

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Tnk u.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா