கை, கால்களில் உள்ள தோல் கொஞ்சம் சுருங்கி உள்ளது. இது எதனால் என்று தெரியவில்லை, என் கால்கள். கைகளில் முடி இருக்காது. குழந்தை மேனி போல மிகவும் மென்மையாக இருக்கும்.
சுருக்கம் நான் இதை இதுவரை கண்டுக்கொள்ளவில்லை , ஆனால் இப்பொழுது சிலர் என்னை கேட்கிறார்கள், அது என் மனதை சற்று சங்கட படுத்திவிட்டது. அதான் தோழிகள் உங்களிடம் கேட்கிறேன்.
நான் கொஞ்சம் ஒல்லியாக இருப்பேன், நாங்கள் அசைவ உணவு சாப்பிட மாட்டோம், என் அம்மா சொல்கிறார்கள் குண்டான சரி ஆகி விடும் என்று ,
ஏன் எனக்கு அப்படி உள்ளது, இது ஒரு குறை அல்ல, இருந்தாலும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உதவுங்கள் ப்ளிஸ்
Help
இதற்கு என்ன வைத்தியம் செய்யலாம் தெரிந்தவர்கள் கூறவும், உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
தோல்
//அசைவ உணவு சாப்பிட மாட்டோம்// அது பிரச்சினையே இல்லை. //குண்டான சரி ஆகி விடும் என்று// உண்மைதான். ஆனாலும் குண்டாக ட்ரை பண்ணாமல் (இப்போ தோல் பற்றி கமண்ட் அடிக்கிறவங்க அப்போ குண்டாகிட்டீங்க என்று சொல்லிக் கலவரப் படுத்துவாங்க.) ;) கீரைகள், பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு நீர் குடிக்கிறீங்களா?
சுருக்கம் இருக்கு என்கிற நினைப்புல பார்க்கிறப்ப சுருக்கம் அதிகம் இருக்கிறது போலதான் இருக்கும். ஆனாலும்... யோசிக்கிற அளவுக்கு அதிகமாக இருந்தால் உங்க டாக்டரை கன்சல்ட் பண்ணிருங்களேன்.
- இமா க்றிஸ்
இமா அக்கா ரொம்ப நன்றி, அதிக
இமா அக்கா ரொம்ப நன்றி, அதிக சுருக்கம் இல்லை, பக்கத்தில் பார்த்தால் தெரிகிறது. இதற்கு எதாவது ஆயில் , கீரிம் யூஸ் பண்ணலாம். வீட்ல எதும் செய்யலாமா
Mathavanga solratha ninachu
Mathavanga solratha ninachu feel panathinga yellam sariyagum.
enakku en avvaru
enakku en avvaru ullathu,
Iharkku enna treatment pannalam
கைகளில் உள்ள சுருக்கம், காரணம் என்ன, எப்படி போக்குவது?
நம் உடலில் கொலஜென் என்னும் பொருள் தான் சுருக்கம் இல்லாமல் செய்கிறது.
இது நமக்கு பால், பாலாடைககட்டி மற்றும் சற்று பருத்த பருப்பு வகைகளில் கிடைக்கிறது.
உங்கள் உணவில் டபுள் பீன்ஸ், பாதாம் போன்ற உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளுவது அவசியம்.
சுத்தமான தேங்காய் எண்ணை தினமும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி குடித்தால் உங்கள் உணவு செரிமானம் மாறும்.
நீங்கள் சரியாக உணவு உட்கொண்டும் உடல் ஒல்லியாக இருந்தால், உள்ளே செரிமானம் சரி இல்லையென ஆகிறது.
இதை நீக்க இப்படி தேங்காய் எண்ண குடித்து வாருங்கள்.
தோலிற்கு பூச, பால் + எலுமிச்சை சிறிதளவு சேர்த்து பத்து நிமிடம் கழித்து அதில் கொஞ்சம் மஞ்சள் சேர்க்கவும். அதை உடலில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். உடல் முழுவதும் வாரம் இருமுறை எண்ணை தடவி குளித்தல் மிக அவசியம் தோழி.
அன்புடன் உமயம்பிகா
உமயா அக்கா
உமயா அக்கா உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி
நான் நீங்கள் சொன்னதை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நான் தினமும் தேங்காய் எண்ணெய் கை, கால் களில் தடவுகிறேன்.